Saturday, November 17, 2018

எம். எஸ். அக்சஸ் 2013 (MS Access 2013) பகுதி 3


வழிகாட்டி பலகம் /வழிசெல்லுதல் (“Navigation Pane”)
இது எம். எஸ். அக்சஸ் தரவுத்தள உருவாக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் அட்டவணைகள் (Tables), விண்ணப்பங்கள் (Forms), வினவல்கள் (Queries), அறிக்கைக்கள் (Reports) போன்ற அனைத்து பொருட்களையும் (Objects) கொண்டிருக்கும். மேலும் ஒரே வகையான பொருட்கள் ஒன்றாக குழுவாக்கப்பட்டிருக்கும். இவற்றின் பெயர்களில் இரண்டுமுறை அழுத்தும் பொழுது அவை திறக்கும்.
குறிப்பு:
வழிகாட்டி பலகம் /வழிசெல்லுதல் (“Navigation Pane”) னை மறைப்பதற்கு இதன் வலப்பக்க மேல்மூலையில் இடம்நோக்கிய சோடியான அம்புக்குறியில் அழுத்த வேண்டும். அதே போன்று தெரிய செய்வதற்கு இதன் இடதுபக்க மேல்மூலையில் வலம்நோக்கிய சோடியான அம்புக்குறியில் அழுத்த வேண்டும்.
வழிகாட்டிப்பலகத்தில் பொருட்களை வடிகட்டல்.
அட்டவணையில் உருவாக்கப்படும் அனைத்து பொருட்களும் (All Objects) இந்த வழிகாட்டி பலகத்தில் காணப்படும். ஒரு மிகப்பெரிய தரவுத்தளத்தில் நிறைய பொருட்களை உருவாக்கும் பொழுது தேவையான ஒரு பொருளை இனங்காண்பது கடினம். அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் பொருட்களை வடிகட்ட (Filter) வேண்டியேற்படலாம்.

வழிகாட்டிப்பலகத்தில் அட்டவணைகளை மட்டும் தோன்றச் செய்தல்.
1.        வழிகாட்டி பலகத்தின் தலையங்கத்தின் வலப்பக்கமாக மிகச்சிறிய கிழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்துக.
2.        கிழ்நோக்கி வடிகட்டல் வகைகளை கொண்ட பட்டியல் ஒன்று தோன்றும்.
3.        பட்டியலில் பொருட்களின் வகை (Object Type) என்பதை தெரிவுசெய்க. வழிகாட்டிப்பலகத்தில் தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள பொருட்கள் அனைத்தும் அவற்றின் வகைகளை தலையங்கங்களாக கொண்ட குழுக்களாக வகைப்படுத்தப் பட்டிருக்கும்.
4.        மீண்டும் பட்டியலை தோற்றுவித்து குழுவால் வடிகட்டு (Filter by Group) என்பதன் கிழுள்ள அட்டவணை என்பதை தெரிவுசெய்க.
5.        ஏனைய அனைத்துப்பொருட்களும் மறைந்து அட்டவணை என்ற தலையங்கத்துக்கு கிழ் அனைத்து அட்டவணைகளும் தோன்றும்.

அட்டவணையோன்றுக்கு மறுபெயரிடல்
1.        வழிகாட்டி பலகத்துக்கு சென்று அட்டவணைகள் குழுவில் பெயர் மாற்ற வேண்டிய அட்டவணையை தெரிவு செய்க.
2.        தெரிவு செய்யப்பட்ட அட்டவணையின் மேல் இடஞ்சுட்டியை வைத்து சுட்டியின் வலப்பக்க பொத்தானை அழுத்துக.
3.        புதிய பட்டியல் ஒன்று தோன்றும். அதில் மறுபெயர் என்பதை தெரிவு  செய்க.
4.        அட்டவணைக்கான புதிய பெயரினை பதிவு செய்து உள்வழிச் சாவியை அழுத்துக.
5.        அட்டவணைக்கு புதிய பெயர் மாற்றமடைந்திருக்கும்.

அட்டவணையோறின் புலமொன்றுக்கு மறுபெயரிடல்
1.        வழிகாட்டி பலகத்துக்கு சென்று அட்டவணைகள் குழுவில் பெயர் மாற்ற வேண்டிய புலத்தை கொண்டுள்ள அட்டவணையை விரைவாக இரண்டுமுறை அழுத்துவதன் மூலம் திறக்க. இயல்புநிலையில் அட்டவணையானது தரவுத்தாள் தோற்றத்தில் (Datasheet View) திறக்கும்.
2.        பெயர்மாற்ற வேண்டிய புலத்தின் தலையங்கத்தின் மேல் இடஞ்சுட்டியை வைத்து சுட்டியின் வலப்பக்க பொத்தானை அழுத்துக.
3.        புதிய பட்டியல் ஒன்று தோன்றும். அதில் புலத்தின் மறுபெயர் (Rename Field) என்பதை தெரிவு  செய்க.
4.        புலத்திற்கான புதிய பெயரினை பதிவு செய்து உள்வழிச் சாவியை அழுத்துக.
5.        புலத்துக்கு புதிய பெயர் மாற்றமடைந்திருக்கும்.

குறிப்பு:
அட்டவணைகள் மற்றும் புலங்களுகிடையில் தொடர்புகள், நிபந்தனைகள் மற்றும் உறவுமுறைகள் ஏற்ப்படுத்தப்படுவதனால் திரும்பத்திரும்ப பெயர் மாற்றுவது விரும்பத்தக்கதொன்றல்ல.

ஆவண தாவல் பட்டி (Document Tab Bar)
இது நாடா (Ribbon) க்கு கிழே காணப்படும். வழிகாட்டி பலகம் /வழிசெல்லுதல் (“Navigation Pane”) மேல்பகுதியை தொடர்ந்து வலப்பக்கமாக அமைந்திருக்கும். திறக்கப்பட்டிருக்கும் அனைத்து பொருட்களினதும் பெயர்கள் இங்கு காணப்படும். பெயர்களில் அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட பொருளின் உள்ளடக்கத்தை காணலாம். திறந்திருக்கும் பொருட்களை மூடுவதற்கு குறித்த பொருளின் பெயரினை தெரிவு செய்து தாவலின் வலப்பக்க இறுதியில் காணப்படும் “X குறியீட்டில் அழுத்தவும்.

நிரை வழிகாட்டிப் பட்டி (Record Navigation Bar)
திறந்துள்ள பொருட்களில் நிரை வழிகாட்டிப் பட்டியின் (Record Navigation Bar) தேவைப்பாடு உள்ள பொருட்களுக்கு பொருளின் இடதுபக்க கிழ்மூலையில் வழிகாட்டி பலகத்தின் (“Navigation Pane”)  தொடர்ந்து வலப்பக்கமாக அமைந்திருக்கும். இது வலப்பக்க நிரைகள் மற்றும் இடப்பக்க நிரைகள் என ஒவ்வொன்றாக தெரிவு செய்யக்கூடியதாக கறுத்த முக்கோண வடிவ வலம் நோக்கிய குறியீடு ஒன்றும் இடம் நோக்கிய குறியீடு ஒன்றும் காணப்படும்.

மேலும் இது முதலாவது நிரையை விரைவாக அடையக்கூடியதாக இடம் நோக்கிய கறுத்த முக்கோண வடிவத்தில் இடப்பக்கமாக நிலைக்குத்தான கோட்டுடன் கூடிய குறியீடும் கடைசி நிரையை விரைவாக அடையக்கூடியதாக வலம் நோக்கிய கறுத்த முக்கோண வடிவத்தில் வலப்பக்கமாக நிலைக்குத்தான கோட்டுடன் கூடிய குறியீடும் காணப்படும்.

குறித்த நிரைக்கு நேரடியாக செல்லவிரும்பின் அந்த நிரையின் இலக்கத்தை இரண்டு கறுத்த முக்கோணங்களுக்கு இடையில் உள்ள உரைப்பெட்டியில் பதிவு செய்வதன் மூலம் செல்லலாம்.

நிரை தேடல் பெட்டி (Record Search Box)
தற்பொழுது திறக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் எதாவது ஒரு தரவை தேடுவதற்கு பயன்படுத்தப்படும். Search என குறிப்பிடப்பட்டுள்ள உரைப்பெட்டியில் தேடவேண்டியை தரவினை பதிவுசெய்யும் பொழுது அது இருப்பின் உடனடியாக காண்பிக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட தரவுகள் இருப்பின் உள்வழிச் சாவியை (Enter Key) ஐ அழுத்தும் பொழுது அடுத்தடுத்த தேடலை தரும்.

தொடரும்

No comments:

Post a Comment