.

Monday, March 21, 2022

Microsoft To Do

Microsoft to Do என்பது எமது அன்றாட பணிகளை முகாமைத்துவம் செய்யக்கூடிய ஒரு இலவச மென்பொருள் ஆகும். இதனை கணினிகளில் மட்டுமல்லாது Smart Phone மற்றும் Tab களிலும் பயன்படுத்த முடியும். இது Microsoft பயனர் கணக்கினை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படுகிறது.

 

1.      இதனை பின்வரும் தேவைகளுக்கு பயன்படுத்த முடியும்.

2.      பொருத்திகொள்வனவை ஞாபமூட்டும் Shopping lists

3.      அன்றாட கடமைகளை ஞாபகமூட்டும் Task lists

4.      மறக்கக்கூடிய விடயங்களை குறிப்பெடுக்க Take notes

5. எம்மால் பதிவுசெய்யப்படும் உரைகளை அல்லது காணொளிகளை முகாமைத்துவம் செய்ய Record collections

6.      எமது செயற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிட்டு தேவைப்படும் நேரத்தில் ஞாபகமூட்ட Plan an event

7.      குறித்த ஒருபணியை நாம் மறக்காதிருக்க Set reminders

 

இதில் ஒருவர் மட்டுமல்லாது ஒரு குறித்தவேலையை பலருடன் இணைந்து அவர்களுக்கிடையில் பகிந்து பயன்படுத்த முடியும்.

 

பதிவிறக்கம் செய்தல்

இதனை கணினிகளுக்கு https://todo.microsoft.com/ என்னும் முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மேலும் Android மற்றும் iOS இரண்டிற்கும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடிவதால் எப்போதும் எங்கள் Pocket இல் வைத்திருக்கலாம், இது  செய்யவேண்டிய வேலையை எப்பொழுதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்.

 

முதல் தடவை திறத்தல்

நீங்கள் முதல் முறையாக Microsoft To Do இனை த் திறக்கும் போது, Wunderlist இலிருந்து Lists களை import செய்ய விரும்புகிறீர்களா என்று கேட்கும். Wunderlist என்பது Microsoft  சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய to-do list நிறுவனமாகும், பின்னர் மே 2020 இல் மூடப்பட்டது,

 

Microsoft To Do List இன்  பிரதான மெனு இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது:

முதலாவது பகுதியானது மேலும் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.



My Day:            குறித்த நாளில் நாங்கள் முடிக்கவேண்டிய வேலைகளை இங்கு சேர்க்க முடியும்.

Important:        அதிமுக்கியமான வேலைகளை இங்கு சேர்க்க முடியும்

Planned:            எதிர்காலத்தில் செய்வதற்கு திட்டமிட்டுள்ள வேலைகளை குறித்த திகதிகளில் செய்வதற்காக இங்கு சேர்த்து ஞாபகமூட்டல்களையும்  இணைக்க முடியும்.

Assigned to you: இங்கு குழுவாக செயல்படும்போது எமக்கென ஒதுக்கப்படும் வேலைகளை பார்க்க முடியும்

Tasks: List:       இற்கு வெளியே ஒரு வேலையை உருவாக்கினால், அது Tasks இருக்கும்.

Lists

எங்களால் உருவாக்கப்பட்ட Lists மற்றும் பிறரால் எங்களுடன்  பகிர்ந்து கொள்ளப்பட்ட Lists  என்பன இங்கு காணப்படும். தேவைப்பட்டால்  மேலும் இந்த Lists இல் வேலைகளை சேர்க்க முடியும், Business  மற்றும் Private  ஆகிய இரண்டையும் கலந்து இணைத்துக் கொள்ளலாம்.

 

       Microsoft To Do இன் Keyboard Shortcuts

1.      Ctrl + N:    புதிய வேலையை உருவாக்குதல்

2.      Ctrl + L:    புதிய பட்டியலை தயாரித்தல்

3.      Ctrl + T:    My Day இனுள் வேலையை உருவாக்குதல்

4.      Ctrl + D:    வேலையை முடிவுற்ற வேலையாக மாற்றுதல்

5.      Ctrl + F:    வேலையை தேடல்

6. Ctrl + RDevices களுக்கிடையில் பயனர் ஒத்திசைவை (Synchronization) ஏற்படுத்துதல்

7.      Ctrl + 1:     sidebar இனை திறத்தல்

 

       புதிய List ஒன்றை உருவாக்கி வேலைகளை சேர்த்தல்.

1.      இடதுபக்க கீழ்மூலையில் உள்ள New List இல் Click செய்யவும்

2.      புதிய List இற்கான பெயரினை type செய்யவும்

3.      Enter key இனை அழுத்தவும்

 

மேலும் இதற்கு எமோஜிகளை சேர்க்க முடியும், ஆனால் அதனை online அல்லது Desktop கணினிகளில் பயன்படுத்தப்படும் Microsoft To Do இற்கு பயன்படுத்த முடியாது. Smartphone களில் உள்ள Microsoft To Do இற்கு பயன்படுத்தலாம்.

 


புதிதாக உருவாக்கப்பட்ட List இல் Right Click செய்யும் பொழுது தோன்றும் Menu ஐப் பயன்படுத்தி பின்வருவனவற்றை மேற்கொள்ள முடியும்.

1.      List இன் பெயரினை மாற்றுதல் : Rename List

2.      List இனைப் பகிர்தல்: Share List

3.      குறித்த List இனை உருவாக்கப்பட்ட குழுவொன்றிற்கு நகர்தல்: Move List to

4.      List இனைப் அச்சுப்பிரதி எடுத்தல்: Print List

5.     குறித்த List இனை மின்னஞ்சலினூடாக அனுப்புதல்:Email List

6.     Microsoft To Do இனைத் திறக்கும் பொழுது முதலாவதாக தோன்றவைத்தல்: Pin to Start

7.      குறித்த List இல் இருந்து பிரதியொன்றினை உருவாக்குதல்: Duplicate List

8.      குறித்த List இனை Menu இல் இருந்து நீக்குதல்: Delete List

 

உருவாக்கப்பட்ட List இல் புதிய வேலைகளை சேர்த்தல்

1.      வேலையை உருவாக்க வேண்டிய List இனை தெரிவுசெய்யவும்.

2. தோன்றும் Window வின் கீழ்ப்பகுதியில் காணப்படும் "+ Add Task" என்ற பகுதியில் அழுத்தவும்.

3.      Task இனை பதிவுசெய்து Enter Key இனை அழுத்தவும்.

 

ஒரு  List இல் இருந்து இன்னோர் List இற்கு Task இனை நகர்த்துதல்

1. குறித்த List இனை தெரிவுசெய்து நகர்த்தவேண்டிய Task இனை தெரிவுசெய்யவும்

2.      Task இன் மீது Cursor இனை வைத்து அழுத்தியபடி இழுத்து வந்து Task இனை சேர்க்கவேண்டிய List இன் மீது விடவும்.

3.      Task ஆனது இணைக்கப்படவேண்டிய List இல் சேர்க்கப்படும்.

 

ஒரு வேலையை மேலும் customize செய்ய உதவும் விருப்பத்தேர்வுகள்.



மேலும் விவரங்களைச் சேர்க்க குறித்த வேலையை தெரிவு செய்யும் போது வலப்பக்கத்தில் பின்வரும் மேலதிக தெரிவுகள் தோன்றும்.

1.      ¡: இந்த வட்ட வடிவ குறியீட்டினை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வேலையை முடிவுற்ற வேலையாக மாற்றலாம்.

2.      «: இந்த நட்சத்திர வடிவ குறியீட்டினை தெரிவு செய்வதன் மூலம் குறித்த வேலையை முக்கியத்துவம் வாய்ந்த வேலையாக மாற்றலாம். இது உடனடியாக Important List இல் இணைக்கப்படும்.

3.      Steps: ஒரு வேலைக்குரிய steps அல்லது subtasks களை சேர்ப்பதற்கு  பயன்படும்.  பிரதான வேலையை முடிப்பதற்கு இவை சிறு சிறு வேலைகளாக இருக்கலாம் அல்லது அவை முன் தேவைகளாகவும் இருக்கலாம்.

4.      Add to My Day: இன்று செய்ய வேண்டிய வேலைகளின் Iist இனைப் பார்ப்பதற்கு, அந்தந்த வேலைகள் Add any task to My Day இல் சேர்க்கப்படல் வேண்டும். அன்றைய தினம் வேலை முடியாவிட்டால், மறுநாளுக்கு நகராது. நாங்கள் அதை manual ஆக நகர்த்த வேண்டும்.

5.      Remind me: குறித்த வேலையை குறித்த தினத்தில் குறித்த நேரத்தில் நினைவூட்டுவதற்கு பயன்படும்.

6.      Add a due date: இங்கு குறிப்பிடப்படும் திகதியில் வேலையினை Planned List இல் சேர்க்கும். இங்கு குறிப்பிடப்படும் திகதியில் முடிவுறாமல் தாமதமான வேலைகள் சிவப்பு நிறத்தில் காட்டப்படும்.

7.      Repeat: தினசரி, வாராந்திரம், அல்லது மாதாந்திரத்தில் ஒரு வேலையை மீண்டும் மீண்டும் செய்ய அந்த வேலைக்கு மறுநிகழ்வைச் சேர்க்க முடியும்.

8.      Assign to: வேலைக்கு வேரொருவரை நியமிக்க பயன்படும்.

9.      Add file: எங்களுடைய வேலைக்கு தொடர்புபட்ட கோப்புகளை தேவையானபோது இலகுவாக பயன்படுத்த எதுவாக கோப்புக்களை இணைத்துவைக்க பயன்படும். கோப்புகள் Local ஆகவோ Cloud இலோ சேமிக்கப்பட்ட கோப்பூக்களாக இருக்கலாம் அல்லது Cloud இல் இருந்து Local க்கு ஒத்திசைக்கும் (Synchronization) வகையில் அமைக்கப்பட்டிருந்தால், அதில் இருந்து கோப்பைத் தேர்வுசெய்யலாம்.

10.   Add Notes: வேலையைப் பற்றிய கூடுதல் தகவல்களை சேமித்து வைக்க முடியும்.

11.   3: வேலையை List இல் இருந்து நீக்க (Delete) பயன்படும்.

 

Sort, Organize, மற்றும் Color



Lists களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பொழுது அவற்றினை இலகுவாக பிரித்தறிய வரிசைப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும், வண்ணக் குறியீடு செய்யவும் முடியும்.

1.      குறித்த List இனைத் தெரிவு செய்தல்

2.      மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகளில்  Click செய்யவும்.

தோன்றும் கீழ்நோக்கிய பட்டியலில் (Dropdown List) இல் வேலைகளை வரிசைப்படுத்தலாம், ஒரு List இனை மற்றொன்றில் இருந்து வேறுபடுத்த ஒரு Theme இனை சேர்க்கலாம். Tasks List அச்சிடலாம், Tasks List மின்னஞ்சல் செய்யலாம், Tasks List Start Menu இல் தோன்ற செய்யலாம், அல்லது Tasks List நீக்கலாம்.

 

வேலைகளை பகிர்தல்



Tasks List  மற்றவர்களுடன் பகிர முடியும், ஆனால் ஒரு நிறுவனத்திற்குள் அல்லது தனிப்பட்ட Microsoft கணக்குகளுக்கு இடையே மட்டுமே List பகிர முடியும்.

1.      பகிர விரும்பும் List திறக்கவும்.

2.      List இன் மேல் வலது மூலையில் உள்ள Person Icon னைக் Click  செய்யவும்.

3.      Create invitation link என்பதைக் Click செய்யவும்.

4.      Copy link என்பதைக் Click செய்யவும்.

5.      இணைப்பை Microsoft Teams அல்லது மின்னஞ்சலின் ஊடக அனுப்பவும்

6.      இணைப்பைப் பெறுபவர் இணைப்பைத் திறப்பதன் மூலம் பகிரலாம்.

 

வேலையை அணுகுவதை முகாமை செய்தல் (Manage Access)



1.      வேலை ஒன்றினை பகிரும் பொழுது தோன்றும் Share List என்ற Window வில் Manage Access என்பதனை அழுத்தவும்.

2.      தோன்றும் More option என்ற window இல் Limit access to the current members என்பதனை enable செய்வதன் மூலம் புதிதாக அங்கத்தவர்கள் இணைவதை கட்டுப்படுத்த முடியும்.

3.      Stop sharing என்பதனை அழுத்துவதன் மூலம் பகிர்வதை இடைநிறுத்த முடியும்.

Wednesday, August 25, 2021

Digital Divide

 

Digital Divide

Digital Divide என்பது நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை அணுகுவதில் தனிநபர்கள் இருவருக்கிடையே காணப்படும் இடைவெளி ஆகும். இதனை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை ஒப்பிட்டால் தெளிவாக கண்டுகொள்ள முடியும். இதனை digital சமத்துவமின்மைக்கு சிறந்த ஆதாரமாக கொள்ள முடியும்.

Digital divide இனை முன்று வகையாக பிரிக்கலாம்.


1.       Gender Divide

பொதுவாக இணையமானது பால்ரீதியான பிளவினை அதிகரிக்கச் செய்கிறது. அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில் வாழும் பெண்கள் இவ்வசதியை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பகாக கிராமபுறங்களில் மூடநம்பிக்கையில் பெண்களுக்கான இந்த வசதிகள் மறுக்கபடுகின்றன.

 

2.       Social Divide

இணைய வசதியானது மக்களிடையே அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ப சமூக வட்டங்களை உருவாக்கியுள்ளது. ஒரேவகையான விருப்பங்கள் மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகளுக்கேற்ப Facebook, Viber, WhatsApp, Twitter, LinkIn போன்ற சமூக மேடைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் முன்னெப்போதையும் விட இணைய பயன்பாடு சமூக அடுக்குகளைப் மிகவும் பாதித்துள்ளது, இது இணையத்துடன் இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத குழுக்களில் தெளிவாகத் தெரிகிறது. இணைக்கப்பட்ட குழுக்களின் இணையப் பயன்களைப் பகிர்ந்து கொள்ளாததால், இணைக்கப்படாத குழுக்கள் ஓரங்கட்டப்படுகின்றன.

 

3.       Universal Access Divide

இணையத்தை அணுகும் போது உடல் குறைபாடுகளுடன் வாழும் நபர்கள் பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தேவையான திறன்களைக் கொண்டிருக்கலாம் ஆனால் கிடைக்கக்கூடிய சகல வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்த முடியாது.

டிஜிட்டல் கல்வியறிவு திறன்கள், குறைந்த கல்வி நிலைகள் மற்றும் போதிய Broadband உள்கட்டமைப்பு இல்லாததால் உலகின் சில பகுதிகள் இணையத்திலிருந்து பிரிக்கப்பட்டு உள்ளன.

 

Digital Divide இற்கான காரணங்கள்

அதிநவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் நாளுக்குநாள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தாலும் பின்வரும் காரணங்களினால் Digital Divide உம் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.

 

1.       கல்வி (Education):

படிப்பறிவற்ற பாமரமக்களை விட பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்கள் பலமடங்கு தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதனை காணலாம். குறைந்த கல்வியறிவு நிலைகள் Digital சமத்துவமின்மை இடைவெளியை விரிவுபடுத்துகின்றன. எனவே Digital Divide இனை நீக்குவதில் கல்வி முக்கியபங்கு வகிக்கிறது.

 

2.       வருமான நிலை (Income Level)

புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உபகரணங்களை உடனுக்குடன் கொள்வனவுசெய்து பயன்படுத்தும் வசதி குறைந்த வருமானம் பெறுபவர்களிடம் இருக்காது. எனவே Digital Divide இனை அதிகரிப்பதில் வருமான இடைவெளி கணிசமான பங்கு வகிக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு அவர்களின் வருமானம் அடிப்படைத் தேவைகளுக்கு போதுமானதாக இல்லாமையினால்  தொழில்நுட்பத்தை ஒரு ஆடம்பரமாக பார்க்கிறார்கள்.

 

3.       பூலோக வரையறைகள் (Geographical Restrictions)

பொதுவாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திப்பணிகள் நகர்புறங்களிலேயே அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்களில் இவற்றின் பலனை அனுபவிக்க முடிவதில்லை. இணைய வசதிக்கான 4G அல்லது fiber Broadband Coverage கிராமப்புறங்களில் கிடைக்காமை இதற்கு சிறந்த உதாரணமாகும்.

 

4.       உந்துதல் அல்லது ஆர்வம் இன்மை (No Motivation or Interest)

வளர்முக நாடுகளில் நிர்வாகத்தில் உள்ள மேலதிகாரிகள் சிலர் உயர் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அதேபோன்று சிலர் மரபுவழி நிர்வாகத்தில்  நம்பிக்கைகொண்டு தானியங்கி முறைமைகளை விரும்புவதில்லை. தென்னாசிய நாடுகளில் பெரும்பாலனவ்றில் நிறுவனங்கள் கையெழுத்திடப்பட்ட கடதாசி ஆவணங்களையே மூல ஆவணங்களாக ஏற்றுக்கொள்கின்றனர்.  இதனால் ஆர்வமற்ற உத்தியோகத்தர்களின் நவீன தொழில்நுட்ப அறிவு குறைவடைகிறது.

 

5.       டிஜிட்டல் கல்வியறிவு (Digital Literacy)

வளர்ந்த நாடுகள் கணினிகள் மற்றும் அதிவேக இணைய இணைப்பு தேவையான அளவில் கொண்டுள்ளன. பாடசாலைகளும் போதுமான கணினிகளையும் இணைய இணைப்பையும் கொண்டுள்ளதால் சிறுவயதிலிருந்தே டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், சிறு வயதிலேயே இந்தத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தாத மாணவர்களை விட அதிக நன்மைகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக வளரும் நாடுகளில் தொழில்நுட்பத்திற்கான உடல் ரீதியான தொடர்பு (interaction) இல்லாமை தகவல் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது.

 

Digital Divide இன் தாக்கம்.

Digital சமத்துவமின்மை உலகளாவிய சமூகங்களிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.


தொடரும் .................


நான் அறிந்துகொண்ட விடயங்களை எனது தாய்மொழியில் மற்றவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கோடு இங்கு எதுவித எதிர்பார்புக்க்களுமின்றி பகிர்ந்து வருகிறேன். எனவே இதனை வாசிக்கும் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் உற்சாகப்படுத்துங்கள். மேலும் என்னை பின்தொடர்வதன்மூலம் பெறுமதிமிக்க தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்

நன்றி

Tuesday, August 24, 2021

Immersive Reader

Immersive Reader என்பது வாசிப்பதற்கு கஷ்டப்படுபவர்களுக்கு இலகுவாக வாசிக்கக் கற்றுக்கொடுக்கும் நோக்கோடு உருவாக்கப்பட்ட ஓர் இலவச வாசிப்புக் கருவியாகும். இது தற்பொழுது MS Office 2019 உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி ஓர் word ஆவணத்தில் உள்ள விடையத்தினை ஒலியாக மாற்றிக்கொள்ள முடியும். இந்த வசதியானது ஏற்கனவே பல மென்பொருட்களில் காணப்பட்டாலும் Word 2019 இல் மிகவும் இலகுவாக பயன்படுத்தக் கூடியதாக காணப்படுகிறது.

அணுகும்முறை

இது MS Word 2019 ஆவணத்தில் View என்ற தாவலில் Immersive என்ற குழுவில் காணப்படுகிறது


Immersive Reader என்ற தாவல் தோன்றும்.


சில வேளைகளில்Text Settings” என்ற தலைப்புடன் இந்த ஆவணம் கொண்டிருக்கும் சொற்கள், எழுத்துக்கள் மற்றும் எழுத்துருக்களில் மாற்றம் செய்யமுடியாமல் இருக்கிறது என்ற ஓர் தகவல் தெரிவிக்கப்படும்.  இது பொதுவாக உங்கள் ஆவணம் தமிழ் சொற்களை கொண்டிருந்தால் தோன்றும். இதனை இப்பொழுது கவலைகொள்ள தேவையில்லை.


Read Aloud என்ற பொத்தானை அழுத்துக. உங்கள் ஆவணத்தில் உள்ளவற்றை ஓர்  குரல் வாசிக்க தொடங்கும். அத்துடன் பின்வரும் ஒலிக் கட்டுப்பாட்டு பொத்தான்களும் தோன்றும்.


தொடரும்...............

 

Sunday, July 18, 2021

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

எனக்கு கிடைக்கபெற்ற நிழற்பிரதி ஆவணமொன்றிளிருந்து தட்டச்சு செய்யப்பட்ட தகவல் இதுவாகும். இதனை தொகுத்த  ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.. அனால் இதனை தட்டச்சுச் செய்வதற்கே எனக்கு மிகவும் கடினமாக இருக்கையில் அவர் இதனை தொகுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது புலனாகிறது. எனது நோக்கம் சிறந்த இந்த தகவல்களை ஏனையோரும் அறிந்துகொள்ள செய்வதேயாகும். அந்த பெயர் தெரியாத தொகுப்பாளருக்கு எனது நன்றிகள். 

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

2006 ஆண்டு மே மாதம் 19 திகதி அத்தட்சிப்படுத்தபட்டது.

ச. வ. ஓ. 08/2004

இலங்கையில், இலத்திரனியல் வடிவில் ஒப்பந்தங்களின், உருவாக்கத்தையும் தரவுத் தகவல்களையும் வேறு தகவல் தொடர்புகளையும் படைத்தலையும் பரிமாற்றம் செய்தலையும் ஏற்றங்கீகரிப்பதற்கும் அவற்றிற்கு வசதியளிப்பதற்கும் சான்றளிப்பு அதிகரசபையொன்றை நியமிப்பதற்கும் மற்றும் சான்றளிப்புச் சேவை வழங்குனர்களின் தராதர அங்கீகாரத்திற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:-

1,(1) இச் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் என எடுத்துக்காட்டலாம்.சுருக்கப்பெயர்

(2)இச் சட்டத்தின் 1 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் இச்சட்டம் பாராளுமன்றச் சட்டமொன்றாகச் சான்றுபடுத்தப்பட்ட தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்பதுடன், மற்றைய ஏற்பாடுகள் வர்த்தகமானியில் வெளியிடப்பட்ட கட்டளையால் அமைச்சர் நியமிக்கக்கூடியவாறான அத்தகைய தேதியன்று (இது இதனகத்துப் பின்னர் “நியமிக்கப்பட்ட தேதி” எனக் குறிப்பீடு செய்யப்படும்) நடைமுறைக்கு வருதலும் வேண்டும். நடைமுறைக்கு வரும் தேதியும்

அத்தியாயம் I

பொது ஏற்பாடுகள்

 2. சட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருவனவாதல் வேண்டும்:-

(அ) சட்டத் தடைகளை நீக்கி சட்ட நிட்சயத் தன்மையைத் தாபிப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச இலத்திரனியல் வர்த்தகத்திற்கு வசதியளித்தலும்;

(ஆ) இலத்தரனியல் வர்த்தகத்தின் நம்பகமான வடிவங்களின் பாவனையை ஊக்குவித்தலும்;

(இ) அரசாங்கத்தில் ஆவணங்களை இலத்திரனியல் முறையில் கோப்பிடுதலுக்கு வசதியளித்தலும் நம்பகமான வடிவங்களிலான இலத்திரனியல் தகவல் தொடர்புகள் வாயிலாக அரசாங்க சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதனை ஊக்குவித்தலும்; அத்துடன்

(ஈ) தரவுத் தகவல்களினதும் இலத்திரனியல் ஆவணம், இலத்திரனியல் பதிவேடு அல்லது தகவல் தொடர்புகளினதும் உண்மைத் தன்மையிலும், திட்பத்திலும், நம்பகத்தன்மையிலும் பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவித்தலும்;

தொடரும்...................