Sunday, November 18, 2018

எம். எஸ். எக்ஸ்செல் 2013 (MS Excel 2013) பகுதி 3


கலங்களின் வடிவமைப்பு
இயல்புநிலையில் எல்லாக் கலங்களும் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும்.

குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவை மாற்றல்
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி எழுத்துருவை மாற்ற வேண்டிய கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் லதா, பாமினி Arail, Times New Roman போன்ற எதாவது ஒரு எழுத்துருவின் வகையை தெரிவிக்கும் இணைப்புப் பெட்டியின் வலப்பக்கத்தில் கிழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்துக.
3.        கிழ்நோக்கிய பட்டியல் ஒன்று தோன்றும். அதில் விரும்பிய எழுத்துருவின் வகையை தெரிவுசெய்க.
4.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு குறிப்பிட்ட எழுத்துருவுக்கு மாற்றமடைந்திருக்கும்.

குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவின் அளவை மாற்றல்
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி எழுத்துருவை மாற்ற வேண்டிய கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் இலக்கத்தினை குறிக்கும் இணைப்புப் பெட்டியின் வலப்பக்கத்தில் கிழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்துக.
3.        கிழ்நோக்கிய பட்டியல் ஒன்று தோன்றும். அதில் விரும்பிய எழுத்துருவின் அளவை தெரிவுசெய்க.
4.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவின் அளவு குறிப்பிட்ட அளவுக்கு மாற்றமடைந்திருக்கும்.

குறிப்பு:
நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் இலக்கத்தினை குறிக்கும் இணைப்புப் பெட்டிக்கு அருகில் உள்ள பெரிய “A” அழுத்துவதன் மூலம் எழுத்துருவின் அளவை கூட்டவும் சிறிய ”A” அழுத்துவதன் மூலம் எழுத்துருவின் அளவை குறைக்கவும் முடியும்.

குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவின் நிறத்தை மாற்றல்
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி எழுத்துருவின் நிறத்தை மாற்ற வேண்டிய கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் “A” என்ற குறியீட்டையும் அதன் கிழ் கிடையாக வர்ண குரியிட்டையும் கொண்ட வரைகலைக் குறியீட்டின் வலதுபக்கத்தில் கிழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்துக.
3.        பல நிறங்களை கொண்ட கிழ்நோக்கிய பட்டியல் ஒன்று தோன்றும். விரும்பிய நிறத்தினை தெரிவுசெய்க. மேலதிக நிறங்கள் தேவைப்படின் மேலும் வண்ணங்கள் என்பதை தெரிவுசெய்க.
4.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவின் நிறம் குறிப்பிட்ட நிறத்துக்கு மாற்றமடைந்திருக்கும்.

குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவை தடித்த எழுத்தாக்கல்.
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி தடித்த எழுத்தாக்க வேண்டிய எழுத்துருவை கொண்ட கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் கிழே இடதுபக்கத்தில் “B” என்ற தடித்த எழுத்தில் அழுத்துக.
3.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு தடித்ததாக மாற்றமடைந்திருக்கும்.

குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவை வலப்பக்கமாக சரித்தல்.
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி வலப்பக்கமாக சரிக்க வேண்டிய எழுத்துருவை கொண்ட கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் கிழே இடதுபக்கத்தில் சரிந்த “I” என்ற எழுத்தில் அழுத்துக.
3.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு வலப்பக்கமாக சரிந்ததாக மாற்றமடைந்திருக்கும்.


குறிப்பிட்ட கலத்தின் எழுத்துருவுக்கு அடிக்கோடிடல்.
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி அடிக்கோடிட வேண்டிய எழுத்துருவை கொண்ட கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் கிழே வலதுபக்கத்தில் “U” என்ற எழுத்துக்கு கிழே கிடையாக அடிக்கோட்டை கொண்ட குறியீட்டில் அழுத்துக.
3.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு அடிக்கோடிடப்பட்டிருக்கும்.

எழுத்துரு சீரமைப்புக்கள்
கலங்களில் எழுத்துச் சீரமைப்பானது நிலைக்குத்தாகவும் கிடையாகவும் மேற்கொள்ள வேண்டும்.

இயல்புநிலையில்
F  பனுவல்கள் – இடப்பக்க எழுத்துச் சீரமைப்பை கொண்டிருக்கும்.
F  இலக்கங்கள் – வலப்பக்க எழுத்துச் சீரமைப்பை கொண்டிருக்கும்.

பனுவல்களை கிடையாக சீரமைத்தல்
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி சீரமைக்க வேண்டிய பனுவலைக் கொண்ட கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள சீரமைப்பு குழுவில் இரண்டாவது வரியில் விரும்பிய (வலம், இடம் மற்றும் மத்தி) சீரமைப்பு வகையை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டில் அழுத்துக.
3.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு குறிப்பிட்ட கிடைச் சீரமைப்பு வகையில் சீரமைப்புக்கு உட்பட்டிருக்கும்.

பனுவல்களை நிலைக்குத்தாக சீரமைத்தல்
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி சீரமைக்க வேண்டிய பனுவலைக் கொண்ட கலத்தினை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள சீரமைப்பு குழுவில் முதலாவது வரியில் விரும்பிய (கிழே, மேலே மற்றும் நடு) சீரமைப்பு வகையை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டில் அழுத்துக.
3.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திலுள்ள தரவு குறிப்பிட்ட நிலைக்குத்து சீரமைப்பு வகையில் சீரமைப்புக்கு உட்பட்டிருக்கும்.

குறிப்பு:
கிடையில் வலம், இடம் மற்றும் மத்தி நிலைக்குத்தில் கிழே, மேலே மற்றும் நடு தவிர்ந்த மேலதிக சீரமைப்புக்களை செய்வதற்கு சீரமைப்பு குழுவில் வலப்பக்க கிழ் மூலையில் மிகச்சிறிய சதுரப்பெட்டியின் வடகிழ் மூலையை நோக்கிய அம்புக்குறி காணப்படும். அதில் அழுத்துக. கலங்களை வடிவமை என்ற தலையங்கத்துடன் சீரமைப்பு என்ற தாவல் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் சொல்லாடல் பெட்டியொன்று தோன்றும்.

F  அதில் கிடைமட்டம் என்ற தலையங்கத்துக்கு கிழேயுள்ள இணைப்புப் பெட்டியின் வலப்பக்கத்தில் கிழ்நோக்கிய கறுத்த அம்புக்குறியில் அழுத்தி விரும்பிய கிடை சீரமைப்பை தெரிவுசெய்க.
F  அதில் செங்குத்து மட்டம் என்ற தலையங்கத்துக்கு கிழேயுள்ள இணைப்புப் பெட்டியின் வலப்பக்கத்தில் கிழ்நோக்கிய கறுத்த அம்புக்குறியில் அழுத்தி விரும்பிய நிலைக்குத்து சீரமைப்பை தெரிவுசெய்க.

கலத்திற்கு அல்லது கலங்களுக்கு ஓரங்களை உருவாக்கல்.
1.        கலச்சுட்டியை பயன்படுத்தி ஓரங்களை உருவாக்க வேண்டிய கலத்தை அல்லது கலங்களை தெரிவுசெய்க.
2.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
3.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் விருப்பமான ஓர வகையை தெரிவுசெய்க.
4.        தெரிவுசெய்யப்பட்ட கலத்திற்கு அல்லது கலங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட வகையில் ஓரங்கள் உட்பட்டிருக்கும்.

குறிப்பு:
தெரிவுசெய்யப்பட்ட ஓரவகையை மீண்டும் தெரிவுசெய்தால் கலத்திற்கு அல்லது கலங்களுக்கு ஓரம் நீக்கப்படும்.

விரும்பிய ஓரத்தை நீக்குதல்
1.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
2.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் ஓரங்களை நீக்கு என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள அழிப்பதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக.
3.        சுட்டிக்குறியின் குறி அழிப்பான் குறியீட்டுக்கு மாறும். அதனை கலத்தின் நீக்கவேண்டிய ஓரத்தில் கொண்டுசென்று அழுத்துக. ஓரம் நீக்கப்படும்.
4.        இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தினால் மீண்டும் சுட்டிக்குறி இயல்புநிலைக்கு மாறும்.

கலங்களுக்கு வெளிப்புற ஓரத்தை வரைதல்.
1.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
2.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் ஓரத்தை வரை என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள ஓரத்தை வரைவதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக.
3.        சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும். அதனை வெளிப்புற ஓரத்தை வரையவேண்டிய முதலாவது கலத்துக்கு சுட்டிக்குறியை கொண்டு செல்க. சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியபடி சுட்டிக்குறியை இறுதிக்கலம் வரை இழுத்துவருக.
4.        தெரிவுசெய்யப்பட்டஇரண்டு கலங்களுக்கு இடையிலுள்ள அனைத்துக்கலங்களையும் உள்ளடக்கி வெளிப்புற ஓரம் உருவாக்கப்படும்.
5.        இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தினால் மீண்டும் சுட்டிக்குறி இயல்புநிலைக்கு மாறும்.

எல்லாக் கலங்களுக்கும் ஓரத்தை வரைதல்.
1.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
2.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் ஓரக் கட்டத்தை வரை என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள ஓரத்தை வரைவதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக.
3.        சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும். ஓரத்தை வரையவேண்டிய முதலாவது கலத்துக்கு சுட்டிக்குறியை கொண்டு செல்க. சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியபடி சுட்டிக்குறியை இறுதிக்கலம் வரை இழுத்துவருக.
4.        தெரிவுசெய்யப்பட்டஇரண்டு கலங்களுக்கு இடையிலுள்ள அனைத்துக் கலங்களுக்கும் ஓரம் உருவாக்கப்படும்.
5.        இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தினால் மீண்டும் சுட்டிக்குறி இயல்புநிலைக்கு மாறும்.

எல்லாக் கலங்களுக்கும் வர்ண ஓரத்தை வரைதல்.
1.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
2.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் கோட்டு வண்ணம் என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள வர்ண ஓரத்தை வரைவதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக. வர்ணங்களை கட்டங்களாக கொண்ட வர்ணப்பட்டியல் ஒன்று தோன்றும். விரும்பிய வர்ணத்தை தெரிவுசெய்க. சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும்
3.        சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும். ஓரத்தை வரையவேண்டிய முதலாவது கலத்துக்கு சுட்டிக்குறியை கொண்டு செல்க. சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியபடி சுட்டிக்குறியை இறுதிக்கலம் வரை இழுத்துவருக.
4.        தெரிவுசெய்யப்பட்ட இரண்டு கலங்களுக்கு இடையிலுள்ள அனைத்துக் கலங்களுக்கும் வர்ண ஓரம் உருவாக்கப்படும்.
5.        இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தினால் மீண்டும் சுட்டிக்குறி இயல்புநிலைக்கு மாறும்.

உட்புறத்தில் நீலநிற தொடர்ச்சியற்ற கோடுகளையும் வெளிப்புறத்தில் தடித்த சிவப்பு நிற கோட்டினையும் பயன்படுத்தி பல கலங்களை இணைத்து அட்டவணையோன்றை உருவாக்கல்.
1.        நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
2.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் கோட்டு வண்ணம் என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள வர்ண ஓரத்தை வரைவதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக. வர்ணங்களை கட்டங்களாக கொண்ட வர்ணப்பட்டியல் ஒன்று தோன்றும். நீலநிற வர்ணத்தை தெரிவுசெய்க. சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும்
3.        மீண்டும் நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
4.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் கோட்டின் நடை என்பதற்கு செல்க. தோன்றும் வெவ்வேறு வடிவத்திலான கோடுகளை கொண்ட பட்டியலில் தொடர்ச்சியற்ற கோட்டினை தெரிவுசெய்க.
5.        சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும். ஓரத்தை வரையவேண்டிய முதலாவது கலத்துக்கு சுட்டிக்குறியை கொண்டு செல்க. சுட்டியின் இடது பொத்தானை அழுத்தியபடி சுட்டிக்குறியை இறுதிக்கலம் வரை இழுத்துவருக.
6.        தெரிவுசெய்யப்பட்ட இரண்டு கலங்களுக்கு இடையிலுள்ள அனைத்துக் கலங்களுக்கும் தொடர்ச்சியற்ற நீலநிற ஓரம் உருவாக்கப்படும்.
7.        இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தி மீண்டும் சுட்டிக்குறியை இயல்பு நிலைக்கு கொண்டுவருக. பின்னர் மீண்டும் வெளி ஓரம் வரைய வேண்டிய அனைத்துக் கலங்களையும் தெரிவுசெய்க.
8.        மீண்டும் நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
9.        தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் கோட்டு வண்ணம் என்ற சொல்லுக்கு முன்னால் உள்ள வர்ண ஓரத்தை வரைவதற்குரிய  வரைகலை குறியீட்டில் அழுத்துக. வர்ணங்களை கட்டங்களாக கொண்ட வர்ணப்பட்டியல் ஒன்று தோன்றும். சிவப்பு வர்ணத்தை தெரிவுசெய்க. சுட்டிக்குறியின் குறி பென்சிலின் குறியீட்டுக்கு மாறும்
10.      மீண்டும் நாடாவில் முகப்பு தாவலுக்கு சென்று இடதுபக்கத்திலுள்ள எழுத்துரு குழுவில் நான்கு மிகச்சிறிய சதுரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட சதுரத்தை கொண்ட வரைகலைக் கொண்ட குறியீட்டிற்கு அருகிலுள்ள கிழ்நோக்கிய கறுத்த முக்கோண குறியீட்டில் அழுத்துக.
11.      தோன்றும் கிழ்நோக்கிய பட்டியலில் தடித்த பெட்டி ஓரம் என்பதை தெரிவுசெய்க.
12.      தெரிவுசெய்யப்பட்ட இரண்டு கலங்களுக்கு இடையிலுள்ள அனைத்துக்கலங்களையும் உள்ளடக்கி சிவப்பு நிற வெளிப்புற ஓரம் உருவாக்கப்படும்.
13.      இரண்டுமுறை விரைவாகவும் தொடர்ச்சியாகவும் அழுத்தினால் மீண்டும் சுட்டிக்குறி இயல்பு நிலைக்கு மாறும்.

குறிப்பு:
மேலதிக ஓரங்களை உருவாக்குவதற்கு அல்லது மேலதிக ஓர வடிவமைப்புக்களை உருவாக்குவதற்கு கிழ்நோக்கிய பட்டியலின் இறுதியில் காணப்படும் மேலதிக ஓரங்கள் என்பதனை தெரிவுசெய்க. கலங்களை வடிவமை என்ற தலையங்கத்துடன் ஓரம் என்ற தாவல் தெரிவுசெய்யப்பட்ட நிலையில் சொல்லாடல் பெட்டியொன்று தோன்றும். விருப்பம்போல் ஓரத்தினை உருவாக்குக.



தொடரும்

No comments:

Post a Comment