Windows OS

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் புதிய இயங்குதளமான Windows 10 இனை அறிமுகம் செய்யும் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.

எதிர் வரும்  ஜனவரி மாதம் 21 ஆம் திகதி  Windows 10 இனை அறிமுகம் செய்யப்படவுள்ளதாக மைக்ரோசொப்ட் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அதிலுள்ள சில வசதிகள்

Start Menu மீண்டும் இணைப்பு
விண்டோஸ் 95 இல் ஆரம்பமாகி விண்டோஸ்7 வரை காணப்பட்ட Start Menu ஆனது இயங்குதளத்தின் திறனை அதிகரிக்கும் பொருட்டு விண்டோஸ் 8 இல் நீக்கப்பட்டது. இருப்பினும் வாடிக்கையாளரின் வேண்டுக்ளுக்கிணங்க மீண்டும் விண்டோஸ் 8.1 இல் சேர்க்கப்பட்டது. இது விண்டோஸ் 10 இல் மேலும் மெருகூட்டப்பட்டுள்ளது.

சாளரத்தின் கிழ்மூலையில் காணப்படும் "Start" பொத்தானில் அழுத்தும் பொழுது இரு பலகங்கள் திறக்கும். அதில் வலப்பக்கமாகவுள்ள பலகத்தில் வழமைபோன்று அடிக்கடி மற்றும் அண்மையில் திறக்கப்பட்ட மென்பொருகள் மற்றும்  செயலோளுங்க்குகள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இது "Start Menu" என அழைக்கப்படும்.

அதனை தொடர்ந்து வலப்பக்கமாக காணப்படும் பலகத்தில் சதுர மற்றும் நீள்சதுர கட்டங்களாக இணைய இணைப்புடன் கூடிய வகையில் பயன்படுத்தப்படும் பிரயோக மென்பொருட்கள் ("Live Titles") காணப்படும். இப் பலகமானது "Start Screen" என அழைக்கப்படும்.

Start Button னை அழுத்தும் பொழுது
  • விண்டோஸ் 95 இல் இருந்து விண்டோஸ் 7 வரை "Start Menu" தோன்றும்.
  • விண்டோஸ் 8 இல் இல்லை
  • விண்டோஸ் 8.1 இல் "Start Menu" தோன்றும்.
  • விண்டோஸ் 10 இல் இரண்டும் தோன்றும்.

Cortana on Desktop (குரல் வழி இயங்குதளம் கையாளல்)
மிகவும் சோம்பலாக இருக்கும்பொழுது கணினியை குரல் வழி முறையில் (Microsoft’s voice-controlled digital assistant Cortana) கையாள்வதற்கு Cortana எனும் புதிய வசதி இணைக்கப்பட்டுள்ளது.

கணினியை தொடாமல் இதன் மூலம்சேமிக்கப்பட்டுள்ள கோப்புக்களை பார்வையிட முடியும். படங்களை தேடவோ திகதி முறையில் ஒழுங்குபடுத்தவோ முடியும்.

மேலும் விரிதாளில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது மின்னஞ்சல் அனுப்ப முடியும்.

No comments:

Post a Comment