நாடா (Ribbon)
அளிக்கையில் காணப்படும்
நாடவானது பின்வரும் தாவல்களை கொண்டிருக்கும்.
1.
முகப்புத்தாவல்(Home Tab): இது அளிக்கையின்
உருவாக்கம் மற்றும் திருத்தம் அல்லது மெருகூட்டலுக்காக அடிக்கடி பயன்படுத்தப்படும் கருவிகளை
கொண்டிருக்கும். அவை பின்வரும் குழுக்களாக வகைப்படுத்தப்பட்டிருக்கும்.
a.
நகலகம்(Clipboard): இது எழுத்துக்கள், பந்திகள் மற்றும் பொருட்கள்
போன்றவற்றை பிரதிபண்ணல் வெட்டி எடுத்தல் ஒட்டுதல் போன்ற செயல்பாடுகளுக்கான
கருவிகளை கொண்டிருக்கும்.
b.
படவில்லைகள்(Slides): படவில்லைகளை
செருகுதல், அதன் தளவமைப்பை மாற்றுதல் மற்றும் பிரிவுகளை உருவாக்கல் அல்லது நீக்கல்
போன்ற செயல்பாடுகளுக்கான கருவிகளை கொண்டிருக்கும்
c.
எழுத்துரு(Font):எழுத்துக்களை பெரிதாக்கல் அல்லது சிறிதாக்கல் (Change Font Size), எழுத்த்களின் நிறத்தை மாற்றல் (Change Font Color) வகையை மாற்றல் (Change Font Type), தடிப்பாக்கல் (Bold), சரிவாக்கல் (Italic), அடிக்கோடிடல் (Underline), எழுத்துக்களை
மேல்வைப்பு (Supperscript) கிழ்வைப்பாக (Subscript) மாற்றல் மற்றும் அவற்றை
முன்னிலைப்படுத்தல் (Highlight) போன்ற செயல்பாடுகளுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
d.
பந்தி(Paragraph):ஓரங்களை சீராக்கள், வரிகளுக்கிடையிலான இடைவெளிகளை கூட்டல்
மற்றும் குறைத்தல் சொற்கள் அல்லது வசனங்களை வரிசைப்படுத்த எண்கள் மற்றும்
பொட்டுக்குறிகளை பயன்படுத்தல், உரையின் திசையை மாற்றல், உரைப்பெட்டியில் உரையின்
நிலையை மாற்றல், ஸ்மார்ட் ஆர்ட் பொருட்களை செருகுதல் போன்ற
செயல்பாடுகளுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
e.
வரைதல்(Draws) படவில்லையில் வடிவங்களை
உள்ளீடு செய்வதற்கும், அவற்றை வரிசைப்படுத்தல், பலவற்றை ஒன்றுசேர்த்து குழுவாக்குதல்
சீரமைத்தல் மற்றும் சுழற்றுவதற்க்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட வடிவங்களுக்கு விரைவுநடையை பிரயோகித்தல், பின்புற நிறத்தினை
மாற்றல், ஓரங்களை வடிவமைத்தல் விளைவுகள் அல்லது பிரதிபளிப்பிக்களை ஏற்ப்படுத்துதல் போன்ற
செயல்பாடுகளுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
f.
திருத்தல்(Edit):பொருட்கள் மற்றும் சொற்களை தேடுதல், கண்டுபிடித்து பிரதியிடல்,
தேர்ந்தெடுத்தல் போன்ற செயல்பாடுகளுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
2.
செருகு தாவல் (Insert Tab): இது புதிய படவில்லைகள் மற்றும் படவில்லையில் வடிவங்கள், படங்கள், காணொளிகள்,
உருவங்கள், iஇணைப்புக்கள்,
சின்னங்கள், அட்டவணைகள் போன்றவற்றை
செருகுவதற்க்கும் அவற்றினை விருப்பம் போல் வடிவமைப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது.மேலும்
இத் தாவல் பின்வரும் குழுக்களை கொண்டுள்ளது.
a.
படவில்லைகள்(Slides): புதிய படவில்லைகளை செருகுவதற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட படவில்லைகளை பிரதி
எடுப்பதற்குமான கருவிகளை கொண்டிருக்கும்.
b.
அட்டவணைகள்(Tables): அட்டவனையோன்றை உருவாக்குவதற்கு, செருகுவதற்கு அல்லது வரைவதற்கும் விரிதாள்
ஒன்றை செருகுவதற்குமான கருவிகளை கொண்டிருக்கும்.
c.
படங்கள் (Images):கணினியில் உள்ள படமொன்றை செருகுதல்(Insert Pictures), இணையத்திலுள்ள படமொன்றினை கண்டறிந்து செருகுதல்(Insert Online Pictures),கணினியில் திறக்கப்பட்டுள்ள
திரையோன்றை திரைப்பிடிப்பு செய்து செருகுதல்(Insert Screenshot), நிழற்பட தொகுப்பு (Photo Album) ஒன்றினை உருவாக்குதல் போன்றவற்றுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
d.
வரைவுருக்கள்(Illustrations): வடிவங்கள் (Shapes), ஸ்மார்ட் ஆர்ட் (SmartArt) வரைவுருக்கள்,
விளக்கப்படங்கள் (Chart) போன்றவரை உருவாக்குதல் அவற்றை மீளமைப்பு செய்தல் மற்றும் மெருகூட்டல்
போன்றவற்றுக்கான கருவிகளை கொண்டிருக்கும்.
e.
இணைப்புக்கள்(Links):செருகப்பட்டுள்ள
பொருள் ஒன்றில் சுட்டிக்குறியை கொண்டுசெல்லும்போது அல்லது அதன்மேல் அழுத்தும்போது என்ன
செயல் நடைபெற வேண்டும் (Actions) மற்றும் வேறு ஒரு கோப்பினை அளிக்கையுடன் இணைத்து தேவையேற்படும் பொழுது திறத்தல் (Hyperlink) போன்றவற்றை
உருவாக்குவதற்கான கருவிகளை கொண்டிருக்கும்.
f.
கருத்துரை(Comments): குறிப்பிட்ட பகுதி சம்பந்தமான குறிப்புக்களை செருகி
வைப்பதற்கான கருவிகளை கொண்டிருக்கும்.
g.
உரை(Text): உரைப்பெட்டி(Text Box), மேற்குறிப்பு(Header) மற்றும் கிழ்குறிப்பு(Footer), வேர்ட் ஆர்ட்(WordArt), திகதி (Date) மற்றும் நேரம் (Time), படவில்லை எண் (Slide Number), மற்றும் பொருட்கள் (Objects) (விரிதாள்,
சமன்பாடுகள், ஆவண வடிவமைப்பு பகுதி) போன்றவற்றை செருகுவதற்கான கருவிகளை
கொண்டிருக்கும்.
3.
வடிவமைப்பு தாவல்(Design Tab): இது அளிக்கையின்
முழுத்தோற்றத்திலும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவிகளை கொண்டிருக்கும். இத் தாவல் பின்வரும்
குழுக்களை கொண்டுள்ளது.
a.
கருப்பொருள் (Themes):இது கருப்பொருட்களை உள்ளீடு செய்து மொத்த அளிக்கையினதும் நிறம் , எழுத்துருக்கள்,
விளைவுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான கருவிகளை கொண்டிருக்கும்
b.
வேறுபாடுகள் (Varients):தெரிவுசெய்யப்பட்டுள்ள
கருப்பொருள் ஒன்று கொண்டுள்ள நிறம், எழுத்துருக்கள் மற்றும் விளைவுகளில் தனித்தனியே
மாற்றத்தை செய்வதற்கான கருவிகளை கொண்டிருக்கும்.
c.
தனிமைப்படுத்து(Customize): படவில்லையின் அளவு (Slide Size) மற்றும் பின்புலத்தினை
மாற்றியமைத்தலுக்கான (Format Background) கருவிகளை
கொண்டிருக்கும்.
4.
மாறுதல்கள் தாவல்(Transitions Tab): ஒரு படவில்லையில் இருந்து இன்னோர் படவில்லைக்கு மாறும்போது படவில்லையானது
ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பில் மறைவதற்கு, தோன்றுவதற்கு அல்லது மாறுவதற்கு மற்றும் இதன்போது ஒலிகளை எழுப்பவதற்கும் உரிய கருவிகளை
கொண்டிருக்கும். இத் தாவல் பின்வரும் குழுக்களை கொண்டுள்ளது.
a.
முன்னோட்டம்(Preview): இகுழுவானது படவில்லையோன்றில்
உருவாக்கப்பட்டுள்ள மாறுபாடு மற்றும் மாறும்போது ஏற்படும் ஒலியினை முன்னோடம் இட
தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
b.
இந்த படவில்லைக்கான மாற்றம் (Transitions to this Slide): ஒரு படவில்லையில்
இருந்து இன்னோர் படவில்லைக்கு மாறும்போது படவில்லையானது ஒரு குறிப்பிட்ட
வடிவமைப்பில் மறைவதற்கு, தோன்றுவதற்கு அல்லது மாறுவதற்கு உருவாக்கப்பட்டுள்ள
வடிவமைப்புக்களை கொண்டிருக்கும்.
c.
விளைவு விருப்பங்கள் (Effect Options):இது படவில்லைக்கு இணைக்கப்பட்டுள்ள மாறல்களை
மெருகூட்டுவதற்கு தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
d.
காலம் (Timing):இக்குழுவானது மாறல்கள் நிகழவேண்டிய கால அளவு, மாறல்களின்
போது ஒலிகளை இணைத்தல், மாறல்களின் போது சுட்டியின் பயன்பாடு போன்றவற்றுக்கான
கருவிகளை கொண்டிருக்கும்.
5.
அசைவூட்டங்கள் தாவல் (Animations):, அளிக்கையில் பாரிய முயற்சியுடன் தெரிவிக்க நினைக்கும்
கருத்தினை சிறிய அசைவூட்டத்தை பயன்படுத்தி தெரிவிப்பதற்கும் மற்றும் அளிக்கையை
கவர்ச்சிகரமாக அமைப்பதற்கும் இத்தாவல் பயன்படுத்தப்படும்.
மேலும் இத் தாவல் பின்வரும் குழுக்களை கொண்டுள்ளது.
a.
முன்னோட்டம்(Preview): இகுழுவானது படவில்லையோன்றில்
செருகப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் எழுத்துக்களின் அசைவூட்டங்களை முன்னோடம் இட
தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
b.
அசைவூட்டங்கள் (Animation): இகுழுவானது படவில்லையோன்றில்
செருகப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் எழுத்துக்களுக்கு விரும்பிய அசைவூட்டங்களை
இணைப்பதற்கான கருவிகளை கொண்டிருக்கும்.
c.
மேம்பட்ட அசைவூட்டம் (Advanced Animation): இகுழுவானது படவில்லையோன்றில் செருகப்பட்டுள்ள பொருட்கள்
மற்றும் எழுத்துக்களுக்கு அசைவூட்டங்களை இணைப்பதற்கும், இணைக்கப்பட்டுள்ள அசைவூட்டங்க்களை
மேலும் மெருகூட்டுவதற்கும், ஒரு பொருளில் உள்ள அசைவூட்ட அமைப்பை இன்னோர்
பொருளுக்கு விரைவாக பிரதி செய்வதற்கும் மற்றும் அசைவூட்ட பலகத்தை
தோன்றச்செய்வதற்கும் தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
d.
காலம் (Timing): இக்குழுவானது அசைவூட்டங்கள் ஆரப்ம்பிக்கும் முறை, நிகழவேண்டிய
கால அளவு, குறிப்பிட்ட காலதாமதத்தின் பின்னர் ஆரம்பித்தல், படவில்லையில் பல
அசைவூட்டங்கள் காணப்படின் அவை நிகழவேண்டிய ஒழுங்குமுறை போன்றவற்றை
செயல்படுத்துவதற்கு தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
6.
படவில்லைக் காட்சி (Slide Show Tab): அளிக்கையானது பூரணப்படுத்தப்பட்ட பின்பு பார்ப்போருக்கு
எறிவையை பயன்படுத்தி உருவாக்க்கப்பட்டுள்ள வடிவமைப்புக்களுக்கு ஏற்ப அசைவூட்டங்கள்,
படவில்லை மாறல்கள் என்பவற்றுடன் நிகழ்த்துனரால் காண்பிக்கப்படும். இதன்போது விரும்பிய
மாற்றங்களை செய்வதற்கு இத்தாவல் பயன்படுத்தப்படும். மேலும் இத் தாவல் பின்வரும்
குழுக்களை கொண்டுள்ளது.
a.
படவில்லைக்காட்சியை ஆரம்பித்தல் (Start Slide Show): இக்குழுவானது முதலாவது
படவில்லையிலிருந்து காட்சியை ஆரம்பித்தல், தெரிவுசெய்யப்பட்டுள்ள
படவில்லையிலிருந்து காட்சியை ஆரம்பித்தல்,இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்கும்,
மற்றும் விரும்பிய படவில்லைகளை மட்டும் காட்சிப்படுத்த்துவதற்க்கும் தேவையான
கருவிகளை கொண்டிருக்கும்
b.
அமைவு (Set Up): படவில்லைக் காட்சியின்
போது விரும்பிய படவில்லைகளை மட்டும் தோன்ற செய்தல், காட்சியை முன்னரே நிகழ்த்திப்
பார்த்து ஒவ்வொரு படவில்லைக்கும் பொருத்தமான நேரத்தினை ஒதுக்கி தானியங்கி முறையில்
இயக்குதல், ஒதுக்கப்பட்ட நேரத்தினை மாற்றியமைத்தல், காட்சியின் போது குறிப்பிட்ட
படவில்லைகளை தோன்றாமல் மறைத்தல் படவில்லைக்காட்சிகளை ஒத்திவைப்பதற்கும், காட்சியின்
போது ஒலிகள் மற்றும் காணொளிகளை இயக்குதல் போன்றவற்றை அமைப்பதற்கான கருவிகளை
கொண்டிருக்கும்.
7.
மதிப்பாய்வுi(Review Tab): அளிக்கையோன்று உருவாக்கப்பட்ட பின்பு சொற்பிழை,
இலக்கணப்பிழை, இணையத்தில் பகிர்ந்திருக்கும் போது கருத்துரைகள் மற்றும் இரு
அளிக்கைகளை ஒப்பிடல் போன்றவற்றுக்கான கருவிகளை கொண்டிருக்கும். மேலும் இத் தாவல் பின்வரும்
குழுக்களை கொண்டுள்ளது.
a.
பிழைதிருத்தம்(Proofing):அளிக்கை உருவாக்கப்பட்டிருக்கும் மொழியில், அளிக்கையில்
ஏற்ப்பட்டிருக்கும் சொல் மற்றும் இலக்கணப் பிழைகளை கண்டறியவும், மற்றும்
திருத்தவும், குறிப்பிட்ட சொற்களுக்கு பொருத்தமான வேறு சொற்களை கண்டறிந்து
பிரதியிடவும் தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
b.
மொழி(Language): அளிக்கையிலுள்ள ஒரு
சொல்லை வேறுமொழியில் எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை அறிதல், பிழைதிருத்தத்துக்கான
மொழியினை மாற்றியமைத்தல், அளிக்கை மென்பொருளின் தொடர்பாடல் மொழியினை
மாற்றியமைத்தல், சிறிய மொழிமாற்றியை பயன்படுத்தல் போன்றவற்றுக்கான கருவிகளை
கொண்டிருக்கும்.
c.
கருத்துரைகள் (Comments): அளிக்கையின்
தெரிவுசெய்யப்பட்டுள்ள படவில்லைக்கான கருத்துக்களை செருகவும், செருகிய கருத்தினை
நீக்கவும், அளிக்கையிலுள்ள கருத்துக்களை ஒவ்வொன்றாக அல்லது எல்லாவற்றையும் ஒன்றாக பார்வையிடுவதற்கும்
தேவையான கருவிகளை கொண்டிருக்கும்.
d.
ஒப்பீடு(Compare): இரண்டு அளிக்கைகளை ஒப்பிட்டு ஒன்றிலுள்ள படவில்லைகளின்
உள்ளடங்களை மற்றைய படவில்லையில் புகுத்துவதற்கும் தேவையற்றவற்றை நீக்குவதற்கும் தேவையான
கருவிகளை கொண்டிருக்கும்.
தொடரும்
No comments:
Post a Comment