தோற்றங்கள் (Views)
முகப்பு தாவலானது (Home Tab) தெரிவு
செய்யப்படும் பொருட்களுக்கு (Object) ஏற்ப பல்வேறு
தோற்றங்களை (Views) கொண்டுள்ளது. இருப்பினும் வடிவமைப்பு
தோற்றமானது எல்லா பொருட்களிலும் காணப்படும்.
1.
அட்டவணைகள்(Tables)
இரண்டு தோற்றங்களிலும் அட்டவணையை
உருவாக்க முடியும்.
தரவுத்தாள் தோற்றம்
(Datasheet
View):
F அட்டவணையின்
உள்ளடக்கங்களைக்(Contents) காட்டும்.
F புலங்கள் (Fields) இடமிருந்து வலமாக
வரிசைப்படுத்தப்படிருக்கும்.
F ஏற்ப்படுத்தப்படும்
மாற்றங்கள் உடனடியாக அட்டவணையின் கட்டமைப்பை மாற்றும்.
வடிவமைப்புத் தோற்றம்(Design View):
F அட்டவணையின் அமைப்பை (Structure) காட்டும்.
F புலங்கள் (Fields) மேலிருந்து
கிழாக வரிசைப்படுத்தப்படிருக்கும்.
F ஏற்ப்படுத்தப்படும்
மாற்றங்கள் உடனடியாக அட்டவணையின் கட்டமைப்பை மாற்றாது. சேமிக்கும் பொழுது மாற்றங்கள்
மேம்படுத்தப்படும்.
2.
விண்ணப்பங்கள் (Forms)
தளவமைப்புக்
தோற்றம் (Layout View):
F படிவத்தை வடிவமைக்க
பயன்படும்.
F தரவினை பார்க்க முடியும்.
F தரவுடன் ஒப்பிட்டு படிவம்,
பொத்தான்கள் மற்றும் கருவிகளின் நிலை நீள அகலங்களை வடிவமைக்க பயன்படும்.
F மேற்குறிப்பு(Header) மற்றும் கிழ்க்குறிப்பு (Footder) தோன்றாது.
வடிவமைப்புக்
தோற்றம்(Design View):
F இது படிவத்தை மிகத் துல்லியமாக
வடிவமைக்க பயன்படுத்தப்படும்.
F தரவினை பார்க்க முடியாது.
F படிவம் எவ்வாறு
வடிவமைக்கபட்டுள்ளது என்ற வரைபடத்தை (Blueprint) காட்டும்.
F மேற்குறிப்பு(Header) மற்றும் கிழ்க்குறிப்பு (Footder) என்பவற்றில் வடிவமைப்புக்களை
செய்யலாம்.
படிவ தோற்றம் (Form View):
F இத் தோற்றத்திலேயே
படிவமானது தரவுத்தளத்தில் பயன்படுத்தப்படும்.
F வடிவமைப்புக்களை
மேற்கொள்ள முடியாது
F மேற்குறிப்பு(Header) மற்றும் கிழ்க்குறிப்பு (Footder) தோன்றாது.
F தரவினை பார்க்க முடியும்.
F இத் தோற்றம் அட்டவணையில் தரவினை
சேர்த்தல், நீக்கல், மற்றும் மேம்படுத்தல் செய்கைகளுக்கு பயன்படும்.
3.
அறிக்கைகள் (Reports)
தளவமைப்புக்
தோற்றம் (Layout
View):
F அச்சுப்பிரதி போன்ற
தோற்றம்
F தரவினை பார்க்க முடியும்.
F தரவுடன் ஒப்பிட்டு படிவம்,
பொத்தான்கள் மற்றும் கருவிகளின் நிலை நீள அகலங்களை வடிவமைக்க பயன்படும்.
அறிக்கைக் தோற்றம்(Report View):
F தளவமைப்பு தோற்றத்தை
போன்றது.
F வடிவமைப்புக்களை
மேற்கொள்ள முடியாது
F தரவினை பார்க்க முடியும்.
F தரவுடன்சேர்த்து
அறிக்கையை பிரதிபண்ண முடியும்.
F இயல்புநிலைத் தோற்றம் (Default View)
அச்சு
முன்னோட்டம்(Print
Preview):
F பக்க ஓரம், அளவு, அமைவு, போன்றவற்றை
மாற்றியமைக்கலாம்.
F முழுமையாகவோ அல்லது தரவு
தனியாகவோ அச்சுப்பிரதி எடுக்கலாம்.
F பக்கம் பக்கமாக
பிரித்துக்காட்டும்.
F அறிக்கையை ஏற்றுமதி
செய்யலாம்.
வடிவமைப்புக் தோற்றம்
(Design
View):
F தரவினை பார்க்க முடியாது.
F மேற்குறிப்பு(Header) மற்றும் கிழ்க்குறிப்பு (Footder) என்பவற்றில் வடிவமைப்புக்களை
செய்யலாம்.
F புலன்களை (Fields) இலகுவாக சேர்க்கலாம்,
நீக்கலாம் மற்றும் இடமாற்றலாம்.
4.
வினவல்கள் (Queries)
தரவுத்தாள் தோற்றம்(Datasheet View):
F தரவினை பார்க்க முடியும்
அனால் வினவலின் கட்டமைப்பை பார்க்க முடியாது.
வடிவமைப்புக் தோற்றம்
(Design
View):
F இது வரைகலை பயனர் இடைமுகம்
(Graphical User Interface-GUI) முறையில் வினவல்களை
அமைக்க பயன்படும்.
F தரவினை பார்க்க முடியாது.
SQL View:
F இது கட்டளைக்கோட்டு
இடைமுகம் (Command Line Interface - CLI) முறையில் வினவல்களை அமைக்க பயன்படும்.
F தரவினை பார்க்க முடியாது.
தரவு வகை (Data Type)
இது அட்டவணையோன்றின்
குறிப்பிட்ட ஒரு புலத்தில் சேமிக்க வேண்டிய தரவின் வகையை தெரிவிக்கும்.
தரவின் வகை(Data Type)
|
விளக்கம் (Description)
|
உதாரணம்
|
குறும்பனுவல்(Short Text)
|
எழுத்துக்கள்,
இலக்கங்கள், குறியீடுகள் மற்றும் சின்னங்கள்
ஆகக்கூடியது 255 எழுத்துக்கள்
|
கலை, (416)-2817-913, r, ü, +94777113481,
721460215V
|
நெடும்பனுவல் (Long Text)
|
வடிவமைப்பற்ற பந்திகள் அதாவது நீண்ட விளக்கங்கள், கடிதங்கள், குறு ஆவணம்,
மற்றும் ஆணைகள்.
ஆகக்கூடியது 65,536 எழுத்துக்கள்
|
நீங்கள் குறிப்பிடுவதை
நிரூபிக்க உதவும் வலுவான வழியை வீடியோ வழங்குகிறது. ஆன்லைன் வீடியோவைக் கிளிக்
செய்யும்போது, நீங்கள் சேர்க்க விரும்பும் வீடியோவிற்கான
உட்பொதிக்கப்பட்ட குறியீட்டில் ஒட்டலாம். உங்கள் ஆவணத்தில் சிறப்பாகப்
பொருந்தும் வீடியோவை ஆன்லைனில் தேடுவதற்கான திறவுச்சொல்லை தட்டச்சு செய்யலாம்.
|
இலக்கம்(Number)
|
பயன்படுத்தத்தக்க நேர்,
எதிர், மற்றும் தசம இலக்கங்கள்.
|
72154, -58759o685, 43251.124, 8573938878.573
|
பணம் (Currency)
|
இது இலக்கங்களை
போன்றது. விலை, செலவு, கொடுப்பனவு போன்ற பெறுமதி நிதி நடவடிக்கைகளுக்கு
பயன்படும்.
|
12.75, 30.00, 0.50
|
திகதி(Date)/நேரம்(Time)
|
வந்த நேரம், சென்ற
நேரம், வாங்கிய திகதி, வேலைக்கு சேர்ந்த திகதி போன்ற காலம் மற்றும் நேரங்களை
குறிக்க பயன்படும்.
|
11-12-1972, 23-09-88, 12.15, 21.00, 0.50,
|
ஆம்(Yes)/இல்லை(No)
|
இது இரண்டே இரண்டு
பெறுமதிகளை கொண்ட தரவு வகை.
|
Yes, No, True, False
|
மிகை இணைப்பு(Hyperlink)
|
வலைத்தளம் மற்றும்
மின்னஞ்சல் முகவரிகள், கோப்புக்களின் பாதைகள் குறிப்பிட பயன்படும்
|
C:\\Govt. Lectures\Presentation\Internt.pptx
|
இணைப்புக்கள்(Attachment)
|
கோப்புகளை சேமிக்க பயன்படும்
புலன்களை குறிக்க பயன்படும்.
|
படங்கள், சொல்லாக்கம்,
அளிக்கை மற்றும் விரிதாள் கோப்புக்கள்.
|
தானியங்கு இலக்கம்.(AutoNumber)
|
ஒரு புலத்துக்கு
உள்ளீட்டு சாதனங்களை பயன்படுத்தி உள்ளீடு செய்யாமல் தானாக இலங்க்களை உள்ளீடு
செய்ய பயன்படும்.
|
1,2,3,4…..
|
கணிக்கப்பட்டது(Calculated)
|
ஏனைய புலங்களில்
இருந்து கணிக்கப்பட்ட பெறுமதியை கொண்டிருக்கும்.
|
NIC இலக்கத்தில்
இருந்து பிறந்த திகதியை தானாகவே கணித்து கொள்ளல்.
|
வினா:
MS Access இல்
பயன்படுத்தப்படும் முன்று தரவு வகைகளை (Data Type) ஒவ்வொரு வகைக்கும்
உதாரணங்களுடன் குறிப்பிடுக? (PMA III 2007 (I) (2008))
தொடரும்
தொடரும்
No comments:
Post a Comment