கணினிக்கு தீங்கிழைக்கக் கூடிய அல்லது செயல்பாட்டை
நிறுத்தக்கூடிய மென்பொருட்கள் நச்சுநிரல் எனப்படும்
நச்சு நிரல் தானே உருவாகக்கூடியது அல்ல. அவை நன்கு கற்றுக்தேர்ந்த
மென்பொருள் வல்லுநர்களால் கெட்ட நோக்கத்திற்காக (bad aim)உருவாக்கப்
பட்டவைகளாகும்.
வைரஸ்
தோற்றிய அறிகுறிகள்
1.
கணினியின் வேகம் குறைந்து காணப்படும்.
மேலும் மென்பொருள் சரிவர இயங்காது.
2.
கணினி அடிக்கடி செயலிழந்து போகும் அல்லது
தானாகவே மீள்தொடக்க செயல்பாட்டிற்கு உட்படும்.
3.
ஆவணத்தை சிறந்த முறையில் அச்சிட
முடியாது. விளங்காத எழுத்துக்களில் அச்சிடப்படும்.
4.
புதிது புதிதாக பிழைச் செய்திகள் திரையில்
தோன்றும். திடீர் திடிரென தேவையில்லாமல் வினோத ஒலி கேட்கும்.
5.
கோப்புக்கள் மற்றும் கோப்புறைகள்
மறைந்து போகும் அல்லது அனைத்தும் பணிகுறிகளாக (short-cut) மாறியிருக்கும்.
6.
அண்மையில் திறந்த ஆவணங்களுக்கு
இரண்டிரண்டு விரிவுகள் தோன்றலாம்.
7.
கோப்புக்கள் மற்றும் கோப்புறைகள்
அனைத்தும் .exe கோப்புக்களாக மாறியிருக்கும்.
8.
நச்சு நிரல் எதிர்ப்பி திடிரென
செயலிழந்து போகும். அனால் மீண்டும் செயல்பட வைப்பது கடினம்.
9.
முக்கியமான கோப்புக்கள் உங்களுக்கு
தெரியாமல் அல்லது உங்கள் அனுமதியின்றி நீக்கப்பட்டிருக்கும்.
10.
கோப்புக்கள் மற்றும் கோப்புறைகள்
பிரதிபண்ணப்பட்டிருக்கும்.
வைரஸ்
கணினியை வந்தடையும் முறைகள்
1.
அங்கீகரிக்கப்படாத வலைத்தளங்களுக்கு
செல்லல்
2.
மென்பொருள் crack களை நிறுவுதல் அல்லது பதிவிறக்கம்
செய்தல்.
3.
நடைமுறை சாத்தியமற்ற வேலைகளை
செய்யக்கூடிய வலைத்தளங்கள் மற்றும் மென்பொருட்களை தேடுதல்.
4.
பிறருடைய பளிச்சீட்டு நினைவகங்களை
பயன்படுத்தல்
5.
தரமில்லாத அல்லது தீய நோக்கத்தில்
உருவாக்கப்பட்ட மென்பொருளை நிறுவுதல்.
வைரஸ்
தாக்கத்தை தடுத்தல்.
1.
சிறந்த நச்சுநிரல் எதிர்ப்பியை
பயன்படுத்தல்
2.
நச்சுநிரல் எதிர்ப்பியை ஒவ்வொரு நாளும் இணையவழி
மேம்படுத்தல்
3.
பிறருடைய பளிச்சீட்டு நினைவகங்களை
பயன்படுத்துமுன் Scan செய்தல்
4.
பாதுகாப்பற்ற அல்லது அங்கிகரிக்கப்படாத
வலைப்பக்கங்களுக்கு செல்வதை தவிர்த்தல்
5.
பாதுகாப்பற்ற அல்லது அங்கிகரிக்கப்படாத
மென்பொருட்களை நிறுவுவதை தவிர்த்தல்
No comments:
Post a Comment