Digital Divide
Digital Divide என்பது நவீன தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினை அணுகுவதில் தனிநபர்கள் இருவருக்கிடையே காணப்படும் இடைவெளி ஆகும். இதனை நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் வாழும் மக்களை ஒப்பிட்டால் தெளிவாக கண்டுகொள்ள முடியும். இதனை digital சமத்துவமின்மைக்கு சிறந்த ஆதாரமாக கொள்ள முடியும்.
Digital divide இனை முன்று வகையாக பிரிக்கலாம்.
1.
Gender Divide
பொதுவாக இணையமானது பால்ரீதியான பிளவினை அதிகரிக்கச் செய்கிறது. அதிலும் குறிப்பாக வளர்முக நாடுகளில் வாழும் பெண்கள் இவ்வசதியை பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகின்றனர். குறிப்பகாக கிராமபுறங்களில் மூடநம்பிக்கையில் பெண்களுக்கான இந்த வசதிகள் மறுக்கபடுகின்றன.
2.
Social Divide
இணைய வசதியானது மக்களிடையே அவர்களின்
விருப்பங்களுக்கு ஏற்ப சமூக வட்டங்களை உருவாக்கியுள்ளது. ஒரேவகையான விருப்பங்கள்
மற்றும் அவர்களுக்கிடையே காணப்படும் ஒற்றுமைகளுக்கேற்ப Facebook, Viber, WhatsApp, Twitter, LinkIn போன்ற சமூக மேடைகளை பயன்படுத்துகின்றனர். இதனால் முன்னெப்போதையும் விட இணைய பயன்பாடு சமூக அடுக்குகளைப் மிகவும் பாதித்துள்ளது, இது இணையத்துடன்
இணைக்கப்பட்ட மற்றும் இணைக்கப்படாத குழுக்களில் தெளிவாகத் தெரிகிறது. இணைக்கப்பட்ட
குழுக்களின் இணையப் பயன்களைப் பகிர்ந்து கொள்ளாததால், இணைக்கப்படாத
குழுக்கள் ஓரங்கட்டப்படுகின்றன.
3.
Universal Access Divide
இணையத்தை அணுகும் போது உடல் குறைபாடுகளுடன் வாழும் நபர்கள் பெரும்பாலும்
பாதிக்கப்படுகின்றனர். அவர்கள் தேவையான திறன்களைக் கொண்டிருக்கலாம் ஆனால்
கிடைக்கக்கூடிய சகல வன்பொருள் மற்றும் மென்பொருளைப் பயன்படுத்த முடியாது.
டிஜிட்டல் கல்வியறிவு திறன்கள், குறைந்த கல்வி நிலைகள் மற்றும் போதிய Broadband உள்கட்டமைப்பு இல்லாததால் உலகின் சில பகுதிகள் இணையத்திலிருந்து
பிரிக்கப்பட்டு உள்ளன.
Digital Divide இற்கான காரணங்கள்
அதிநவீன தகவல்
மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் நாளுக்குநாள் அறிமுகப்படுத்தப்பட்டுக்
கொண்டிருந்தாலும் பின்வரும் காரணங்களினால் Digital Divide உம் நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது.
1.
கல்வி (Education):
படிப்பறிவற்ற பாமரமக்களை விட பட்டப்படிப்பினை நிறைவு செய்தவர்கள் பலமடங்கு
தொழில்நுட்பத்தினை பயன்படுத்துவதனை காணலாம். குறைந்த கல்வியறிவு நிலைகள் Digital சமத்துவமின்மை இடைவெளியை
விரிவுபடுத்துகின்றன. எனவே Digital Divide இனை நீக்குவதில் கல்வி முக்கியபங்கு வகிக்கிறது.
2.
வருமான நிலை (Income Level)
புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படும் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப
உபகரணங்களை உடனுக்குடன் கொள்வனவுசெய்து பயன்படுத்தும் வசதி குறைந்த வருமானம்
பெறுபவர்களிடம் இருக்காது. எனவே Digital Divide இனை
அதிகரிப்பதில் வருமான இடைவெளி கணிசமான பங்கு வகிக்கிறது. குறைந்த வருமானம் கொண்ட
மக்களுக்கு அவர்களின் வருமானம் அடிப்படைத் தேவைகளுக்கு போதுமானதாக
இல்லாமையினால் தொழில்நுட்பத்தை ஒரு
ஆடம்பரமாக பார்க்கிறார்கள்.
3.
பூலோக வரையறைகள் (Geographical Restrictions)
பொதுவாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப அபிவிருத்திப்பணிகள்
நகர்புறங்களிலேயே அதிகமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் கிராமப்புறங்களில்
இவற்றின் பலனை அனுபவிக்க முடிவதில்லை. இணைய வசதிக்கான 4G அல்லது fiber Broadband Coverage கிராமப்புறங்களில் கிடைக்காமை இதற்கு
சிறந்த உதாரணமாகும்.
4.
உந்துதல் அல்லது
ஆர்வம் இன்மை (No Motivation or Interest)
வளர்முக நாடுகளில் நிர்வாகத்தில் உள்ள மேலதிகாரிகள் சிலர் உயர் தகவல் மற்றும்
தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. அதேபோன்று சிலர் மரபுவழி
நிர்வாகத்தில் நம்பிக்கைகொண்டு தானியங்கி
முறைமைகளை விரும்புவதில்லை. தென்னாசிய நாடுகளில் பெரும்பாலனவ்றில் நிறுவனங்கள்
கையெழுத்திடப்பட்ட கடதாசி ஆவணங்களையே மூல ஆவணங்களாக ஏற்றுக்கொள்கின்றனர். இதனால் ஆர்வமற்ற உத்தியோகத்தர்களின் நவீன
தொழில்நுட்ப அறிவு குறைவடைகிறது.
5.
டிஜிட்டல்
கல்வியறிவு (Digital Literacy)
வளர்ந்த நாடுகள் கணினிகள் மற்றும் அதிவேக இணைய இணைப்பு தேவையான அளவில்
கொண்டுள்ளன. பாடசாலைகளும் போதுமான கணினிகளையும் இணைய இணைப்பையும் கொண்டுள்ளதால்
சிறுவயதிலிருந்தே டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ளும் மாணவர்கள், சிறு வயதிலேயே இந்தத் தொழில்நுட்பங்களை வெளிப்படுத்தாத
மாணவர்களை விட அதிக நன்மைகளைப் பெறுகிறார்கள். குறிப்பாக வளரும்
நாடுகளில் தொழில்நுட்பத்திற்கான உடல் ரீதியான தொடர்பு (interaction) இல்லாமை தகவல்
பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிக்கிறது.
Digital Divide இன் தாக்கம்.
Digital சமத்துவமின்மை உலகளாவிய சமூகங்களிடையே
குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை உருவாக்கியுள்ளது.
தொடரும் .................
நான் அறிந்துகொண்ட விடயங்களை எனது தாய்மொழியில் மற்றவர்களும் அறிந்துகொள்ளும் நோக்கோடு இங்கு எதுவித எதிர்பார்புக்க்களுமின்றி பகிர்ந்து வருகிறேன். எனவே இதனை வாசிக்கும் நீங்கள் உங்கள் கருத்துக்களை பகிர்வதன் மூலம் உற்சாகப்படுத்துங்கள். மேலும் என்னை பின்தொடர்வதன்மூலம் பெறுமதிமிக்க தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்
நன்றி
சிறப்பு அய்யா! நன்றி!
ReplyDelete