நிகழ்த்துகை/அளிக்கை
தேவைக்கேற்ப பல்வேறு
கருவிகளை பயன்படுத்தி பார்வையாளருக்கு போதிய விளக்கத்தை அளிப்பதற்கு நிகழ்த்துனர்
(Presenter) பயன்படுத்தும் ஒரு முறையே அளிக்கைகள் (Presentation)எனப்படும்.
மின்னணு
அளிக்கைகள்(Electronic Presentation)
இலத்திரனியல்
உபகரணங்களை பயன்படுத்தி வழங்கப்படும் நிகழ்த்துகைகள் ஆகும்.
இலத்திரனியல்
கருவிகள்
1.
காணொளிப்பதிவு கருவிகள் (Video cameras)
2.
இலக்கமுறை புகைப்படக் கருவிகள் ;(Digital Still Cameras)
3.
ஒலிப்பதிவுக் கருவிகள் (Sound Recorders)
4.
இறுவட்டுக்கள்(Compact Discs)
5.
இலக்கமுறைப் பல்திறவாற்றல் வட்டுக்கள் (Digital Versatile Discs)
6.
மின்னணுத்தரவு நாடாக்கள் (Electronic tapes)
7.
பல்லுடக ஒளிப்படக்காட்டி/எறிவைகள் (Multimedia Projector)
8. கணினி (Computer)
மின்னணு
அளிக்கையை தயாரிக்கும் பொழுது கவனிக்க வேண்டியவை
1.
பார்வையாளர்கள் இலகுவில் புரிந்துகொள்ளக்கூடிய விதத்தில்
தரவுகளை பயன்படித்தல் (மிகப்பெரிய அட்டவணை, பாரிய பந்திகளை தவிர்த்தல்)
2.
பார்வையாளர்கள் கிரகிக்கச் செய்யக்கூடிய உத்திகளை
பயன்படுத்தல் (அசைவூட்டங்களை பயன்படுத்தல்)
3.
எடுத்துரைக்க விரும்பும் கருத்து அளிக்கையில் சரியாக இடம்பெற்றுள்ளதா
என்பதை உறுதிப்படுத்தல்
4.
கருத்துக்க்களை உறுதிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்பட்டுள்ள
விபரம், உருவச்சட்டங்களின் பொருத்தப்பாடு பற்றி தெளிவுறல்
5.
பொருத்தமான எழுத்துருக்களின் அளவை (Font Size) தெரிவுசெய்தல்.
நிகழ்த்துகை
மென்பொருள் (Presentation Software)
ஒரு குறித்த தலைப்பு
அல்லது நிகழ்ச்சி தொடர்பாகத் தொகுக்கப்படத்தக்க விடயங்களை ஒழுங்குமுறையாக
ஏனையோருக்கு எடுத்துரைப்பதற்கு உதவும் பல்லுடக மென்பொருள் (Multimedia) வகையாகும்.
உதராணமாக
மென்பொருள் உற்பத்திசெய்யும்
நிறுவனம்
1.
Microsoft PowerPoint Microsoft Corporation.
2.
Open Office.org Impress
Sun Microsystems.
நிகழ்த்துகை/அளிக்கை
மென்பொருட்களின் பொது இயல்புகள்
1.
நிகழ்துனர்க்கும் எடுத்துரைப்பவர்ககளுக்குமிடையேயான
ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
2.
நிகழ்துனர்க்கும் கேட்பவர்ககளுக்குமிடையேயான ஒத்துழைப்பை
மேம்படுத்துகிறது.
3.
மிகவும் வலிமையான தொடர்பாடலுக்கு வழிவகுக்கிறது
4.
எடுத்துரைப்பவருக்கு குறைந்த அளவு சிரமத்துடன் கூடிய அளவு
விடையங்களை விளக்க இடமளிக்கிறது.
5.
தகவல்களை எளிதாகவும் சீராகவும் ஒழுங்கமைப்பதற்கு வாய்ப்பை
வழங்குகிறது.
6.
தேவைக்கேற்ப காட்சிச்சட்டத் தளக்கோலங்களைத் (Slide Layouts) தெரிந்தெடுப்பதற்கு இடமளிக்கிறது.
7.
உயிர்ப்பான நிகழ்த்துகையை தயாரிப்பதற்கும்
எடுத்துரைப்பதற்கும் வாய்ப்பை அளிக்கிறது.
8.
ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட வடிவமைப்புச் காட்சி சட்ட
அச்சை (Design Template) வழங்குகிறது.
9.
சலிப்பின்றி கருத்துக்களை எடுத்துரைப்பதற்குப் பல்லுடகத்
தொடர்பை உருவாக்குகிறது.
10.
விடயப்பொருள் யாதாக இருந்தாலும் அதற்க்கு தேவையான பின்னணியை
அமைக்கிறது
11.
நிகழ்த்துனரின் கைமுறைத் திறனை மேம்படுத்துவதற்கு
வழிவகுக்கிறது.
எறிவைகள்; (Projectors)
1.
பல்லுடக எறிவை (Multimedia Projector)
2.
காட்சிச் சட்ட எறிவை (Slide projector)
3.
மேந்தலை எறிவை (Overhead
projector)
மின்னணு நிகழ்த்துகையின் காட்சிச் சட்ட பின்னணி
ஒருவர் தமது நிகழ்த்துகைக்காக தேர்ந்தெடுக்கும் பின்னணி எடுத்துரைக்கப்படும் விடயத்துக்குரிய
சூழலுக்கும் தேர்ந்தெடுத்த எடுத்துரைத்தல் முறைக்கும் பொருத்தமாக இருத்தல்
வேண்டும்.
நிகழ்த்துகையின்
பின்னணியின் கவனம் பக்க அமைப்பில் (Page Setup) ஆரம்பிக்கும் அதேவேளை அதற்குப் பொருத்தமான நிறங்கள், எழுத்து
வகைகள், படங்கள், ஆகியவற்றையும் அவற்றின் அளவையும் விசேட விடயங்களாக
குறிப்பிடலாம்.
அளவிற்கு அதிகமான
மேம்பட்ட பின்னணியின் சிக்கனத்தன்மை அல்லது எளிமை காரணமாக அதன் பலன்தருதிறன்
குறையலாம்.
நிகழ்த்துகைப்
பின்னணியை அமைப்பதன் அடிப்படை எதிர்பார்ப்பு கேட்ப்போருக்கு உகந்த காட்சியை
அமைத்தலாகும்.
எம். எஸ். பவர்போயிண்ட்
2016 (MS PowerPoint 2016) மென்பொருள் கொண்டுள்ள பண்புக்கூறுகள்
அல்லது வசதிகள்
1.
அளிக்கையொன்றில் எழுத்துருக்களின் அளவு, வகை, மொழி, நிறம், மற்றும் நேராக்கள்
போன்றவற்றை விரும்பியவாறு மாற்றலாம்.
2.
Find and Replace ஐ பயன்படுத்தி அளிக்கையின்
பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரே சொல்லில் ஏற்ப்பட்ட பிழைகளை இலகுவாக நீக்கலாம்.
3.
படங்கள், அட்டவணைகள், உருவங்கள், வரைபுகள், சமன்பாடுகள் மற்றும் குறியீடுகளை
உள்ளீடு செய்யலாம்.
4.
ஒன்லைன் (Online) காணொளிகள் மற்றும் புகைப்படங்களை உள்ளிடு செய்யலாம்.
5.
அசைவூட்டங்களை பயன்படுத்தி வரைபுகள், படங்கள், மற்றும் வடிவங்கள் போன்றவற்றை
மற்றவர்களால் கவரக்கூடிய வகையில் உருவாக்கலாம்.
6.
அளிக்கைகளை Online இல் பகிரலாம்.
7.
இலக்கண மற்றும் சொல்பிழை நீக்கியை பயன்படுத்தி அளிக்கையில் ஏற்படும் இலக்கண
மற்றும் சொல்பிழைகளை நீக்கலாம்.
8.
சொல் களஞ்சியங்களை பயன்படுத்தி அளிக்கையில் உள்ள தெரியாத சொல்லொன்றுக்கு ஒத்த
மற்றும் எதிர்கருத்துள்ள சொற்களை அறியலாம்.
9.
Header & Footer மற்றும் Footnote & Endnote என்பவற்றை பயன்படுத்தி குறிப்புரைகளை வழங்கலாம்.
10.
Restrict Editing ஐ பயன்படுத்தி அளிக்கையில்
புதிய வடிவமைப்பு மாற்றத்தை ஏற்ப்படுத்துதலை தடுக்கலாம்.
11.
மிகை இணைப்பு(Hyperlink) வசதியை பயன்படுத்தி அளிக்கைக்கு படங்கள், வலைப்பக்கங்கள்,
காணோளிகளை இணைப்பதன் மூலம் வலுச்சேர்க்கலாம்.
மேலும் அளிக்கையின் அளவு (Size) இதனால் குறையும்.
12.
நடவடிக்கைகள் (Actions) என்ற வசதியை பயன்படுத்தி சுட்டியின் பொத்தான்களையும்
சுட்டிக்குறிகளையும் கட்டுப்படுத்தி பல கவர்ச்சிகரமான அளிக்கையை உருவாக்க
முடியும்.
13.
படவில்லைகளை விரும்பியவாறு ஒழுங்கமைத்து ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது பல என
சிர்ப்படுத்தி அச்சுப்பிரதி எடுக்கலாம்.
14.
எந்த வகையான நிறத்திலுள்ள அளிக்கையையும் , அதே நிறத்தில் அல்லது கறுப்பு
வெள்ளையாக மாற்றியமைத்து அச்சுப்பிரதி எடுக்கலாம்.
15.
அளிக்கையை காணொளியாக அல்லது கையடக்க ஆவணமாக உருவாக்கலாம்.
16.
கணினித்திரையில் எமது செயல்பாடுகள், ஒலிகள், மற்றும் சுட்டிக்குறி அசைவுகளை
பதிவுசெய்து அதனை அளிக்கையில் பயன்படுத்தலாம்.
No comments:
Post a Comment