மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2016 (MS PowerPoint 2016) ஐ திறத்தல்
இயக்க முறைமை மாறுபடும்
பொழுது மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2013 (MS PowerPoint 2013) ஐ திறக்கும் முறையும்
மாறுபடும்.
F விண்டோஸ் 8/8.1/10 இல் மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட்
2016 ஐ திறத்தல்
1.
விசைப்பலகையில் விண்டோஸ் குறியீடு இடப்பட்ட விசையினை (“Windows
Key”) அழுத்துக. பெரியதும்
சிறியதுமாக பல வரைகலை குறியிடுகளை கொண்ட திரை ஒன்று உருவாகும்.
2.
“PowerPoint 2016” என எழுத்துப்பிழை இன்றி உள்ளீடு
செய்க. வலப்பக்கத்தில் தேடல் என்ற தலையங்கத்துக்கு கிழ் “P” வரைகலை குறியீட்டை “PowerPoint 2016” என்ற சொல்லும் இணைந்த சுட்டுக்குறி ஒன்று தோன்றும். அதில்
அழுத்துக.
3.
மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2016 ஆரம்பதிரை தோன்றும். அதில் “வேற்று அளிக்கையை”
ஐ தெரிவு செய்க.
4.
மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2016 அளிக்கை தோன்றும்.
F விண்டோஸ் 7 இல் மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட்
2016 ஐ திறத்தல்
1.
இடப்பக்க மூலையிலுள்ள விண்டோஸ் குறியீடு இடப்பட்ட வட்டவடிவமான வரைகலை
குறியீட்டில் (“Start Button”) அழுத்துக
2.
மேல்நோக்கி பட்டியல் ஒன்று தோன்றும். பட்டியலின் ஆரம்பத்தில் உள்ள செயலோலுங்கு
“Programs” என்ற குறிச்சொல்லில் அழுத்துக.
3.
அருகே ஒரு பட்டியல் தோன்றும் அதில் எம்.எஸ். ஒ(f)பீஸ் 2016 என்பதை தெரிவு செய்க.
4.
கணினியில் நிறுவப்பட்டுள்ள எம்.எஸ். ஒ(f)பீஸ் 2016 மென்பொருட்களின் பட்டியல்
தோன்றும். அதில் பவர்போயிண்ட் 2016 என்பதை தெரிவு செய்கை.
5.
மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2016 ஆரம்பதிரை தோன்றும். அதில் “வேற்று அளிக்கையை”
ஐ தெரிவு செய்க.
6.
மைக்ரோசாப்ட் பவர்போயிண்ட் 2016 வேற்று அளிக்கை தோன்றும்.
அளிக்கை சாளரத்தின்
பகுதிகள்:
1.
தலமைப்பட்டி(Title Bar): சாளரத்தின் ஆகவும்
மேல்பகுதியில் காணப்படும். இதன் இடப்பக்கத்தில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் சேமி
(Save), செயல்நீக்கி (Undo), மீண்டும்செய் (Redo) மற்றும் படவில்லைகளின் ஆரம்பத்திலிருந்தான காட்சி (Start from begining) போன்ற சில கட்டளைப் பொத்தான்களை கொண்ட விரைவு அணுகல் பட்டி காணப்படும்.
நடுப்பகுதியில் அளிக்கையின் பெயர் காணப்படும். வலப்பக்கத்தில் சிறியதாக்கு (Minimize), பெரியதாக்கு (Maximize), மூடு (Close) போன்ற கட்டுப்பாட்டுப் பொத்தான்கள் (Control Buttons) காணப்படும்.
2.
நாடா(Ribbon): இது அளிக்கையை உருவாக்க
பயன்படுத்தப்படுகின்ற அனைத்து கட்டளைப் பொத்தான்களையும் கொண்டிருக்கும் .இங்கு ஒரே
வகையான நோக்கத்துக்கு பயன்படுத்தப்படுகின்ற
கட்டளைப் பொத்தான்கள் ஒரு குழுவாக்கப்பட்டு பொருத்தமான பெயர்
கொடுக்கப்பட்டிருக்கும். இவ்வாறு ஒரே வகையை சேர்ந்த பல குழுக்கள் ஒன்றாக்கப்பட்டு அதற்கு
பொருத்தமான பெயர் சூட்டப்படும். அவை தாவல்கள் என்றழைக்கப்படும்.
அதாவது ஒரேமாதிரியான
கட்டளைப்பொத்தன்கள் ஒன்றாக்கப்பட்டு குழுக்கள் உருவாக்கப்படும். ஒரேமாதிரியான குழுக்கள் ஒன்றாக்கப்பட்டு
தாவல்கள் உருவாக்கப்படும். தாவல்கள் ஒன்றாக்கப்பட்டு நாடாவாக இருக்கும்.
3.
அளவுகோல்(Ruler): நாடாவின் கிழ்பகுதியில் கிடையாகவும் இடப்பக்கத்தில் நிலைக்குத்தாகவும்
காணப்படும். இதனை பயன்படுத்தி படவில்லையில் செருகப்படும் பொருட்களை ஒழுங்கமைப்பதற்கு
முடியும்.. மேலும் உரைகள் மற்றும் பந்திகளின் ஓரங்களை சீரமைப்பதற்கும், உள்தள்ளல்கள்(Intends) மற்றும் தாவல்களின்(Tabs) நிலைகளை குறிப்பதற்கும்
பயன்படும்.
4.
படவில்லை வழிகாட்டிப் பலகம்(Slide Navigation Pane): இங்கு அளிக்கையில் உருவாக்கப்பட்டுள்ள
படவில்லைகள் அனைத்தும் காணப்படும். இங்கு தெரிவுசெய்யப்படும் படவில்லையானது வலப்பக்கத்தில்
படவில்லைப் பலகத்தில் தோன்றும். மேலும் இதனை பயன்படுத்தி படவில்லையொன்றை புதிதாக
உருவாக்கவும், ஏற்கனவேயுள்ள படவில்லையின் பிரதியை உருவாக்கவும், படவில்லைகளை
நீக்கவும் மீள் ஒழுங்குபடுத்தவும் முடியும். அத்துடன் அளிக்கையில் இருக்கும்
படவில்லையொன்றை படவில்லைக் காட்சியில் தோன்றாமல் மறைப்பதற்கும், படவில்லைகளுக்கிடையே
பிரிவுகளை உருவாக்கவும் முடியும்.
5.
படவில்லைப் பலகம்(Slide Pane): இங்கு படவில்லை வழிகாட்டிப்
பலகத்தில் (Slide Navigation Pane) தெரிவு செய்யப்படும்
படவில்லையே தோன்றும். இப் பலகத்தில் வைத்தே படவில்லைகள் வடிவமைப்புக்கு
உட்படுத்தப்படும்.
6.
உருள்பட்டி(Scrol bar): படவில்லைப் பலகத்தில் படவில்லையை மேலும் கிழும்
அசைப்பதற்காக வலப்பக்கத்தில் நிலைக்குத்தாகவும் இடம் வலம் நோக்கி அசைப்பதற்காக
கிழே கிடையாகவும் காணப்படும். இது தேவையேற்படின் தானாக தோன்றும். அதேபோன்று
தேவையில்லையாயின் மறைந்துவிடும். அதாவது காட்சித்திரையை விட படவில்லையை பெரிதாக்கினால்
தோன்றும். சிறிதாக்கினால் மறையும். மேலும் இது படவில்லை வழிகாட்டிப் பலகத்திலும் (Slide Navigation Pane) தேவையேற்படின் தோன்றும்.
7.
நிலைமைப்பட்டி(Status bar): இது சாளரத்தின்
அடிப்பகுதியில் காணப்படுவதுடன் அளிக்கையின் பண்புகள் சிலவற்றையும் கொண்டிருக்கும்.
a.
படவில்லைகளின் எண்ணிக்கை: இதன் இடப்பக்கத்தில்
அளிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள டடவில்லைகளின் எண்ணிக்கையும் எத்தனையாவது
படவில்லை, படவில்லைப்பலகத்தில் தெரிவுசெய்யப்பட்டு தோன்றுகிறது என்பதையும்
காட்டும்.
b.
குறிப்புக்கள்(Notes): நிலைமைப்
பட்டியில் நடுவிலிருந்து வலப்பக்கமாக காணப்படும். இங்கு படவில்லைப்
பலகத்தில் தற்பொழுது தோன்றும் படவில்லையில் உள்ள தகவலுக்கு மேலதிகமான தகவல்களை
உள்ளீடு செய்து அளிக்கையை நிகழ்த்தும்போது கேட்போருக்கு தெரியாமல் நிகழ்த்துனரால்
அதனை பார்க்க முடியும்.
c.
படவில்லைத் தோற்றங்கள்(Slide Views): இது நிலமைப்பட்டியின் இடப்பக்கத்தில் காணப்படும்.
கணினி மற்றும் எறிவையில்(Projector) அளிக்கையின் தோற்றங்களை
மாற்றுவதற்கான வரைகலை குறியீடுகளை கொண்டிருக்கும். பொதுவாக நான்கு வகையான
தோற்றங்கள் உண்டு.
F சாதாரண தோற்றம் (Normal View): இதுவே இயல்புநிலைத் தோற்றமாகும். இத் தோற்றத்தில் படவில்லை வழிகாட்டிப்
பலகமும் படவில்லைப்பலகமும் தோன்றும். பொதுவாக அளிக்கை இத்தோற்றத்தில் வைத்தே
உருவாக்கப்படும்.
F படவில்லை வரிசையாக்கி
தோற்றம்(Slide Sorter View): இத் தோற்றத்தில் அளிக்கை கொண்டுள்ள சகல படவில்லைகளும்
சிறியனவாக சாளரத்தில் தோன்றும். மேலும் இது அளிக்கையின் பொதுவான தோற்றத்தை காட்டும்.
படவில்லைகளை இழுத்துவந்து விடுவதன் மூலம் விரைவாக இடமாற்றவும், அசைவூட்டங்கள்
மாறும் படவில்லை மாற்றங்களை சேர்க்கவும் நீக்கவும் பரிசோதிக்கவும் முடியும்.
மேலும் தேவையற்ற படவில்லைகளை நீக்கவும் முடியும்.
F வாசிப்பு தோற்றம்(Reading View): அளிக்கையை திருத்தத்துக்கு அல்லது மெருகூட்டுவதற்கான
கருவிகள் அல்லது கட்டளைப்பொத்தான்கள் மறைக்கப்பட்டு சாளரத்தில் படவில்லைகள்
மட்டும் புத்தகத்தின் பக்கங்கள் போல வாசிக்கக்கூடியதாக தோன்றும்.
F படவில்லைக் காட்சித்
தோற்றம் (Slide Show View): அளிக்கையானது பூரணப்படுத்தப்பட்ட பின்பு பார்ப்போருக்கு
எறிவையை பயன்படுத்தி உருவாக்க்கப்பட்டுள்ள வடிவமைப்புக்களுக்கு ஏற்ப அசைவூட்டங்கள்,
படவில்லை மாறல்கள் என்பவற்றுடன் நிகழ்த்துனரால் காட்டப்படும் தோற்றம் ஆகும்.
மேலும் இத் தோற்றத்தில் படவில்லைகளானது தாமாகவோ, நிகழ்த்துகைக் கருவி(Presenter), விசைப்பலகை
அல்லது சுட்டியின் உதவியுடனோ மாறிமாறித் தோன்றும்.
d.
உருப்பெருக்கி(Zoom): இது நிலைமைப்பட்டியின்
வலப்பக்கத்தில் காணப்படும்.. படவில்லைப்பலகத்தில் தோன்றும் படவில்லையை தேவைக்கேற்ப
பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ பயன்படும். மேலும் இதன் தோற்றமானது கிடையான ஒரு
நேர்கோட்டில் இடப்பக்கத்தில் கழித்தல் குறியீட்டையும் வலப்பக்கத்தில் கூட்டல்
குறியீட்டையும் இடையில் அங்குமிங்கும் அசைக்ககூடிய மிகச்சிறிய நிலைக்குத்தனா
கோட்டினையும் கொண்டிருக்கும்.
F “- ” இல் தொடர்ச்சியாக அழுத்துவதன்
மூலம் குறைக்கவும் “+” இல் தொடர்ச்சியாக அழுத்துவதன் மூலம் கூட்டவும் முடியும். மேலும்
நிலைக்குத்தான கொட்டில் அழுத்தி அங்குமிங்கும்
அசைப்பதன் மூலமும் தோற்றத்தை கூட்டிக்குறைக்கலாம்.
F உருப்பெருக்கியின் (Zoom) வலப்பக்கத்தில் 67%” என குறிப்பிடப் பட்டிருப்பதானது படவில்லைப்
பலகத்தில் காணப்படும் தெரிவு செய்யப்பட்டுள்ள படவில்லையின் தற்போதைய உருப்பெருக்க
அளவு ஆகும்.
F உருப்பெருக்கியின்
வலப்பக்கத்தில் சிறிய சதுரமொன்றினுள் நான்கு மூலைகளையும் நோக்கியவாறு
அம்புக்குறியையும் கொண்ட வரைகலைக் குறியீடு காணப்படும். இது தற்பொழுது திரையில் தோன்றும்
திருத்தத்துக்கு அல்லது மெருகூட்டுவதற்கான கருவிகள் இருக்கக் கூடியதாக படவில்லையின்
தோற்ற அளவினை உச்ச பெறுமானத்துக்கு கொண்டு வருவதற்கான கருவி ஆகும்.
குறிப்பு:
இவ் உச்ச பெறுமானத்தை விட
கூட்டினால் தோன்றும் படவில்லையின் ஒரு பகுதி மறையும். குறைத்தால் திருத்தத்துக்கு
அல்லது மெருகூட்டுவதற்கான கருவிகளுக்கும் படவில்லைக்குமிடையலான இடைவெளி கூடும்.
No comments:
Post a Comment