தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் முக்கியமான வன்பொருள் கணணியாகும்.
கணினி –
எண்ணக்கரு
கணனியின் வகைகள்
கணினியின் பண்புகள்
1.
மிக விரைவானது (Speed)
பல மில்லியன்
கணக்கான கணக்குகளை ஒரு செக்கனில் தீர்க்கும் திறன் கொண்டது.
2.
மிகவும் திருத்தமானது (Accuracy)
அறிவுறுத்தல்களுக்கு
ஏற்ப மிகவும் திருத்தமானவையாகவும் நம்பகமானவையாகவும் வெளியீடுகளை தரும்.
3.
நினைவகம் (Storage)
இதில் அதிகளவிலான
தரவுகளைச் சேமித்துவைப்பதுடன் உரிய நேரத்தில் அவற்றை மிகவிரைவாகவும்
எடுக்கக்கூடியதாகவுள்ளது.
4.
உணர்ச்சியின்மை (No Feeling)
கணினியானது ஒரு
வகை இயந்திரமாகும். இதற்கு மனிதர்களை போல் தனிமை, களைப்பு, வெறுமை போன்ற
உணர்வுகள் இல்லை.
5.
நுண்மதியின்மை (No Intelligent)
அறிவுறுத்தல்கள்
இல்லாமல் கணினி எதனையும் செய்யாது.
தவறான தரவுகளைக்
கொடுத்தால் தவறான பெறுபேறுகளே கிடைக்கும்.
கணனித் தொகுதி
வன்பொருட்கள்
கணினியொன்றை
உருவாகுவதற்கு தேவையான கன்னியின் பாகங்கள் ஆகும். இவை கண்ணால் பார்க்க முடிவதோடு
தொட்டுணரவும் முடியும்.
உள்ளக
வன்பொருட்கள்
Ø நுண்செயலி
Ø ராம்
Ø ரோம்
Ø கணினி மின்வழங்கி
Ø தாய்பலகை
Ø துறைகள்(Ports)
Ø சேமிப்பகங்கள்
Ø குறுவட்டு/இறுவெட்டு
இயக்கி
வெளியக வன்பொருட்கள்
Ø காட்சித்திரை
Ø விசைப்பலகை
Ø சுட்டி
Ø அச்சுப்பொறி
Ø வருடி
Ø வலைநிழலி/வலைநிழம்பி(Webcam)
Ø ஒலிவாங்கி/ஒலிபெருக்கி
1.
வன்பொருட்கள் அவற்றின் தொழில்பாடு ரீதியாக ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்டவை.
2.
இவற்றினது செயல்பாட்டுக்குமின்சாரம் தேவை
3.
இவை தாய்பலகையுடன் இணைந்திருந்தால் அவை உள்ளிணைப்பு சாதனங்கள் (“Onboard Devices”) எனப்படும்.
மென்பொருட்கள்
கணினி மற்றும் அதன்
பாகங்களின் இயக்கத்துக்கு அல்லது கணினியின் பயன்பாட்டுக்கு தேவையான நிகழ்ச்சி
நிரல்களின் தொகுப்பு ஆகும். இதனை தொட்டுணர முடியாது. கணினியில் நிறுவி கணினியை
இயக்கவோ அல்லது கணினியை குறித்த தேவைக்கு பயன்படுத்தவோ முடியும்.
Ø விண்டோஸ் 7
Ø எம். எஸ். ஆபீஸ் 2013
Ø போடோஷப்
Ø மீடியாபிளேயர்
Ø அன்ரி-வைரஸ் (நச்சு நிரல்
நீக்கி)
மென்பொருளானது பொதுவாக
இரு வகைப்படும்.
1.
இயக்க மென்பொருள்(System software)
2.
பிரயோக மென்பொருள் (Application software)
மென்பொருட்களை அவற்றின்
உரித்துடைமையைப் பொறுத்து இரு வகையாகப் பிரிக்கலாம்.
1.
தனியுரிம மென்பொருள்(Proprietary software)
2.
திறந்த மூல மென்பொருள்(Open source software)
இயக்க மென்பொருள்(System Software)
கணினியின் இயக்கத்துடன்
தொடர்புபட்ட மென்பொருட்கள்
Ø இயக்க முறைமை (Operating System)
உதாரணம்:
விண்டோஸ் 8, லினக்ஸ், உபுண்டு 13.1
Ø கணினியின் வளங்களை தாழ்
மட்டத்தில் முகாமைத்துவம் பண்ணக்கூடிய செயலோழுங்குகள்
உதாரணம்:
மொழிமாற்றிகள்(Compilers), ஏற்றிகள் (Lourdes), பிழைதிருத்தி (Debuggers)
பிரயோக மென்பொருட்கள் (Application Software)
கணினியை பயன்படுத்தும்
நோக்கத்துக்காக பயனரின் விருப்பத்துக்கேற்ப நிறுவப்படும் மென்பொருள்.
உதாரணம்:
எம். எஸ். ஆபீஸ், போடோஷப் சிஎஸ் 6, நீரோ, அக்ரோபட் ரீடர், மீடியா
பிளேயர்கள்.
குறிப்பு:
வன்பொருட்களின் செலுத்திகள் ஓர் இயக்க மென்பொருள் ஆகும்.
அன்டி வைரஸ் ஒரு பிரயோக மென்பொருள் ஆகும்.
தனியுரிம மென்பொருள்(Proprietary software)
தனியுரிம மென்பொருள்
எனப்படுவது மென்பொருட்களை பயன்படுத்துதல், திருத்தியமைத்தல், பிரதி எடுத்தல்,
மாற்றியமைக்கப்பட்ட மென்பொருளை பிறருக்கு வழங்குதல்
போன்றவற்றில் கட்டுப்பாடுகள் உடைய மென்பொருள்கள் ஆகும். இம் மென்பொருளை மூடிய மூல
மென்பொருள்(Closed source software) என்றும் அழைப்பர்.
சில தனியுரிம
மென்பொருள்களுக்கு உதாரணம்:
• Microsoft office
• Adobe Photoshop
• Adobe flash
• Windows 8
திறந்த மூல மென்பொருள்(Open source software)
திறந்த மூல மென்பொருளானது
இலவசமாகப் பயன்படுத்தப்படுவதும், அதன் அசல் மூல
குறியீட்டை(Source code) பயனருக்கு வழங்குவதன் மூலம் அவற்றை மாற்றியமைக்கக் கூடிய
உரிமையையும் வழங்கும் மென்பொருட்களாகும்.
சில திறந்த மூல
மென்பொருள்களுக்கு உதாரணம்:
• Linux
• Mozilla Firefox
• OpenOffice
தொடரும்
உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று. ..
ReplyDeleteகணினியில் செய்யத்தக்க பணிகள் சில பயனருக்குத் தேவையான பணிகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு உதவும் கணினி நிகழ்ச்சிகளே பிரயோக மென்பொருள்கள் ( Application softwares ) எனப்படும் ....
இது போன்ற மேலும் தகவலுக்கு : https://www.aruvi.lk