விண்டோஸ் செயல்பாட்டு முறைமை (Windows Operating System)
விண்டோஸ்
செயல்பாட்டு முறைமை (Windows Operating System) யின் பயன்கள்
1.
சிறந்த வரைகலை பயனர் இடைமுகத்தை வழங்குகிறது. இதன் மூலம் குறிமுறை அறிவு
இல்லாதவர்களும் கணினியை பயன்படுத்த முடிகிறது
2.
கணினி கணினி வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்களை கட்டுப்படுத்துகிறது.
3.
கணினியில் உள்ள தரவுகளை பாதுகாக்கிறது.
பயனர் இடைமுகம் (User Interface)
1.
கட்டளைக்கோட்டு இடைமுகம் (Command Line Interface - CLI)
2.
வரைகலை பயனர் இடைமுகம் (Graphical User Interface - GUI)
கட்டளைக்கோட்டு
இடைமுகம் (Command Line Interface - CLI)
பயனர் கட்டளைகளை
ஒன்றன்பின் ஒன்றாக இயக்கக முறைமைக்கு வழங்க வேண்டும். ஒரு நேரத்தில் ஒரு செயலை
மட்டும் இது செயல்படுத்தும். பயனர் விசேட விதிகளுக்கு அமைய கட்டளைகளை நினைவில்
வைத்திருக்க வேண்டும்.
வரைகலை பயனர்
இடைமுகம் (Graphical User Interface - GUI)
கணினியை எளிதாக
பயன்படுத்த இது உதவும். இங்கு கட்டளைகளை நினைவில் வைத்திருக்கவேண்டிய அவசியமில்லை.
வரைகலை குறியீடுகளை பயன்படுத்தி எளிதாக இயக்கலாம். ஒரே நேரத்தில் பய வேலைகளையும்
செய்யலாம்.
வரைகலை பயனர்
இடைமுகம் (Graphical User Interface - GUI) கூறுகள்.
1.
பிரவேசத்திரை(Desktop)
கணினியை
செயல்படுத்தியதும் செயல்பட ஆரம்பித்து இறுதியாக பயனர் பயன்பாடிற்குரிய முறையில்
தோன்றும் திரையாகும். இங்கு எல்லா படவுருக்களும் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கும்.
2.
படவுருக்கள்(Icons)
கணினியில்
நிறுவப்பட்டுள்ள மென்பொருட்களை இயகுவதற்காக கணினி பிரவேசத்திரையில் காணப்படும்
குறிக்குவிழிகளை குறிக்கும் வரைகலை அடையாளங்கள் ஆகும்.
குறிப்பு:
பிரவேசத்திரையில் படவுருக்களின்
எண்ணிக்கை அதிகமாக அதிகமாக கணினியின் வேகம் குறையும்.
வழக்கமாக
பிரவேசத்திரையில் காணப்படக்கூடிய படவுருக்கள்
1.
கணினி / என் கணினி (Computer / My Computer)
2.
Documents / My Documents
3.
வலையமைப்பு (Network)
4.
மீள்சுற்றோட்ட கொள்கலம்(Recycle Bin)
5.
அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களின் குறிக்குவிழிகளை குறிக்கும் வரைகலை
அடையாளங்கள் (“Short Cut Icons”)
பிரவேசத்திரையில்
காணப்படக்கூடாத படவுருகள்
இவற்றை தவிர வேறு
சின்னங்கள் காணப்படுவது கணினியின் வேகத்தை பாதிக்கும்.
1.
கோப்புறைகள் / கோப்புக்கள்
2.
மென்பொருட்கள்
3.
படங்கள் / காணொளிகள்
3.
மீள்சுற்றோட்டக் கொள்கலம் (Recycle Bin)
தேவையற்ற
கோப்புக்கள், மற்றும் கோப்புறைகளை அழிக்கும் பொழுது அவை தற்காலிகமாக
வைத்திருக்கும் இடம் ஆகும். தவறுதலாக அழிக்கப்படும் மேற்படி கோப்புக்கள் மற்றும்
கோப்புறைகள் இங்கிருந்து மீளப்பெற முடியும். இங்கிருந்து நீக்கப்படும் கோப்புக்கள்
மற்றும் கோப்புறைகளை சாதாரண முறையில் மீளப்பெற முடியாது. இயல்புநிலையில் (“by Default”) வன்தட்டில்
இயக்கமுறமை சேமிக்கப்படும் இடத்தில் சேமிக்கப்படும்.
பயனர் கணக்கு
ஒருவர் கணினியை
பயன்படுத்த பயனர் கணக்கை கொண்டிருக்க வேண்டும். இது பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்
எனும் இரண்டு பண்புகளை கொண்டிருக்கும். ஒவ்வொரு பயனர் கணக்கும் பிரத்தியோகமான
பின்வரும் கோப்புறைகளை கொண்டிருக்கும். இதனை வேறு ஒரு பயனரால் பார்க்கமுடியாது
F My Document / Document: பயனருடைய பிரத்தியோக
ஆவணங்களை சேமிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
F My Video / Video: பயனருடைய பிரத்தியோக காணொளிகளை சேமிப்பதற்கு
பயன்படுத்தப்படும்.
F My Picture / Picture: பயனருடைய பிரத்தியோக படங்களை சேமிப்பதற்கு
பயன்படுத்தப்படும்
F My Music / Music :பயனருடைய பிரத்தியோக ஒலிகள், மற்றும் பாடல்களை சேமிப்பதற்கு
பயன்படுத்தப்படும்
கோப்புகள்(Files)
கணினியில் தரவுகளை
சேமித்து வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் கோப்புக்கள் பயன்படும்.
கோப்புறை (Folder)
பல்வேறுபட்ட கோப்புகள்,
மற்றும் கோப்புறைகளை வகைப்படுத்தி இலகுவாக அடையாளம் காணக்கூடியதாக வகைப்படுத்தி
பராமரிப்பதற்கு கோப்புறைகள் பயன்படும்.
கோப்பு முகாமைத்துவம்(File Management)
இது கணணி இயங்கு தள
மென்பொருளால் நிறைவேற்றப்படும். கோப்புக்களை சேமித்து வைத்தல் மற்றும் தேவையான போது
விரைவாக திருப்பித்தருதல் போன்ற செயல்பாடுகளை கொண்டது. மேலும் கோப்புக்களை
உருவாக்கல், பெயரிடல், ஒழுங்கமைத்தல், நகல்செய்தல், வேறொரு இடத்துக்கு அனுப்புதல்,
நீக்குதல், பாதுகாத்தல், அணுகல், மற்றும் பயன்படுத்தல் என்பனவும் கோப்பு
முகாமைக்குள் அடங்கும்.
கணினி எதற்காக Refresh செய்யப்படுகிறது.
கணினியை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது
மென்பொருட்களை இயக்கும் செயலோளுங்கள் பல தற்காலிகமாக நினைவகத்தில் சேமிக்கப்படும்
இதனால் நினைவகத்தில் இடப்பற்றாக்குறை ஏற்படும். கணினியின் வேகம் குறையும். Refresh செய்யும்போது அவற்றுள்
உடனடியாகத் தேவையற்றவை அகற்றப்படும். தற்காலிக நினைவகத்தின் சேமிப்பளவு கூடி கணினியின்
வேகம் அதிகரிக்கும்.
பிரவேச திரையில் (Desktop) இல் கோப்புறை ஒன்றை
நிறுவுவதற்கு தேவையான படிமுறையை தருக?
1.
பிரவேசத்திரையில் வெற்றிடமாக உள்ள பகுதியில் சுட்டிக்குறியை வைத்து வலப்பக்க
பொத்தானை அழுத்துக.
2.
தோன்றும் பட்டியலில் New என்பதை தெரிவுசெய்து பின்னர் Folder என்பதை தெரிவு செய்க.
3.
தோன்றும் புதிய கோப்புறைக்கு பொருத்தமான பெயரினை உள்ளீடு செய்து உள்வழிவிசையை
அழுத்துக.
கணினியில் பிரவேசத்திரையில்
சேமிக்கப்பட்டுள்ள கோப்புறையோன்றை Pen Drive இல் சேமிப்பதற்கான
படிமுறையை தருக?
1.
குறிப்பிட்ட கோப்புறையில் சுட்டிக்குறியை வைத்து வலப்பக்க பொத்தானை அழுத்துக.
2.
தோன்றும் பட்டியலில் Send to என்பதை தெரிவுசெய்து தோன்றும் மேலதிக பட்டியலில் Pen Drive னை தெரிவு செய்க.
3.
கோப்புறையானது Pen Drive க்கு மாற்றப்படும்.
Windows Explorer
கணினியில் உள்ள சேமிப்பகங்கள்
தொடர்பான தகவல்கள் மற்றும் கோப்புறைகள் என்பவற்றை ஒருங்கே காண்பிக்கும். மேலும்
இதனை பயன்படுத்தி வன்தட்டு சேமிப்பகங்கள், வெளிச் சேமிப்பகங்கள் மற்றும் Pen Drive DVD போன்ற
அகற்றக்கூடிய சேமிப்பகங்களை அணுகலாம். கணினி என்ற படவுருவில் இருமுறை அழுத்துவதன்
மூலமோ அல்லது Windows விசை + E என்ற குறுக்குவிசைத்தொகுதியை பயன்படுத்துவதன் மூலம்
திறக்கலாம்.
கணினிவழிக் குற்றங்கள்
சட்டத்தின் அடிப்படை எண்ணக்கரு என்ன?
கணினிவழிக் குற்றங்கள்
சட்டத்தின் அடிப்படையானது, கணினியொன்று, கணினி செயல்திட்டம், தரவு, அல்லது
தகவல்களுக்கான அதிகாரமளிக்கப்படாத அணுகுமுறைகள் அதாவது முயற்சிகளை குற்றமாக
கருதுகிறது.
குற்றவாளிக்கு கணினிக்கான
வாய்ப்பு அதிகாரமளிக்கப்பட்டுள்ளதா என்பதை கருத்தில் கொள்ளாமலே கணினிகளின்
அதிகாரமளிக்கப்படாத பயன்பாடு தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கும் இது ஏற்பாட்டைக்
கொண்டுள்ளது.
கணினிவழிக் குற்றங்கள்
எவை?
1.
அதிகாரமளிக்கப்படாத திருத்தம்
2.
அதிகாரமளிக்கப்படாத மற்றம் அல்லது தகவலொன்றின் நீக்கம்.
3.
வைரஸ் மற்றும் தர்க்கக் குண்டுகளை அறிமுகப்படுத்தி கணினிகளுக்கு சேதம்
விளைவித்தல்.
4.
தகவல்களின் அதிகாரமளிக்கப்படாத பிரதிபண்ணல்
5.
கணினிச்சேவைகளின் அதிகாரமளிக்கப்படாத பாவனைகள்
6.
கணினிகளிடையேயான தகவல் பரிமாற்றத்தின் பொழுது, தரவு தகவல்களை ஊடுருவல்.
தரவுப்பாதுகாப்பு ஏன்
அவசியமானது?
1.
இணையமுலம் செயல்படுகின்ற பல்வேறு கம்பனிகளின் முக்கிய சொத்தாக தனியாள் தனியாள்
தரவுகள் மாறியிருக்கின்றமை.
2.
தற்கால தகவல் யுகத்தில் தரவுப்பாதுக்காப்பு ஒழுங்குவிதிகள் முக்கிய
சட்டநிர்வாகமொன்றாக மாறியுள்ளமை
3.
ஓர் இணைக்கப்பட்ட உலக பொருளாதரத்தில் தேசிய தரவுப்பாதுகாப்பு விதிமுறைகள்
இலகுவாக சுற்றிவளைத்துக் கொள்ளப்படக் கூடியதாக அமைந்துள்ளமை
4.
தரவுகள் சட்டவரையறைக்கு அப்பால் மாற்றமடைகின்றமை
புலமைச்சொத்துக்கள்
சட்டம் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் ஏன் அவசியமானது?
அதிகாரமளிக்கப்படாத
பாவனையிலிருந்து புலமைச்சொத்துக்கள் உரிமையாளர்கள், புத்தாக்குனர்கள், மற்றும்
உருவாக்குனர்களை பாதுகாப்பதற்கு புலமைசொத்துக்கள் சட்டங்களுக்கு கட்டுப்படுதல்
அவசியாமானது.
இ-அரசாங்க கொள்கைளை
நடைமுறைப்படுத்துவதன் பயன்கள் யாவை?
1.
அனைவருக்குமான அணுகுமுறை.
2.
பொதுமக்கள் சேவைகள் தொடர்பான வெளிப்படைத்தன்மை.
3.
பிரஜைகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக அமைதல்.
4.
இ-அரசாங்க தீர்வுகளில் பிரபல கோட்பாடான “அதே நாளில் சேவை” என்ற விதத்தில்
அமைதல்.
5.
தகவல் மற்றும் சேவைக்களை வழங்குவதில் அரசாங்க நிறுவனங்கள், மரபு ரீதியான
நிறுவன மையப்படுத்திய அணுகுமுறைக்குப் பதிலாக பிரஜைகளை மையப்படுத்திய
அணுகுமுறையோன்றை தாபித்துள்ளமை.
6.
அரசாங்க நிறுவனங்கள் பிரஜைகளுக்கு வழங்கப்படுகின்ற சேவைகளுக்கு வகைகூறும்
தகமையுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, அதனுடாக அச்சேவைகளின்
உபயோகத்தில் பிரஜைகளிடம் நம்பிக்கையை வளர்க்கவும் அரசாங்க நிறுவனங்களுடன்
இடைத்தொடர்பை ஏற்படுத்தவும் வழியமைக்கும்.
முற்றும்
No comments:
Post a Comment