Sunday, November 25, 2018

கூகுளின் வசதிகள் - பகுதி 2


கூகுள் ஒலிபெயர்ப்பு (Google Transliteration)
ஒலிபெயர்ப்பு என்பது ஒரு மொழியில் எழுதுவதை மற்றொரு மொழியில் உள்ள ஒலிப்புமுறைக்கு பொருத்தும் முறையாகும்.

இக் கருவியானது நீங்கள் அம்மா என்ற ஒலியை "Amma " என தட்டச்சு செய்தால் அதனை "அம்மா" என தமிழில் தட்டச்சு செய்யும். Amma  என்ற சொல்லுக்கு என்ன தமிழ் கருத்து என பார்க்காது. உதாரணமாக நீங்கள் "Come"  என தட்டச்சு செய்தால் அது "கம்" தமிழில் தட்டச்சு செய்யப்படும். "வா" என தட்டச்சு செய்யாது.

எனவே ஒலிபெயர்ப்பானது மொழிபெயர்ப்புடன் வேறுபட்டிருக்கும் என்பதை நினைவில் கொள்ளவும்: மாற்றமானது உச்சரிப்பைச் சார்ந்து இருக்கும், அர்த்தம் சார்ந்து இருக்காது.

கூகுள் ஒலிபெயர்பை திறத்தல்
1.     https://www.google.com/inputtools/try/ என்ற இணையத்தள முகவரிக்கு செல்க.
2.     “Google உள்ளீட்டு கருவிஎன்ற தலையங்கத்துடன் உரையினை பதிவுசெய்யக்கூடிய கூகுளின் இணையப்பக்கப் பகுதி தோன்றும்
3.     அதில் காணப்படும் உரைபெட்டியின் இடப்பக்க மேல்மூலையில் காணப்படும் கீழ்நோக்கிய கறுத்த முக்கோணியில் அழுத்துக.
4.     பயன்படுத்தக்கூடிய மொழிகளின் கீழ்நோக்கிய பட்டியல் தோன்றும். அதில் தமிழ் என்பதனை தெரிவு செய்க.
5.     இறுதியாக உரையாக மாற்ற வேண்டிய பகுதியை ஆங்கில எழுத்துக்களை பயன்படுத்தி உள்ளீடு செய்க. அது தமிழ் உரையாக மாறும்.

உதாரணம்:
"enathu peyar kalaichchelvan"  என தட்டச்சு செய்யும் பொழுது அது "எனது பெயர் கலைச்செல்வன்" என உருவாகும்.

குறிப்பு:
கூகுளானது தட்டச்சு செய்யும் ஓசைக்கு பொருத்தமான சொற்களை முன்மொழியும். அதில் நீங்கள் விரும்பும் சொல்லின் முன்னால்  உள்ள இலக்கத்தினை அழுத்தினால் அச்சொல் உள்ளீடு செய்யப்படும். நீங்கள் விரும்பும் சொல் முதலாவதாக காணப்படின் space bar இனை அழுத்தவும்.

உதாரணம்:
"sollin munaal 2 ulla ilakkathinai 2 aluththinaal 2 achchol ulidu seiyapadum" என தட்டச்சு செய்தால் "சொல்லின் முன்னால்  உள்ள இலக்கத்தினை அழுத்தினால் அச்சொல் உள்ளீடு செய்யப்படும்." என தோன்றும்.

குறிப்பு:
ஒரே வகைச் சொற்கள் வரும்பொழுது சில சொற்களுக்கு ஆங்கில எழுத்தினை ஒருதடவை உள்ளீடு செய்தால் போதுமானது. சில சொற்களுக்கு இரண்டு தடவை உள்ளீடு செய்தல் வேண்டும். இதனை அனுபவத்திலேயே பெறுதல் வேண்டும்

உதாரணம்
"உள்ளீடு" என்ற சொல்லினை உருவாக்குவதற்கு "ulidu" என தட்டச்சு செய்தல் வேண்டும். ulliidu என்றோ uliidu என்றோ தட்டச்சு செய்தால் பொருத்தமான சொல் தோன்றாது. ஆனால் நேற்று என்ற சொல்லினை உருவாக்குவதற்கு "nerru" என தட்டச்சு செய்தல் வேண்டும். "neru" என்று  தட்டச்சு செய்தால் பொருத்தமான சொல் தோன்றாது.

இவ் வசதியின் மிக முக்கிய நன்மை
இவ் ஒலிபெயர்ப்பானது Unicode எழுத்துருவில் தட்டச்சு செய்யப்படுவதனால் இணைய வழி பதிவேற்றங்களுக்கு தமிழ் உரையினை உருவாக்குவதற்கு இது மிகவும் பயன்படும்.


சிறப்பு எழுத்துக்குறிகளை பயன்டுத்தல்

(a+b)² என்பதன் விரிவு a²+2ab+b² ஆகும். என்ற வசனத்தை உள்ளீடு செய்தல்.

படிமுறை
1.     () என்பதனை நேரடியாக உள்ளீடு செய்க
2.     அடைப்புக்குறியின் நடுவில் இடஞ்சுட்டியை நிறுத்துக
3.     ab6 என்பதனை உள்ளீடு செய்க
4.     b க்கு முன்னால் உள்ள இடைவெளியை நீக்குக.
5.     ab க்கு நடுவில் இடஞ்சுட்டியை நிறுத்துக
6.     +குறியீட்டினை உள்ளீடு செய்க
7.     அடைப்புக்குறிக்கு வலப்பக்கத்தில் வெளிப்பக்கமாக இடஞ்சுட்டியை நிறுத்துக
8.     உரைபெட்டியின் வலப்பக்க மேல்மூலையில் காணப்படும் சிறப்பு எழுத்துக்குறிகள் என்பதில் அழுத்துக.
9.     தோன்றும் கீழ்நோக்கிய பட்டியலில் மேல்பகுதியில் உள்ளவற்றில் "arrows" என்ற சொல்லில் அழுத்துக.
10.   தோன்றும் கீழ்நோக்கிய பட்டியலில் "Superscripts" என்ற சொல்லில் அழுத்துக.
11.   தோன்றும் எழுத்துக்குறிகளில் 2 என்ற எழுத்தினை அழுத்துக
12.   (a+b)² என்ற கோவை பூரணப்படுத்தப்படும் இவ்வாறு a²+2ab+b² என்ற சூத்திரத்தினை உள்ளீடு செய்ய முடியும்.


 கையினால் எழுத்துவதனை உரையாக மாற்றுதல்
1.     உரைபெட்டியின் இடதுபக்க மேல்மூலையில் இடமிருந்து வலமாக மூன்றாவதாக உள்ள கீழ்நோக்கிய கறுத்த முக்கோணத்தில் அழுத்துக
2.     தோன்றும் கீழ்நோக்கிய பட்டியலில் Tamil-Handwrite என்ற சொல்லில் அழுத்துக.
3.     இணையப்பக்கத்தின் கீழ்மூலையில் உரைபெட்டி ஒன்று தோன்றும் அதில் தொடுதிரை எனில் கை விரலினால் அல்லது ஒளிப்பேனாவினால் எழுதவும். கணினித் திரைதோடுதிரையில்லை ஆயின்  சுட்டிக் குறியினை பயன்படுத்தி எழுதவும்.
4.     இறுதியாக உள்வழிவிசையை அழுத்தவும். எழுதிய சொல் தட்டச்சு செய்யப்படும்.
 

No comments:

Post a Comment