Sunday, November 11, 2018

இணையம்



ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை  பயன்படுத்தி  கோப்புகள், தகவல்கள் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற்கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது.

இணையத்தின் சில பயன்பாடுகள் 
1.        எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல்
2.        மின்னஞ்சல் சேவை
3.        நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல்
4.        கோப்புகளையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல்
5.        இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடுபடல்
6.        பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல்
7.        விளம்பரங்கள் மற்றும் செய்திகளை வெளியிடல் அல்லது பார்த்தல்.
8.        இணைய வானொலி மற்றும் இணைய தொலைக்காட்சிகளை நடத்துதல் மற்றும் கேட்டல்

வினா
1.        இணையம் (Internet) என்றால் என்ன? அதன் நான்கு பண்புக்கூறுகளை (Features) விளக்குக? PMAIII  2010 (I) 2011
2.        பின்வருவன பற்றி சிறுகுறிப்பு எழுதுக? இணையம். (GIT 2007  II)
3.        விமல் வெளிநாட்டில் இருக்கும் தனது தந்தையுடன் உரையாட இணையத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும்? (GCE O/L 2011 II based)

இணையத்தால் ஏற்படும் எதிர்மறையான விளைவுகள்
1.        இணையத்துக்குடாக நச்சு நிரல்கள் (Virus) கணினிக்குள் பரவுகின்றன
2.        இணைய இணைப்புடன் கூடிய கணினியில் இருந்து தரவுகள் களவாடப்படும் சாத்தியம் அதிகம்.
3.        பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடுவதால் வேலைகள் தாமதம்.
4.        வேறொரு இடத்திலிருந்துகொண்டு தவறான செய்திகளை பரப்பல்
5.        நீண்ட நேரம் கணினியை பயன்படுத்துவதனால் நாரி நோ, கழுத்து உளைவு போன்ற வருத்தங்கள் ஏற்படுகின்றன.

வினா
1.        இணையத்தினால் ஏற்படும் தீமைகள் மூன்று தருக? (GCE O/L 2007 II)
2.        சிரேஸ்ட திணைக்கள தலைவர் ஒருவர் இணைய வழித் தொடர்பாடலில் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. அவருக்கு வலுச்சேர்க்கும் ஆதாரங்கள் இரண்டை குறிப்பிடுக?

இணைய உரிமம்
தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை. குழுநிலை அமைப்பே  காணப்படுகிறது.

மின் மற்றும் மின்னணு பொறியியல் நிறுவனம்(IEEE)
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப நியமங்களை உருவாக்குதல்

இணைய சேவையை பெற்றுக்கொள்வதற்க்கான நிபந்தனைகள்
விரும்பிய இடத்தில் இணைய இணைப்பைப் பெற்றுக்கொள்ள முடியாது.

இணையத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதற்கு அத்தியாவசியமானவை
1.        இணைய சேவை வழங்குனர் (Internet Service Provider-ISP)
எமக்கு இணைய சேவையை வழங்கும் நிறுவனங்களாகும்.

இவை தேசிய மற்றும் உலகளாவிய ரீதியில் இணைய சேவை வழங்குனர்களிடம் இருந்து பெற்ற இணைய இணைப்பின் ஒரு பகுதியை எமக்கு ஒதுக்கவோ பங்கிடவோ செய்வார்கள்.

பிரதேசத்தின் தேவை மற்றும் தொழில்நுட்ப வசதியைப் பொறுத்து இணைய இணைப்பு வேறுபடும்

உதாரணம்: சிறி லங்கா டெலிகாம், டைலாக், மொபிடல், ஏயடேல், மற்றும் எரிசலாட்   

வினா
1.        இணைய சேவை வழங்குனர் என்றால் யார் என்பதை உதாரணத்துடன் விளக்குக?
2.        அலுவலகத்தில் உமது கணினிக்கு இணைய இணைப்பு கிடைப்பதால் ஏற்படும் நன்மைகள் முன்று தருக?

2.        இணைய இணைப்பு (Internet Connection)
a.      சமச்சீரற்ற இலக்க சந்தாதாரர் இணைப்பு (ADSL-Asymmetric Digital Subscriber Line)
                         i.      அதிவேக இணைய வசதி
                       ii.      வேகம் கூடி குறையலாம்.
                      iii.      பதிவேற்றலை விட பதிவிறக்கத்தின் வேகம் அதிகம்
                      iv.      பங்கீட்டு முறையில் வழங்கப்படும் இணைப்பு ஆகும்
                       v.      குரலும் மற்றும் தரவும் ஒரே இணைப்பு கம்பியில்
                      vi.      மோடம் மற்றும் பிரிப்பான் அவசியம்.

b.     கம்பியில்லா அகலப்பட்டை இணைப்பு(Wireless Broadband)
                         i.      அதிவேக இணைய வசதி
                       ii.      வேகம் கூடி குறையலாம்.
                      iii.      சமிக்ஞைகளைப் பயன்படுத்திறது
                      iv.      சமிக்ஞையின் செறிவு குறைந்தால் பதிப்பு
                       v.      பதிவேற்றலை விட பதிவிறக்கத்தின் வேகம் அதிகம்
                      vi.      நடமாடும் இணைப்பு
                     vii.      கைபேசிகளில் பொதுவா பயன்படுத்தப்படுகிறது.

c.      குத்தகை இணைப்பு (Leased Line)
                         i.      விரும்பிய வேகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
                       ii.      வேகம் மாறாது.
                      iii.      பயனாளருக்கு குறிப்பிட்ட இணைப்பு நிரந்தரமானது.

வினா
1.        பின்வருவன பற்றிச் சிறுகுறிப்பு எழுதுக? ADSL
2.        Broadband இணைய இணைப்பு என்றால் என்ன?

3.        இணைய இணைப்பிற்கான ஊடகம்
a.        கம்பி இணைப்பு (Cable connection)
இணைய சேவை வழங்குனர்களுக்கும் பெறுனர்களுக்கும் இடையே கம்பி மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்தப்படும். பொதுவாக இலங்கையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆனது இவ்வகையான இணைப்பு முறையை வழங்குறது. இது தொலைபேசி இணைப்பு கம்பிகளையே பெரும்பாலும் இணைய இணைப்பிற்கும் பயன்படுத்துகிறது.

அனுகூலங்கள்
                         i.      ஒப்பிட்டளவில் உறுதியானது.
                       ii.      நம்பகத்தன்மை நிறைந்தது
                      iii.      பதிவிறக்கம் மற்றும் பதிவேற்றம் சூழலுடன் மாறது.
                      iv.      இணைப்புக்கான பாதுகாப்பு நடைமுறைகள் குறைவு.

பிரதிகூலங்கள்
                         i.      நீண்ட தூரங்களுக்கு பயன்படுத்த முடியாது.
                       ii.      பேரழிவுகளின் போது வெகுவாக பாதிக்கப்படும்.
                      iii.      பராமரிப்பு செலவு மிக அதிகம்
                      iv.      நடமாடும் போது பயன்படுத்த முடியாது.

b.        கம்பியில்லா இணைப்பு (Wireless Connection)
இணைய சேவை வழங்குனர்களுக்கும் பெறுனர்களுக்கும் இடையே சமிக்ஞைகள் மூலம் இணைய இணைப்பு ஏற்படுத்தப்படும். இலங்கையில் டயலாக், எயர்டேல், எரிசலாட் போன்ற கைபேசி இணைப்பு சேவையை வழங்கும் நிறுவனக்கள் இவ்வகையான இணைப்பு முறையை வழங்குறது.

அனுகூலங்கள்
                         i.      நடமாடும் பொழுது பயன்படுத்தலாம்.
                       ii.      பராமரிப்பு செலவு ஒப்பிட்டளவில் குறைவு
                      iii.      அதிக நெகிழ்வுத்தன்மை (இடமாற்றம், இணைத்தல் மற்றும் நீக்கல்) கொண்டது.
                      iv.      மேலதிக ICT உபகரணங்களை இணைப்பது சுலபம்.
                       v.      அடைய முடியா தூரங்களுக்கு இணைப்பை ஏற்படுத்த உகந்தது.
பிரதிகூலங்கள்
                         i.      சமிக்ஞை செறிவுக்கேற்ப இணைப்பு திறன் மாறுபடும்.
                       ii.      இணைப்புக்கான பாதுகாப்பு நடைமுறைகள் அதிகம் தேவை.
                      iii.      காலநிலைகளால் வெகுவாக பாதிக்கப்படும்.
                      iv.      தகவலை இடையிட்டு கேட்ட முடியும்.

c.         ஒளியிழை இணைப்பு (Optical Fiber Connection)
கண்ணாடி இழைகள் உடையாமல் இருக்க பாதுகாப்பு உறைகள் மற்றும் வலிமையூட்டும் கம்பிகள் சுற்றப்பட்டு வலிமையான உறையைக் கொண்டிருக்கும். தகவலானது ஒளிக்கதிராக மாற்றப்பட்டுக் கண்ணாடி இழையில் செலுத்தப்படுகிறது. அவ்வாறு நுழையும் ஒளிக்கதிர் ‘முழு அகத் தேறிப்படைதல்  மூலமாக மறுமுனையைச் சென்றடைகிறது. பொதுவாக இலங்கையில் ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆனது இவ்வகையான இணைப்பு முறையை வழங்குறது.

அனுகூலங்கள்
                         i.      வேகம் கூடியது.
                       ii.      மிககூடிய தூரங்களுக்கு தகவல் பரிமாற்றத்துக்கு மிகவும் ஏற்றது.
                      iii.      முழு அகத் தேறிப்படைவதால் சக்தி இழப்பில்லை
                      iv.      தகவலை இடையிட்டு கேட்ட முடியாது.

பிரதிகூலங்கள்
                         i.      அமைப்புச் செலவு மிக அதிகம்.
                       ii.      ஒற்றைத் திசையில் மட்டுமே தகவல் அனுப்ப முடியும் என்பதால், தகவல் தொடர்புக்கு இரண்டு இழைகள் தேவை.
                      iii.      தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவை
                      iv.      மேலதிக ICT உபகரணங்களை இலகுவாக இணைக்க முடியாது.

வினா
1.        கம்பியில்லா இணைய இணைப்பை அலுவகங்களில் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் இரண்டையும் தீமைகள் இரண்டையும் தருக?
2.        உமது அலுவலகத்தில் 10 x 20 அறையொன்றினுள் கணினிக்கூடம் ஒன்று அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொருத்தமான இணைப்பு முறையை ஆதாரங்களுடன் தருக?

4.        இணைய இணைப்பின் வேகம்
தரவின் அளவானது “bit” ஆல் அளவிடப்படுகிறது. ஒரு செக்கனில் இணைப்பினுடாக இடமாற்றப்படும் bit களின் எண்ணிக்கை அவ் இணைப்பின் வேகம் ஆகும்.

குறியீடு:  bps”
Unit
குறியீடு
x bit
Bytes per seconds
Bps
8
Kilobits per seconds
Kbps
1000
Kilobytes per second
KB/s or KBps
8000
Megabits per second
Mbps
106
Megabytes per second
MB/s or MBps
8x106









இணைய இணைப்பின் வேகமானது துரம் மற்றும் பயன்படுத்தும் கணினிகளின் எண்ணிக்கை என்பவற்றில் தங்கியிருக்கும்

a.     பாதையின் அகலம் (Bandwidth)
அகலப்பட்டை (broadband)
அகலப்பட்டை 256 kbps வேகம் அதற்கு மேல் வழங்கும் ஒரு இணைய பாதை ஆகும்

ஒடுக்கப்பட்டை(narrowband)
ஒடுக்கப்பட்டை 56 kbps வரை வேகம் வரை வழங்கும் ஒரு இணைய பாதை ஆகும்.

வினா
1.        இணைய இணைப்பின் வேகத்தின் அலகு எது?
2.        MHz, MB, மற்றும் Mpbs என்பவற்றை வேறுபடுத்துக?
3.        1 Mpbs ஆனது எத்தனை Kbps ஆக இருக்கும்?
5.        இணைய கணக்கொன்றை பெற்றுக்கொள்ளல்
             i.      தேவை, நோக்கம் மற்றும் பயன்படுத்தும் முறை போன்றவற்றை தீர்மானித்தல்.
           ii.      பதிவிறக்கம் செய்யப்படும் தரவுகளின் மொத்த  அளவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதானால் எமக்கு தேவையான தரவுகளின்  அளவு மற்றும் பயன்படுத்தப்படும் கணினிகளின் எண்ணிக்கை போன்றவற்றை தீர்மானித்தல்
          iii.      எமக்கு விரும்பிய இணைய சேவை வழங்குனரிடமிருந்து இணைய இணைப்பிற்கான கணக்கொன்றை ஆரம்பித்து அதற்க்கான பயனாளர் பெயரையும் கடவுச்சொல்லையும் பெறுதல் வேண்டும்.

உதாரணம்: சிறி லங்கா டெலிகாம் கணக்கு
Light User Account

Entrée
Web Starter
Web Pal
Startup Fee (Rs.)
500.00
500.00
500.00
Monthly Rental (Rs.)
499.00
740.00
990.00
Download Speed
Maximum
Upto 1 Mbps     
Upto 4 Mbps
Upto 4 Mbps
Minimum
Upto 512 Kbps
Upto 1 Mbps     
Upto 1 Mbps     
Upload Speed
Upto 512 Kbps
Upto 512 Kbps
Upto 512 Kbps
Monthly Usage Volume (GB)
1.5GB
5 GB
8 GB
Monthly Additional Free Usage Volume (GB)
1 GB
5 GB
5 GB
Total Monthly Usage (GB)
2.5 GB
10 GB
13 GB
  இவ் உதாரணம் பரீட்சைக்கு முக்கியமில்லை உங்கள் அறிவுக்காக வழங்கப்படுகிறது.

பதிவிறக்கம் (Download) & பதிவேற்றம்(Upload)
பதிவிறக்கம் (Download):
இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு கோப்பு ஒன்றைப் பெற்றுக் கொள்வதை பதிவிறக்கம் எனப்படும். மேலும் இணையத்தில் இருந்து எமது கணனிக்கு தரவுகள் வந்தடையும் வேகமானது பதிவிறக்க  வேகம் (Download speed ) எனப்படும்.

பதிவேற்றம் (Upload):
இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு கோப்பு ஒன்றை அனுப்புவதை பதிவேற்றம் (Upload) எனப்படுகிறது. மேலும் எமது கணனியில் இருந்து இணையத்துக்கு தரவுகளை அனுப்பும் வேகமானது பதிவேற்ற வேகம் (Upload Speed) எனப்படும்.

இவ் வேகமானது பின்வரும் காரணிகளில் தங்கியுள்ளது
Ø  இணைய இணைப்பின் வகை
Ø  சிக்னலின் (Signal) செறிவு (for Dongle)
Ø  கணனியின் வேகம்
Ø  பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை
Ø  ப்ரோக்ராம்கள்
Ø  பலதரப்பட்ட வைரஸ்

வினா
1.        பதிவிறக்கம் (Download) மற்றும் பதிவேற்றத்தை (Upload) வேறுபடுத்துக?
2.        ADSL Braodband இணைய இணைப்பை கருத்தில்கொண்டு பதிவிறக்கம் (Download) மற்றும் பதிவேற்றத்தை (Upload) வேறுபடுத்துக?
3.        அலுவகத்தில் ஒரே இணைய இணைப்பை கொண்ட இரு கணினிகளில் இணையத்தின் வேகம் வெவ்வேறாக உள்ளன. இதற்கான காரணங்களை விளக்குக?

இணையத்துக்கு பயன்படுத்தப்படும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்கள்
1.        கணினிகளை இணைக்கும் வன்பொருட்கள்
a.     வலையமைப்பு இடைமுக அட்டை (Network Interface Card)
இணைய இணைப்பை கொண்ட தரவு வடத்தை (Data Cable) கணினியுடன் இணைப்பதற்கு இவ் அட்டை பயன்படுத்தபடுகிறது. தற்காலக் கணினிகளின் தாய்ப்பலகையின் ஓர் அங்கமாகவே (On-board) இவ்வட்டை அமைந்துள்ளது. இவ்வட்டையில் வடத்தின் முனையில் உள்ள இணைப்பியை இணைப்பதற்குரிய செருகுதுளை இருக்கும். கணினிக்கும் இணையத்துக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்படுகிறது. கணினியிலிருந்து பெறும் தகவலை இடைநிலை நினைவகத்தில் சேமித்து வைத்து, தகவலை இணையப் போக்குவரத்துக்கு உகந்த வடிவமைப்பில் (Format) மாற்றி, வடத்தின் வழியே இணையத்திலுள்ள இலக்குக் கணினிக்கு அனுப்பி வைக்கிறது.

b.     குவியம் (Hub)
இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை இணைப்பதற்கு குவியம்’ (Hub)  பயன்படுத்தப்படுகிறது. கணினியை வடத்தை பயன்படுத்தி குவியத்துடன் (Hub) இணைக்கலாம். இது ஒரு மைய இணைப்பு சாதனமாக பயன்படுத்தப்படுகிறது. தற்காலத்தில் இதன் பாவனை மிகக்குறைந்த அளவிலேயே உள்ளது.  இது வெறும் இணைப்புக் கருவியாக மட்டுமே செயல்படும். பெறுகின்ற தகவல் சமிக்ஞைகளை (Signals) அப்படியே எல்லாக் கணினிகளுக்கும் அனுப்பி வைக்கும். திறன்மிகுப்பதும் (Boosting) மீட்டுருவாக்குவதும் (Re-generation) இல்லை. இதன் இயக்கத்துக்கு மின்சாரம் தேவையில்லை.

c.      தொடர்பி (Switch)
தற்காலத்தில் இரண்டுக்கு மேற்பட்ட கணினிகளை ஒன்றுடன் ஒன்று இணைப்பதற்கு இது பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் பல உரையாடல்கள் சாத்தியம் என்பதால் இணையத்தின் தகவல் போக்குவரத்துக் கையாள் திறன் அதிகரிக்கிறது. தகவலின் வடிவமைப்பு, கணினிகளின் முகவரிகள், ‘மேக்முகவரிகள் ஆகியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவை. எனவே இணையத்தின் இரு கிளைப்பிரிவுகளை இணைக்கவும் தொடர்பியைப் பயன்படுத்தலாம். மேலும் இது ஒரு மாடியில் செயல்படும் இணையத்தை அடுத்த மாடிக்கு விரிவுபடுத்தவும், அடுத்த கட்டடத்தில் செயல்படும் கணினித் தொகுதிகளைப் இணையத்தின் ஒரு பகுதியாக இணைத்து இணையத்தை விரிவாக்கவும் தொடர்பி பயன்படுகிறது.

d.     தரவு வடங்கள்(Data Cable)
பாதுகாப்பு உறையிடப்பட்ட முறுக்கிய இணை கம்பிகளை கொண்ட  நான்கு வடங்களை கொண்டு உருவாக்கப்பட்டு உறுதியான வெளிகவசமிடப்பட்டு தரவு வடங்கள் உருவாக்கப்படுகிறது. தரவுகளை கணினிகளுக்கு இடையே இடமற்ற ஊடகமாக செயல்படும். இரண்டு ICT உபகரணங்களுக்கு இடையே ஒரேயொரு வடம் மட்டுமே பயன்படும். இரு வடங்களை இணைக்கவோ முடிச்சுப்போடவோ முடியாது. வடங்களின் அந்தங்களில் RJ 45 என்ற இணைப்பிகள் காணப்படும். இவை வடங்கள்ளை வலையமைப்பு இடைமுக அட்டை (Network Interface Card) உடனோ அல்லது வேறு எதாவது ICT உபகரணத்துடனோ இணைப்பதற்கு பயன்படுத்தப்படும். இவை தவிர பல்வேறு வகையான தரவு வடங்களும் உண்டு.

2.        இணைய விரிவாக்க வன்பொருள்கள்
a.     வலுவூட்டி (Repeater)
இணையத்தில் பயன்படுத்தப்படும் செப்பு அல்லது ஒளியிழை ஆகிய எவ்வகை வடமாயினும் குறிப்பிட்ட தொலைவுக்கு மட்டுமே தகவலை அனுப்பி வைக்க முடியும். செப்புக் கம்பிகளில் தகவலை ஏந்திச் செல்லும் மின்காந்த அலை செல்லச் செல்லத் தன் வலுவை இழக்கிறது. அதுபோலவே ஒளியிழையில் பயணிக்கும் ஒளித்துகளும் குறிப்பிட்ட தொலைவுக்குப்பின் சக்தியை இழக்கிறது. ஊடகங்களில் பயணிக்கும் குறிகைகள் வலுவிழப்பு (Attenuation) அடைவது தவிர்க்க முடியாதது. குறிப்பிட்ட தூரத்துக்கு அப்பாலுள்ள ஒரு கணினியை இணையத்தில் இணைக்க வேண்டின் ‘வலுவூட்டிகளைப்’ பயன்படுத்தலாம்.மேலும்வடத்தில் பயணிக்கும் தகவலின் தன்மை, தகவலின் வடிவமைப்பு (Format), கணிப்பொறிகளின் முகவரி ஆகியவற்றை அறியும் திறன் வலுவூட்டிகளுக்குக் கிடையாது. தகவலிலுள்ள 0, 1 என்னும் பிட்டுகளை (Bits) மட்டுமே அறியும். வலுவிழந்த குறிகைகளின் திறன்மிகுத்து (Amplifying) அடுத்துள்ள சாதனத்துக்கு அனுப்பி வைக்கும்.

b.     இணைவி (Bridge)
ஒரு வலையமைப்பின் இரண்டு கிளைப்பிரிவுகளை (Segments) இணைக்கப் பயன்படுகிறது. இரு வளாகங்களில் செயல்படும் கணினிகளை ஒரே வலையமைப்பாக இணைக்க இணைவிகளைப் பயன்படுத்தலாம். ஒரு வளாகத்தில் செயல்படும் கணினி இணைவி வழியாக அடுத்த வளாகத்தில் செயல்படும் கணிப்பொறியுடன் தொடர்பு கொள்ளும். இணைவியால் இணைக்கப்படும் கிளைப்பிரிவுகள் இணைப்பின் அடிப்படையில் வெவ்வேறு வலையமைப்புகள் என்றாலும் கருத்தியலாக ஒரே வலையமைப்பாகாத்தான். தகவலின் வடிவமைப்பு, கணினிகளின் முகவரிகள், ‘நிக்’ அட்டைகளின் ‘மேக்’ முகவரிகள் ஆகியவற்றை அறியும் ஆற்றல் பெற்றவை இணைவிகள். ஒரு கிளைப்பிரிவில் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணினியிலிருந்து வரும் தகவல் அடுத்த கிளைப்பிரிவிலுள்ள கணினிக்கு எனில் அத்தகவலை அடுத்த கிளைப்பிரிவுக்கு அனுப்பி வைக்கும். அதே கிளைப்பிரிவிலுள்ள வேறொரு கணினிக்கு எனில் அத்தகவல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது. அதாவது அத்தகவல் அடுத்த கிளைப்பிரிவுக்குச் செல்ல விடாமல் தடுக்கிறது எனக் கொள்ளலாம். பெரும்பாலும் ஒரு வலையமைப்பின் கிளைப்பிரிவுகளை இணைப்பதற்கே இணைவிகள் பயன்படுகின்றன என்ற போதிலும் வெவ்வேறு வலையமைப்புக்களை இணைக்கவும் இணைவியைப் பயன்படுத்த முடியும்.

குறிப்பு:
வலுவூட்டிகளும்(Repeaters) இணைவிகளும் (Bridges) தற்பொழுது பயன்படுத்தப்படுவதில்லை

c.      இணக்கி/மொடம்(Modem)
கணினியானது எண் முறை சமிக்ஞைகளை (Digital Signals) பயன்படுத்துகிறது. தொலைபேசிக் கம்பிகள் தொடர் முறை சமிக்ஞைகளை (Analog Signals) பயன்படுத்துகிறது. எனவே இரண்டு கணினிகளுக்கிடையே தரவுப் பரிமாற்றத்தின் பொது தொலைபேசிக் கம்பிகளை பயன்படுத்தினால் அங்கு இணக்கி / மொடம் (Modem) பயன்படுத்தப்படுகிறது. அதாவது இணக்கியானது எண் முறை சமிக்ஞைகளை (Digital Signals) தொடர் முறை சமிக்ஞைகளாகவும் (Analog Signals) அதேபோன்று தொடர் முறை சமிக்ஞைகளை (Analog Signals) எண் முறை சமிக்ஞைகளாகவும் (Digital Signals) மாற்றும். இதன் பயன்பாடு சேய்மை அணுகல் சேவை (Remote Access Service) என்னும் வசதியுடைய வலையமைப்புகளில் இன்றியமையாதது.

3.        இணையங்களை இணைக்கும் வன்பொருள்கள்
a.     திசைவி (Router)
வெவ்வேறு இணைப்புமுறை (Topology) கொண்ட, முற்றிலும் வெவ்வேறான தன்மை கொண்ட வலையமைப்புக்களை இணைத்துத் தகவல் பரிமாறிக் கொள்ள திசைவி பயன்படுத்தப்படும். அத்துடன் வேறுபட்ட IP முகவரிகளை கொண்ட குறு நில வலையமைப்புக்களை இணைக்க பயன்படும்.  மேலும்  இது தகவல் பொட்டலம் (Data Packet) இலக்கினைச் சென்று சேர, அந்த நேரத்தில் சிறந்த பாதை எதுவெனத் தேர்ந்தெடுத்து அனுப்பும். இது சென்றடைய வேண்டிய முகவரி இல்லாத தரவுப் பொட்டலங்களை (Broadcasing Packets) தன்னுடாக செல்லவிடாது.

b.     நுழைவி (Gateway)
இணையத்தில் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படும் மென்பொருள் ‘நெறிமுறை’ (Protocol) எனப்படுகிறது. கோப்பு, மின்னஞ்சல், வலைப்பக்கம் போன்ற வெவ்வேறு வகைத் தகவல்களின் பரிமாற்றத்துக்கு வெவ்வேறு நெறிமுறைகள் பயன்படுகின்றன. வெவ்வேறு வகையான கட்டுமானம் (Architecture) கொண்ட இணையங்களில் வெவ்வேறு வகையான நெறிமுறைகள் பயன்படுத்தப்படுகின்றன. வெவ்வேறு வகையான கட்டுமானம் கொண்ட இணையங்களை இணைக்கவும், முற்றிலும் வேறுபட்ட நெறிமுறைகளின் அடிப்படையில் செயல்படும் இணையங்களை இணைக்கவும் ‘நுழைவி’ (Gateway) எனப்படும் சிறப்புவகைத் திசைவி பயன்படுகின்றது. குறிப்பிட்ட நெறிமுறையைப் பயன்படுத்தி அனுப்பப்படும் குறிப்பிட்ட வகையான தகவலின் வடிவமைப்பைப் புரிந்து கொண்டு அத்தகவலை வேறு தகவல் வடிமாக மாற்றி, வேறு நெறிமுறையைப் பயன்படுத்தி இலக்குக் கணினிக்கு அனுப்பி வைக்கும் திறன் நுழைவிக்கு உண்டு.

4.        இணைய சேவை வழங்குனர்களுடனான இணைய விரிவாக்க வன்பொருள்கள்
a.        ADSL Router
இணைய சேவை வழங்குனரிடமிருந்து இணைய இணைப்பை பெற பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக ADSL இணைப்பானது தொலைபேசி கம்பி இணைப்புகளுடனேயே ஒரே கம்பியில் வழங்கப்படுகிறது.எனவே முதலில் பிரிப்பான் ஒன்றை பயன்படுத்தி இணைய இணைப்பையும் தொலைபேசி இணைப்பையும் பிரிக்க வேண்டும். இப் பிரிப்பான் சிலவேளைகளில் ADSL Router உடன் அல்லது வேறாக வழங்கப்படும். மேலும் இவ் ADSL Router இனுள் ஒரு இணக்கியும் காணப்படும். ஏனெனில் தொலைபேசி இணைப்பானது தொடர் முறை சமிக்ஞைகளை (Analog Signals) பயன்படுத்துகிறது. அதனை எண் முறை சமிக்ஞைகளாக (Digital Signals) மாற்ற இணக்கி தேவை.

b.        வன்பூட்டு (Dongle)
இது இணைய சேவை வழங்குருடன் எமது கணினியை இணைக்க பயன்படும். பொதுவாக இது USB என்ற துறையினூடாக கணினியுடன் இணைக்கப்படுகிறது. இதில் இணையை இணைப்பை கொண்ட SIM Card ஒன்று பயன்படுத்த வேண்டும். SIM Card கொண்டுள்ள இணைய இணைப்பின் வேகத்தில் இதன் வேகம் தங்கியிருக்கும். இது இணைய சேவை வழங்குருடன் எமது கணினியை இணைக்க கம்பியில்லா இணைப்புமுறையை பயன்படுத்துகிறது. எனவே சமிக்ஞையின் செறிவு இணைய இணைப்பினை பாதிக்கும்.

வினா
1.        பின்வருவனவற்றைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
                   i.      Router (PMA III 2007 (I) (2008))
                 ii.      மோடெம்(Modem) (GIT II 2007)
2.        பின்வருவனவற்றைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக?
                   i.      தொடர்பி (Switch)
                 ii.      வன்பூட்டு (Dongle)

கணினியின் முகவரி

கணினியின் தொழில்பாட்டுக்கு அவசியமானது மின்சாரம்.
 

கணினியொன்று இணையத்துடன் தொடர்பினை ஏற்படுத்த பயன்படுத்தும் முகவரிகள்

சாதாரண முகவரி
விளக்க பெயர்
கணினி முகவரி
விளக்க பெயர்
பண்புகள்
110/6
வீட்டு இலக்கம்
192.168.18.15
IP Address
எவ்வாறு ஒவ்வொரு வீட்டிற்கும் வீடிலக்கம் தனித்துவமானதோ அதேபோன்று ஒவ்வொரு கணினிக்கும் IP Address தனித்துவமானது.
நீதிமன்ற வீதி
வீதியின் பெயர்
255.255.255.0
Subnet Mask
எவ்வாறு குறிப்பட சில வீடுகளுக்கு அவற்றின் அடைவு வீதி பொதுவானதோ அவ்வாறே ஒரே வலையமைப்பில் உள்ள  கணினிகளுக்கு Subnet Mask பொதுவானது.
திருகோணமலை
ஊரின் பெயர்
192.168.18.1
Default Gateway
ஒரு வீட்டினை அடைவதற்கு வீதியின் ஆரம்பம் அல்லது இறுதி வீட்டு இலக்கத்திலிருந்து தேட வேண்டுமோ அவ்வாறே ஒரு வலையமைப்புக்குள் நுழைவதற்கு அவ் வலையமைப்பின் ஆரம்ப அல்லது இறுதி முகவரியை அடைந்து அதிலிருந்து எமக்கு வேண்டிய முகவரியை அடைய வேண்டும். இவ் ஆரம்ப அல்லது இறுதி முகவரி Default Gateway எனப்படும்.
ஸ்ரீ லங்கா
நாட்டின் பெயர்
172.194.37.115
DNS Address
எவ்வாறு வெளிநாட்டிலுள்ள ஒருவர் எங்கள் வீட்டு முகவரியை அடையாளம் காண நாட்டின் பெயர் முக்கியமோ அவ்வாறே இணையத்தில் ஒருவர் ஒரு கணினியில் சேமிக்கப்பட்டுள்ள வலைப்பக்கத்தை அதன் முகவரியை கொண்டு அடையாளம் காண இம் முகவரி அத்தியாவசியமானது.
மேலேயுள்ள முகவரிகளில் ஒன்றாயினும் பிழையாக இருந்தால் அக்கணினியில் இருந்து இணைய இணைப்பை பயன்படுத்த முடியாது.

குறிப்பு:
மேற்கூறப்பட்ட அனைத்து முகவரிகளும் முன்று புள்ளிகளால் வேறுபடுத்தப்பட்ட நான்கு இலக்கங்களை கொண்டவையாக இருக்கும். இதில் ஒவ்வொரு இலக்கமும் 0 க்கும் 255 க்கும் இடைப்பட்ட இலக்கத்தை கொண்டிருக்கும்.

வினா:
IP Address என்றால் என்ன.
வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைத்திருக்கும் ஒவ்வொரு கணினியும் தம்மை மற்றவற்றில் இருந்து வேறுபடுத்திகொள்ள ஒரு இலக்கத்தைக் கொண்டிருக்கும். இவ் இலக்கத்தை கொண்டே ஒவ்வொரு கணினியும் இனங் காணப்படுகின்றது இவ் இலக்கம் (IP Address) ஐபி முகவரி எனப்படுகிறது. இங்கு IP  என்பது  Internet protocol எனபதைக் குறிக்கிறது. IP Address இன் வடிவம்: 192.168.10.18 ஆகும்.

பயிற்சி வினாக்கள்:
1.        DNS Address என்றால் என்ன
2.        IP Address க்கும் DNS Address க்கும் இடையேலான வேறுபாடு யாது?

வலையமைப்புக்களும் அவற்றுக்கு அத்தியாவசியமான முகவரிகளும்.
இல.
வலையமைப்பு வகை
அத்தியாவசியமான முகவரி
01
தனிநபர் கணினி
எந்த முகவரியும் தேவையில்லை
02
குறுநில வலையமைப்பு
IP Address & Subnet Mask
03
ஒன்றுக்கு மேற்பட்ட குறுநில வலையமைப்பு
IP Address, Subnet Mask & Default Gateway
04
இணையம்
IP Address, Subnet Mask, Default Gateway & DNS Address

பயிற்சி வினா
1.        கணினியொன்றை இணையத்துடன் இணைப்பதற்காக பயன்படுத்தும் முகவரிகளை வரிசைப்படுத்தி விளக்குக?
வலைப்பக்கம் (Webpage)
இது இணையத்தில் தகவல்களை பகிர பயன்படுத்தப்படும். தலைப்புச் செய்திகள், உரை, படங்கள் ஆகியவை ஒரே வலைப்பக்கத்தில் — ஒரு பத்திரிகையில் உள்ள பக்கத்தைப் போலவே — ஒலிகளோடும் அசைவூட்டத்தோடும் இடம்பெறுகின்றன.

வலைத்தளம் (Website)
வலைத்தளம் (அல்லது தளம்) என்பது ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பல வலைப்பக்கங்களின் தொகுப்பு ஆகும். வலைப்பக்கங்கள் மிகை இணைப்புகளால் (Hyperlinks) ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன. இவை உரையாகவோ காணோளிகள் அல்லது ஒலிகளாகவோ இருக்கலாம்.

வலையில் உலாவுதல்(Web Surfing)
ஒரு பக்கத்தில் உள்ள இணைப்பை கிளிக் செய்ததும் வேறு பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள். இவ்வாறு இணைப்புகள் மூலம் ஒரு பக்கத்திலிருந்து மற்றொரு பக்கத்திற்கு செல்வது வலையில் உலாவுதல் (web surfing) என்றழைக்கப்படுகிறது.

WWW
World Wide Web (உலக விரி வலை) என்பதன் சுருக்கமே WWW ஆகும். உலகளாவிய இணையத்தில் பரவிக்கிடக்கும் வலைப் பக்கங்களை இணைப்பது இதன் நோக்கமாகும். Tim Berners Lee என்பவர் இதனை கண்டு பிடித்தார்.

வினா: பின்வருவனவற்றைப் பற்றி சிறுகுறிப்பு எழுதுக? World Wide Web -WWW (PMA III 2009 (I) (2010))

உலாவிகள் (Browser)
இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே இணைய உலாவி எனப்படுகிறது.

உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

முகப்பு பக்கம் (Home Page)
ஒரு வலைத் தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (Browser) திறக்கும் போது வரும் முதல் பக்கம் முகப்பு பக்கம் (Home Page) எனப்படுகிறது,

இணைய தள முகவரி (Web Address)
வலைப்பக்கங்களின் முதல் பக்கத்துக்கு அதாவது முகப்பு பக்கத்தை (Home Page) அடைவதற்கான முகவரி ஆகும். இது Uniform Resource Locator (URL) Address எனவும் அழைக்கப்படும். இம் முகவரியை உலாவியில் தட்டச்சுச் செய்து குறப்பிட்ட வலைப்பக்கத்துக்கு செல்லலாம்.

உதாரணம்:
        www.gov.lk, www.pubad.gov.lk, www. Google.lk

தேடற் பொறி (Search Engine)
உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் வலைப்பக்கமே தேடற் பொறி எனப்படுகிறது.

உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

இணையத்தள நுழைவாயில் (Web Portal)
குறிப்பிட்ட ஒரு தொகுதி வலைத்தளங்களை தொகுத்து தருவது இணையத்தள நுழைவாயில் (Web Portal) எனப்படும். இதனை பயன்படுத்தி குறிப்பிட்ட வலைத்தளங்களின் முகவரி தெரியாவிட்டாலும் அவற்றுக்கு செல்லலாம்.

உதாரணம்:
        இலங்கை அரசாங்க இணையதள நுழைவாயில் www.gov.lk ஆகும்.
        இதனை பயன்படுத்தி அரசாங்க நிறுவனங்கள் அனைத்தினதும் வலைப்பக்கங்களுக்கு செல்லலாம்.

பயிற்சி வினாக்கள்
1.        www.pubad.gov.lk பக்கத்துக்கு செல்வதற்கான படிமுறையை தருக.
2.        பாராளு மன்ற உறுப்பினர் ஒருவரின் விலாசத்தினை அறிந்து கொள்வதற்கான படிமுறையை தருக.
3.        சுற்றறிக்கை ஒன்றினை பதிவிறக்கம் செய்வதற்கான படிமுறையை தருக.

No comments:

Post a Comment