எம். எஸ். வோர்ட்
2013 (MS Word 2013) மென்பொருள் கொண்டுள்ள பண்புக்கூறுகள்
அல்லது வசதிகள்
1.
ஆவணமொன்றில் எழுத்துருக்களின் அளவு, வகை, மொழி, நிறம், மற்றும் நேராக்கள்
போன்றவற்றை விரும்பியவாறு மாற்றலாம்.
2.
Word Count ஐ பயன்படுத்தி ஆவணம்
கொண்டுள்ள சொற்கள், வரிகள், பந்திகள் மற்றும் பக்கங்களின் எண்ணிகையை அறிந்து
கொள்ளலாம்.
3.
வழிகாட்டிப் பலகத்தை பயன்படுத்தி பெருந்தொகையான பக்கங்களை கொண்ட ஆவணத்தில்
படங்களை, வரைபுகள் சூத்திரங்கள், மற்றும் அட்டவணைகளை இலகுவாக பார்க்கலாம்.
4.
நடைகளை (Style) பயன்படுத்தி
எழுத்துருக்களை விரைவாக வடிவமைக்கலாம்
5.
Find and Replace ஐ பயன்படுத்தி ஆவணத்தின்
பல இடங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரே சொல்லில் ஏற்ப்பட்ட பிழைகளை இலகுவாக நீக்கலாம்
6.
படங்கள், அட்டவணைகள், உருவங்கள், வரைபுகள், சூத்திரங்கள் மற்றும் குறியீடுகளை
உள்ளீடு செய்யலாம்.
7.
ஒன்லைன் (Online) காணொளிகள் மற்றும் புகைப்படங்களை உள்ளிடு செய்யலாம்.
8.
மெயில் மேஜை (Mail Merge) பயன்படுத்தி ஒரே கடிதத்தை பலருக்கு அனுப்பக்கூடியவாறு
உருவாக்கலாம்.
9.
ஆவணங்களை Online இல் பகிரலாம்.
10.
இலக்கண மற்றும் சொல்பிழை நீக்கியை பயன்படுத்தி ஆவணத்தில் ஏற்படும் இலக்கண
மற்றும் சொல்பிழைகளை நீக்கலாம்.
11.
சொல் களஞ்சியங்களை பயன்படுத்தி ஆவணத்தில் உள்ள தெரியாத சொல்லொன்றுக்கு ஒத்த
மற்றும் எதிர்கருத்துள்ள சொற்களை அறியலாம்.
12.
Header & Footer மற்றும் Footnote & Endnote என்பவற்றை பயன்படுத்தி குறிப்புரைகளை வழங்கலாம்.
13.
பக்க வடிவமைப்புக்களை பயன்படுத்தி துண்டுப்பிரசுரங்கள், அறிவிப்புகள், புத்தக
முகப்புகள் என பலவகையான அளவுகளில் ஆவணங்களை தயாரிக்கலாம்.
14.
ஆவணத்தை படித்தல் முறைமை, அச்சுத் தளவமைப்பு மற்றும் வலைத் தளவமைப்பு என
விரும்பிய வடிவத்தில் தோன்ற செய்து பயன்படுத்தலாம்.
15.
Restrict Editing ஐ பயன்படுத்தி ஆவணத்தில்
புதிய வடிவமைப்பு மாற்றத்தை ஏற்ப்படுத்துதலை தடுக்கலாம்.
16.
மிகை இணைப்பு(Hyperlink) வசதியை பயன்படுத்தி ஆவணத்துக்கு படங்கள், வலைப்பக்கங்கள்,
காணோளிகளை இணைப்பதன் மூலம் வலுச்சேர்க்கலாம்.
மேலும் ஆவணத்தின் அளவு (Size) இதனால் குறையும்.
மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஐ திறத்தல்
இயக்க முறைமை மாறுபடும்
பொழுது மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஐ திறக்கும் முறையும் மாறுபடும்.
F
விண்டோஸ் 8/8.1 இல் மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஐ திறத்தல்
1.
விசைப்பலகையில் விண்டோஸ் குறியீடு இடப்பட்ட விசையினை (“Windows
Key”) அழுத்துக. பெரியதும்
சிறியதுமாக பல வரைகலை குறியிடுகளை கொண்ட திரை ஒன்று உருவாகும்.
2.
“Word 2013” என எழுத்துப்பிழை இன்றி உள்ளீடு
செய்க. வலப்பக்கத்தில் தேடல் என்ற தலையங்கத்துக்கு கிழ் “W” வரைகலை குறியீட்டை “Word 2013” என்ற சொல்லும் இணைந்த சுட்டுக்குறி ஒன்று தோன்றும். அதில் அழுத்துக.
3.
மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஆரம்பதிரை தோன்றும். அதில் “வேற்று ஆவணம்” ஐ
தெரிவு செய்க.
4.
மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 சொல் ஆவணம் தோன்றும்.
F
விண்டோஸ் 7 இல் மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஐ திறத்தல்
1.
இடப்பக்க மூலையிலுள்ள விண்டோஸ் குறியீடு இடப்பட்ட வட்டவடிவமான வரைகலை
குறியீட்டில் (“Start Button”) அழுத்துக
2.
மேலும் பட்டியில் செயலோளுங்குவை “Programs” தெரிவுசெய்க.
3.
எம்.எஸ். ஆபீஸ் 2013 என்பதை தெரிவு செய்க.
4.
வோர்ட் 2013 என்பதை தெரிவு செய்கை.
5.
மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 சொல் ஆவணம் தோன்றும்.
சொல் ஆவணத்தின் பெயர்
சொல் ஆவணத்தின் பெயரானது
ஆவணத்தின் மேல் பகுதியில் தலைப்பு பட்டியின் நடுவில் காணப்படும். புதிதாக ஒரு
ஆவணத்தை திறந்தால் அதன் பெயர் “Document 1” எனக் காணப்படும். அனால்
விரும்பிய பெயருக்கு மாற்ற முடியும்.
சொல் ஆவணத்தின் பெயரினை
மாற்றல்.
சொல் ஆவணத்தின் பெயரை
மாற்றுதல் என்பது ஆவணத்தை வேறு பெயரில் சேமித்தல் ஆகும். உதாரணமாக ஆவணத்தின் பெயர்
“Document 1” என இருப்பின் அதனை “Covering Letter” என்ற பெயரில் சேமிக்கும்
பொழுது “Document 1” என்ற பெயரானது “Covering Letter” என்ற பெயருக்கு
மாற்றமடையும். அனால் வேறு எதாவது ஒரு பெயரில் இருந்தால் பழைய பெயரில் ஒரு ஆவணமும்
புதிய பெயரில் ஒரு ஆவணமும் என இரண்டு ஆவணங்கள் உருவாகும்.
மைக்ரோசாப்ட் வோர்ட் 2013 ஐ சேமித்தல்
1.
ஆவணத்தின் மேல் பக்கத்தில் காணப்படும் நாடாவின் (“Ribbon”) இடதுபக்கத்தில் உள்ள
கோப்பு(“File”) என பெயரிடப்பட்ட தாவலில்
சொடுக்கவும்.
2.
தோன்றும் திரையில் இவ்வகையில் சேமி(“Save as”) என்ற குறிச்சொல்லில்
அழுத்தவும்.. பின்னர் தோன்றும் திரையில் இவ்வகையில் சேமி (“Save as”) என்ற குறிச்சொல்லின் கீழுள்ள கணினி (“Computer”) இல் சொடுக்கவும்.
3.
உலாவு (“Browse”) பொத்தானில் அழுத்தி தோன்றும் உரையாடல் சட்டத்தில் ஆவணத்தின்
சேமிக்கப்பட வேண்டிய இடத்தினை தெரிவு செய்க.
4.
கோப்பு பெயர் (“File Name”) என்ற குறிச்சொல்லை தொடர்ந்துள்ள பனுவல் பெட்டியில் (“Text Box”) உள்ள “Doc1.docx” என்ற பெயரினை
அழித்து ஆவணத்தின் புதிய பெயரினை உள்ளிடு செய்க.
5.
சேமி (“Save”) என்ற பொத்தானை அழுத்தவும்.. மீண்டும் ஆவணத்தின் முகப்பு
தோன்றும். அதில் ஆவணத்தின் பெயர் மாற்றமடைந்திருக்கும்.
குறிப்பு:
ஏற்கனவே
சேமிக்கப்பட்டுள்ள ஆவணத்தின் பெயரினை மாற்றுவதற்கு இயக்க முறைமை வசதியான (“Operating System Facility”) மறுபெயரிடலை (“Rename”) பயன்படுத்தலாம்.
இவ்வகையில் சேமி மற்றும்
சேமி(“Save As and Save”)
இவை இரண்டும் ஆவணமொன்றை
சேமிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும் ஆவணமொன்றை முதல் முறையாக
சேமிக்கும் பொழுது இவ்வகையில் சேமி (“Save As”) என்பதை பயன்படுத்த வேண்டும்.
அனால் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் எதாவது மாற்றங்கள் செய்து மீண்டும் அவ்
ஆவணத்தை சேமிக்கும் பொழுது சேமி (“Save”) என்பதை பயன்படுத்த
வேண்டும்.
குறிப்பு:
ஆவணமொன்றை முதல் முறையாக
சேமிக்கும் பொழுது சேமி (“Save”) என்பதை பயன்படுத்தினாலும் அது இவ்வகையில் சேமி (“Save As”) என்பதன்
செய்கையையே செய்யும். அனால் ஏற்கனவே சேமிக்கப்பட்டுள்ள ஆவணத்தில் எதாவது
மாற்றங்கள் செய்து மீண்டும் அவ் ஆவணத்தை சேமிக்கும் பொழுது இவ்வகையில் சேமி (“Save As”) என்பதை பயன்படுத்தினால்
அது புதிய ஆவணமாக சேமிக்க முயற்சிக்கும். அதே கோப்பு பெயரை கொடுத்தால் மேலெழுத
முயற்சிக்கும். வேறு பெயர் கொடுத்தால் அந்த பெயரில் சேமிக்கும்.
இயல்புநிலை
சேமிப்பிடம் (“Default Location”)
ஓர்
ஆவணத்தை முதல் முறையாக சேமிக்கும் பொழுது அது நாம் அதன் இருப்பிடத்தில் எதுவித செய்யாமல்
சேமித்தால் கணினி ஓர் இடத்தை தெரிவுசெய்து ஆவணத்தை சேமிக்கும். இவ்விடம்
இயல்புநிலை சேமிபபிடம் (“Default Location”) எனப்படும்.
எம்.
எஸ். வோர்டில் இயல்புநிலை சேமிப்பிடமானது குறிப்பிட்ட பயனரின் ஆவண காப்பிடம் (“Document”) ஆகும்.
முகப்பு தாவல் (Home Tab)
முகப்பு தாவலில்
பின்வரும் குழுக்கள் சொல் செயலாக்கல் மென்பொருளுக்கு பிரத்தியோகமானவை
1.
பத்தி(Paragraph): சொல்கள்,
பத்திகள், வரிகளுக்கு இடையிலான இடைவெளிகளை மாற்றவும் குண்டுகுறிகள் &
இலக்கங்களை வசனத்தின் முன் செருகல் போன்ற செயல்பாடுகளுக்கு இது பயன்படும்.
2.
நடைகள் (Style):எழுத்துருக்களின் அளவு, வகை, நிறம் போன்ற வடிவமைப்புக்களை முதலே ஒரு சேர்க்கையாக
உருவாக்கி வைத்து தேவையான போது தெரிவு செய்யப்பட்ட உரைக்கு பயன்படுத்த உதவும்.
உரையின் திசையமைவு (Text Orientation)
உரையின்
திசையமைவானது ஓர் உருவத்தை உள்ளிடு செய்து அதற்குள் உரையினை பதிவு செய்யும் பொது
பயன்படுத்த முடியும். இது உருவத்தை உள்ளிடு செய்யும் பொழுது தோன்றும் விசேட தாவலில்
உரை என்ற குழுவில் மேல்பகுதியில் உரைதிசை
என்ற பெயரில் காணப்படும் மேலும் இதில்
கிடைமட்டம் அனைத்து உரையையும் 900 (பாகையால்)
சுழற்று மற்றும் அனைத்து உரையையும் 2700 (பாகையால்) சுழற்று என்ற மூன்று விருப்ப தெரிவுகளும்
காணப்படும்.
அளிக்கைகளில் இவ்
வசதி முகப்பு தாவலில் பந்தி (Paragraph) என்ற குழுவில்
வலதுபக்க மேல் மூலையில் காணப்படும் மேல் கூறப்பட்ட மூன்றுடன் அடுக்கிய என்ற
தெரிவும் காணப்படும்.
MS Word இல் பின்வருமாறு ஆவணக்
குண்டுக்குறிகளை செருகும் விதத்தை சுருக்கமான படிமுறைகளில் எழுதுக? (PMA III – 2006 (I) 2007)
Name of the Branch
>
Confidential
>
Computer
>
Evaluation
1.
School Examinations
2.
Agency Examinations
i.
ஆவணத்தில் மேற்படி வடிவமைப்பு செய்யவேண்டிய இடத்தினை தெரிவு செய்க.
ii.
முகப்பு தாவலில் பந்தி குழுவிலுள்ள குண்டுக்குறி இடுவதற்கான குறியீட்டுக்கருகில்
உள்ள மிகச்சிறிய கிழ்நோக்கியமுக்கோண வடிவ குறியீட்டில் அழுத்துக.
iii.
தோன்றும் பட்டியலில் பொருத்தமான குறியீட்டின் மீது அழுத்துக
iv.
முதல் மூன்று சொற்களையும் ஒன்றன்பின் ஒன்றாக உள்ளீடு செய்து நான்காவது
சொல்லுக்காக உல்வழிச் சாவியை அழுத்துக.
v.
முகப்பு தாவலில் பந்தி குழுவிலுள்ள வலம் நோக்கி பந்தியை உள்தள்ளளுக்கு
உட்படுத்துவதற்கான (increase indent) குறியீட்டின் மீது
அழுத்துக.
vi.
மீண்டும் முகப்பு தாவலில் பந்தி குழுவிலுள்ள வரிகளுக்கு இலக்கமிடுவதற்க்கான குறியீட்டின்
மீது அழுத்துக.
vii.
தொடர்ந்து ஏனைய இரு சொற்களையும் உள்ளீடு செய்க.
தொடரும்
No comments:
Post a Comment