கலங்களை வர்ணங்களால்
நிரப்புதல்.
1.
வர்ணங்களால் நிரப்பவேண்டிய கலத்தை அல்லது கலங்களை கலச்சுட்டியை பயன்படுத்தி
தெரிவுசெய்க.
2.
நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் சரிவான
வர்ண வாளிக்கு கிழே தடித்த கிடையான வர்ணக்கோட்டை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு
அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
3.
தோன்றும் கிழ்நோக்கிய வர்ணங்களை கொண்ட பட்டியலில் விருப்பமான வர்ணத்தை
தெரிவுசெய்க.
4.
குறிப்பிட்ட கலம் அல்லது கலங்கள் தெரிவுசெய்யப்பட்ட நிறத்தினால் நிரப்பப்படும்.
நிரப்பபட்ட வர்ணத்தை
நீக்குதல்.
1.
நிரப்பபட்ட வர்ணம் நீக்கவேண்டிய கலத்தை அல்லது கலங்களை கலச்சுட்டியை
பயன்படுத்தி தெரிவுசெய்க.
2.
நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் சரிவான
வர்ண வாளிக்கு கிழே தடித்த கிடையான வர்ணக்கோட்டை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு
அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
3.
தோன்றும் கிழ்நோக்கிய வர்ணங்களை கொண்ட பட்டியலின் கிழ்லுள்ள நிரப்பலை நீக்கு
என்ற குறிச்சொல்லில் அழுத்துக.
4.
குறிப்பிட்ட கலம் அல்லது கலங்கலில் நிரப்பப்பட்டிருக்கும் வர்ணம்
நீக்கப்படும்.
கலங்களின் நிபந்தனையுடனான
வடிவமைப்பு
தரவின் போக்குகள் மற்றும்
முக்கியமான மதிப்புக்களை வேறுபடுத்தி காட்ட வர்ணங்கள், படவுருக்களை நிபந்தனைகளுக்கேற்ப
பயன்படுத்துதல் ஆகும்.
C என்ற தலையங்கத்தை
கொண்ட கலங்களில் உள்ளிடு செய்யப்படும் பாடமொன்றிக்காக பெறப்பட்ட புள்ளிகளில் 40 குறைவான புள்ளிகளை கொண்ட
கலத்தில் இடப்படும் புள்ளியானது சிவப்பு நிற எழுத்துருவில் அமையுமாறு கலங்களை
வடிவமைக்க..
வழிமுறை
1.
எழுத்துருக்களில் மாற்றத்தை ஏற்ப்படுத்த வேண்டிய C தலையங்கத்தை
உடைய கலங்களை கலச்சுட்டியை பயன்படுத்தி
தெரிவு செய்க
2.
முகப்பு நாடாவை (“Home Ribbon”) தெரிவு செய்து நடைகள் (“Style”) தொகுப்பிலுள்ள நிபந்தனை
வடிவமைப்பை சொடுக்குக.
3.
தோன்றும் கிழ்நோக்கிய பட்டியில் “கலங்களின் விதிகளை தனிமைப்படுத்து” வை தெரிவு
செய்து தொடர்ந்து வரும் உதவிப்பட்டியில் “குறைவானது...” என்பதை தெரிவு செய்க.
4.
தோன்றும் சொல்லாடல் பெட்டியில் வெற்றிடமாக உள்ள உரைப்பெட்டியில் 40 என உள்ளீடு
செய்க. பின்னர் “உடன்” என்ற சொல்லை தொடர்ந்துவரும் கூட்டு
பெட்டியிலிருந்து சிவப்பு உரையை தெரிவு செய்து சரி(“OK”) யை சொடுக்குக.
5.
75, 45, 39, 45, 31, 18, 44, மற்றும் 40 போன்ற எண்களை
உள்ளிடு செய்து விளைவை அவதானிக்குக.
கலங்களை அட்டவணையாக
வடிவமைத்தல்
கலங்கலானது அட்டவணையை
போல் உருவாக்கப்பட்டிருந்தாலும் அவை அவ்வாறு தோற்றமளிப்பதில்லை.
இரண்டு முறைகளில்
அட்டவணையை உருவாக்கலாம்.
I.
முன்வரையறுக்கப்பட்ட அட்டவணைகளை பயன்படுத்தல்
1.
அட்டவனையை உருவாக்க வேண்டிய கலங்களின் வீச்சை கலச்சுட்டியை பயன்படுத்தி தெரிவு
செய்க
2.
முகப்பு நாடாவை (“Home Ribbon”) தெரிவு செய்து நடைகள் (“Style”) தொகுப்பிலுள்ள அட்டவணையாக
வடிவமையை சொடுக்குக.
3.
பலவண்ணங்களில் அட்டவணைகள் தோன்றும். விரும்பிய அட்டவணை அமைப்பை தெரிவு செய்க.
4.
அட்டவணையாக வடிவமை (Format as Table) என்ற தலையங்கத்துடனான
சொல்லாடல் பெட்டியொன்று தோன்றும். அதில் உங்களுடைய அட்டவணைக்கான தரவுகள்
எங்குள்ளது (Where is the Data for your Table?) என்ற வசனத்துக்கு கிழுள்ள உரைப்பெட்டியிலுள்ள
கல வீச்சினை உறுதிப்படுத்துக.
5.
மேலும் தெரிவுசெய்யப்பட்ட கலவீச்சினுள் நிரல்களின் தலையங்கங்கள் இருந்தால் எனது அட்டவணை தலையங்கங்களை கொண்டுள்ளது (My Table has Headers) என்ற வசனத்தின் முன்னாலுள்ள தேர்வுப்பெட்டியை
தெரிவுசெய்து சரி (“OK”) ஐ தெரிவு செய்க.
6.
நாம் தெரிவு செய்த அமைப்பில் அட்டவணை மாற்றமடைந்து இருக்கும்.
குறிப்பு:
எனது அட்டவணை
தலையங்கங்களை கொண்டுள்ளது (My Table has Headers) என்ற வசனத்தின் முன்னாலுள்ள தேர்வுப்பெட்டியை
தெரிவுசெய்யப்பட்டிருந்தால் அட்டவணையின் முதலாவது நிரைக்கு மேலே புதிய நிரையோன்று
உருவாக்கப்பட்டு நிரல்வழி வடிகட்டல் மற்றும் வரிசைப்படுத்தலுக்கான விருப்ப
தெரிவுகள் அட்டவணையின் ஒவ்வொரு நிரலிலும் உருவாகும். தெரிவுசெய்யப்படாமல்
இருந்தால் அட்டவணையின் முதலாவது நிரையில் நிரல்வழி வடிகட்டல் மற்றும்
வரிசைப்படுத்தலுக்கான விருப்ப தெரிவுகள் ஒவ்வொரு நிரலிலும் உருவாகும்.
அட்டவணையில் நிரல் மற்றும்
நிரைகளை சேர்த்தல் அல்லது நீக்குதல்.
1.
அட்டவணையின் வலதுபக்க கிழ்மூலைக்கு சுட்டிக்குறியை கொண்டுசெல்லும்போழுது
சுட்டிக்குறியானது மூலைவிட்டம் வழியேயான ஒரு கோடாக மாறும்.
2.
இந்நிலையில் சுட்டியின் இடப்பக்க பொத்தானை அழுத்தியபடி கிழ்நோக்கி இழுத்தால்
நிரைகளின் எண்ணிக்கை கூடும். வலம்நோக்கி இழுத்தால் நிரல்களின் எண்ணிக்கை கூடும்.
3.
மேல்நோக்கி நகர்த்தினால் நிரைகளின் எண்ணிக்கை குறையும். இடம்நோக்கி நகர்த்தினால்
நிரல்களின் எண்ணிக்கை குறையும்.
குறிப்பு:
இயல்புநிலையில் அட்டவணையின்
இறுதி நிரலுக்கு அருகிலோ அல்லது இறுதி நிரைக்கு அருகிலோ தரவு அல்லது தலையங்கத்தினை
உள்ளீடு செய்யும்பொழுது அட்டவணையானது அதனை தன்னிச்சையாக நிரல் அல்லது நிரையாக
சேர்த்துக்கொள்ளும்.
அட்டவணையின் நடையினை
மாற்றல்.
1.
நடையினை மாற்றவேண்டிய அட்டவணையினை கொண்டுள்ள விரிதாளை தெரிவுசெய்து
அட்டவணையிலுள்ள ஓர் கலத்தினை தெரிவுசெய்க.
2.
நாடாவின் இறுதியில் வடிவமைப்பு (Design) என்ற புதிய தாவல் தோன்றும். அதனை தெரிவுசெய்க.
3.
வடிவமைப்பு (Design) தாவலில் அட்டவணை நடைகள் (Table Style) என்ற குழுவில் வலப்பக்கத்தில்
கிழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தையும் அதன்மேலே கிடையான கோட்டினையும் கொண்ட வரைகலை
குறியீட்டில் அழுத்துக.
4.
விதம்விதமான நடைகளிலான அட்டவணை வடிவங்களை கொண்ட கிழ்நோக்கிய பட்டியல் ஒன்று
தோன்றும். விரும்பிய நடையினை தெரிவுசெய்க.
5.
தெரிவுசெய்யப்பட்ட நடைக்கு அட்டவணை மாற்றமடையும்.
அட்டவணையின் குறிப்பிட்ட
நடையின் தெரிவுகளை மாற்றல்:
அட்டவணையோன்றின் நடையானது
பின்வரும் விருப்பத்தெரிவுகளை மாற்ற அனுமதிக்கிறது.
F தலையங்க நிரையை (Header Row) சேர்த்தல் மற்றும்
நீக்கல்
F தொகுப்புக்குட்பட்டநிரையை
(Total Row) சேர்த்தல் மற்றும்
நீக்கல்: இதன் மூலம் உபகூட்டுதொகையை (Subtotal) போன்று குறிப்பிட்ட நிரலின் கணித்தல் செய்கையை
செய்யமுடியும்.
F பட்டை நிரல் அல்லது நிரை (Banded Row or Banded Column): அட்டவணையிலுள்ள
நிரல்களையோ நிரைகளையோ வேறுபடுத்தி இலகுவாக அறிவதற்காக ஒன்றுவிட்ட ஒரு நிரையை
அல்லது நிரலை கூடிய நிறமூட்டல்.
F முதல் நிரல் (First Column) அல்லது இறுதி நிரல் (Last Column):ஒரு அட்டவணையின் முதல்
நிரலையும் இறுதி நிரலையும் இலகுவாக வேறுபடுத்தி அறிவதற்காக அதிலுள்ள தரவுகளை
தடித்த எழுத்தாக்கல்.
F வடிகட்டுப் பொத்தான்கள்(Filter Buttons):வடிகட்டல்
மற்றும் வரிசையாக்கலை செய்வதற்கான பொத்தான்களை நிரல்களின் தலையங்கங்களில் தோன்ற
அல்லது மறைய செய்தல்
அட்டவணையோன்றுக்கு மொத்தப்பெறுமதி
கணிப்பதற்கான தொகுக்கப்பட்ட நிரையை உருவாக்கல்:
1.
மொத்தப்பெறுமதி கணிப்பிடவேண்டிய அட்டவணையினை கொண்டுள்ள விரிதாளை தெரிவுசெய்து
அட்டவணையிலுள்ள ஓர் கலத்தினை தெரிவுசெய்க.
2.
நாடாவின் இறுதியில் வடிவமைப்பு (Design) என்ற புதிய தாவல் தோன்றும். அதனை தெரிவுசெய்க.
3.
வடிவமைப்பு (Design) தாவலில் அட்டவணை நடைத் தெரிவுகள் (Table Style Option) என்ற குழுவில் மொத்த நிரை என்ற சொல்லுக்கு முன்னாலுள்ள
தெரிவுப்பெட்டியை தெரிவுசெய்க.
4.
அட்டவணையின் கிழே இறுதி நிரையாக மொத்த பெறுமதி என்ற குறிச்சொல்லுடன் ஓர் புதிய
நிரை உருவாகும். மொத்தப்பெறுமதி கணிக்க வேண்டிய நிரலை அல்லது நிரல்கலின் இறுதி நிரையிலுள்ள
கலத்தை ஒவ்வொன்றாக தெரிவுசெய்க.
5.
ஒவ்வொரு கலத்தையும் தெரிவுசெய்யும் பொழுது அதன் வலப்பக்கத்தில் கிழ்நோக்கிய
ஒரு முக்கோண வடிவ குறியீடு தோன்றும். அதனை அழுத்தி தோன்றும் கிழ்நோக்கிய
பட்டியலிலிருந்து பொருத்தமான சார்பினை தெரிவுசெய்க.
6.
சார்பு தெரிவுசெய்யப்பட்டவுடன் அதற்குரிய பெறுமதி கணிக்கப்பட்டு அக்கலத்தில்
தோன்றும்.
தரவை நீக்காது அட்டவணை
வடிவமைப்பை மட்டும் நீக்கல்
1.
அட்டவணை வடிவமைப்பை நீக்கவேண்டிய அட்டவணையினை கொண்டுள்ள விரிதாளை தெரிவுசெய்து
அட்டவணையிலுள்ள ஓர் கலத்தினை தெரிவுசெய்க.
2.
நாடாவின் இறுதியில் வடிவமைப்பு (Design) என்ற புதிய தாவல் தோன்றும். அதனை தெரிவுசெய்க.
3.
வடிவமைப்பு (Design) தாவலில் கருவிகள் (Tools) என்ற குழுவில் வரம்புக்கு
மாற்று (Convert to range) என்ற சொல்லைக் கொண்ட
வரைகலைக் குறியீட்டில் அழுத்துக.
4.
அட்டவணையின் வடிவமைப்பை மாற்றுவதற்கான வேண்டுகோளை உறுதிப்படுத்துவதற்கான
சொல்லாடல் பெட்டி தோன்றும். சரி(OK) என்ற பொத்தானை அழுத்துக.
5.
அட்டவணையின் வடிவமைப்பு நீங்கி சாதாரண தோற்றத்தில் விரிதாளில் தரவுகள்
காணப்படும்.
II.
விருப்பம் போல் அட்டவணைகளை உருவாக்கல்.
1.
அட்டவனையை உருவாக்க வேண்டிய கலங்களின் வீச்சை கலச்சுட்டியை பயன்படுத்தி தெரிவு
செய்க
2.
முகப்பு நாடாவை (“Home Ribbon”) தெரிவு செய்து நடைகள் (“Format”) தொகுப்பிலுள்ள அட்டவணையாக
வடிவமையை சொடுக்குக.
3.
முகப்பு நாடவை (“Home Ribbon”) தெரிவு செய்து வலப்பக்கத்தில் கலங்கள் தொகுப்பிலுள்ள
வடிவமைப்பு (“Format”) இல் உள்ள கீழ்நோக்கிய அம்புக்குறியை சொடுக்குக.
4.
அதில் கலங்களை வடிவமை(“Format
Cells”) இல் சொடுக்குக.
5.
தோன்றும். ஓர் சொல்லாடல் பெட்டியில் கரை (Boarder) என தலையங்கம் இடப்பட்ட தாவலை
(Tab) ஐ தெரிவு செய்க.
6.
நடை என்ற தலையங்கம் இடப்பட்ட பகுதியில் கரையின் வடிவத்தையும் வண்ணம் என்ற
தலையங்கம் இடப்பட்ட பகுதியில் கரையின் வர்ணத்தையும் தெரிவு
செய்து பின்னர் கரை என்ற தலையங்கம் இடப்பட்ட பகுதியில் உரிய கரையையும் தெரிவு
செய்க
7.
இவ்வாறு அனைத்துக்கரைகளும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சரியை(“OK”) சொடுக்குக
8.
தெரிவுசெய்யப்பட்ட கலங்களுக்கு தெரிவுசெய்யப்பட கரைகள் உருவாகி இருக்கும்.
தொடரும்
No comments:
Post a Comment