கூகுள் ஆவணம் (Google Docs)
இவ் வசதியை
பயன்படுத்துவதற்கு நீங்கள் கூகுளின் பயனர் கணக்கு வைத்திருத்தல் அவசியமாகின்றது. (அதாவது கூகுளின் மின்னஞ்சல் முகவரி இருப்பின்
போதுமானது)
கூகுள் ஆவணத்தை திறத்தல்
2.
வலதுபக்க
மேல்மூலையில் ஒன்பது புள்ளிகள் காணப்படும் அவற்றின் மீது இடஞ்சுட்டியைக்
கொண்டுசென்று அழுத்துக.
3.
கீழ்
நோக்கிய பட்டியலொன்று தோன்றும். மேலும் என்பதனை அழுத்துக. மேலும் பட்டியல்
நீட்சியடையும். அதில் ஆவணம் என்பதனை அழுத்துக.
4.
ஆவணத்தினுள் உள்நுழைவுக்கான திரை தோன்றும் தங்களின் பயனர்
கணக்கிற்கான மின்னஞ்சல் முகவரியும் கடவுச்சொல்லினையும் உள்ளீடு செய்க.
5.
கூகுள்
ஆவணம் தோன்றும்.
6.
இவ்
ஆவணமானது மைக்ரோசொப்ட் சொல் செயன்முறையாக்கல் (Microsoft Word) மென்பொருளில்
காணப்படும் வசதிகள் பலவற்றைக் கொண்டிருக்கும்.
குறிப்பு:
இவ் ஆவணத்தில்
தங்களுடைய செயற்பாடுகள் அனைத்தும் தானியங்கி (Automatic) முறையில்
சேமிக்கப்படும். தாங்கள் பயனர் கணக்கினை
உருவாக்கும்பொழுது கூகுளானது தங்களுக்கென 15 GB கொள்ளளவைக் கொண்ட தரவு சேமிப்பகத்தை மேகக்கணினியில்
(Cloud) உருவாக்கும்.
வசதிகள்:
எமது குரலினை எழுத்துருவாக மாற்றுதல் (Voice to Text)
1.
ஆவணத்தின்
மேல்பகுதியில் உள்ள பட்டியலில் கருவிகள் என்ற பகுதிக்கு செல்க.
2.
கருவிகளில்
அழுத்தும் பொழுது தோன்றும் கீழ்நோக்கிய பட்டியலில் குரல் தட்டச்சு என்பதில்
அழுத்துக
குறிப்பு
உங்கள்
கணினியில் ஒலிவாங்கி நேர்த்தியாக தொழிற்படும் சந்தர்ப்பத்தில் மட்டுமே இவ் வசதி
இயங்கு நிலையில் (Active) இருக்கும்
3.
ஆவணத்தின்
இடப்பக்க மேல்மூலையில் ஒலிவாங்கியின் படம் தோன்றும்.
4.
அப்படத்தின்
மேற்பகுதியில் உரையானது எந்த மொழியில் தட்டச்சு செய்யப்படும் என்பதனை காட்டும்
மொழியின் பெயர் தோன்றும். இயல்பு நிலையில் மொழியானது English (UK) என காணப்படும்.
5.
அருகிலுள்ள
கீழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்தவும்.
6.
கீழ்நோக்கிய
பட்டியலொன்று தோன்றும். அதில் விரும்பிய மொழியினை தெரிவுசெய்க. உதாரணம் தமிழ் (இலங்கை)
7.
பின்னர்
ஒலிவாங்கியின் படத்தில் அழுத்தவும்.ஒலிவாங்கி சிவப்பு நிறமாக மாறும். அதனை
சுற்றியும் சிவப்பு நிற வளையம் தோன்றும்.
8.
இந்நிலையில் நீங்கள் உரையினை வாசிக்கும் பொழுது அது
தட்டச்சு செய்யப்படும்.
குறிப்பு:
முற்றுமுழுதாக
வெளிச்சுற்று வட்டம் வரை ஒலிவாங்கியின் அனைத்தும் சிவப்பு நிறத்தில் தோன்றினால்
உங்கள் உரை தட்டச்சு செய்யப்படமாட்டாது அவ் வேளையில் ஒலிவாங்கியில் அழுத்தி
பின்னர் மீண்டும் அழுத்தியபின் வாசிக்க தொடங்கவும்.
தொடரும்
No comments:
Post a Comment