Friday, March 10, 2023

ChatGPT (Part I)

 

ChatGPT என்றால் என்ன?

Chatbot என்பது ஒரு online chat உரையாடலை எழுத்துருவை தட்டச்சு செய்தோ அல்லது எழுத்துரு - ஒலி மூலமாகவோ நடத்தப் பயன்படும் மென்பொருள் பயன்பாடு ஆகும். இது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் இயற்கை மொழி செயலாக்கம் (Natural Language Processing) ஆகியவற்றைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களின் கேள்விகளைப் புரிந்து கொண்டு, அவற்றுக்கான பதில்களைத் தானியங்கி (Automatically) முறையில் வழங்கி, மனித உரையாடலை உருவகப்படுத்துகிறது.

 

அனைத்து மனிதர்களின் பொதுப் பயன்பாட்டிற்கும் செயற்கை நுண்ணறிவு என்ற நோக்கத்தை கொண்ட OpenAI என்ற நிறுவனமானது மேற்கூறப்பட்ட Chatbot என்ற பிரயோக மென்பொருளைப் பயன்படுத்தி ChatGPT என்ற மிகப்பெரிய Language Model இனை உருவாக்கியுள்ளது. இது உரையாடலின் பொழுது உரையாடல் வடிவத்தில் தொடர்புகொள்வதற்கும், வியக்கத்தக்க பதில்களை வழங்குவதற்கும் குறிப்பிடத்தக்க திறனைக் கொண்டுள்ளது.

 

அதாவது எளிய தமிழில் கூறுவதென்றால் நீங்கள் ஓர் இயந்திர மனிதனை (Robo) வீட்டில் வைத்திருந்து அதனுடன் உரையாடுவதனைப் போன்றது. நீங்கள் தொடுக்கும் வினாக்களுக்கு நுட்பமான முறையில் பதிலளிக்கும். இங்கு இரண்டு விடையங்களை எப்பொழுதும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். முதலாவது இதற்கு 2021 ஆண்டு வரையான தகவல்கள் மட்டுமே தெரியும். பிந்திய தகவல்கள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இரண்டாவது, நாங்கள் மிகத்தெளிவாக வினாக்களை தொடுக்கும் பொழுதே அதுவும் சிறந்த பதிலை தரும். இதனால் வழங்கப்படும் பதில்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதனால் வழங்கப்படும் பதில்கள் சிலநேரங்களில் தவறாக இருக்கலாம். அல்லது, உங்களை தவறாக வழிநடத்தலாம். இது எந்த மொழிகளில் வினாக்களை வழங்குகிறோமோ அந்த மொழியிலேயே பதில்களை வழங்கும். இருப்பினும் எனது அனுபவத்தில் ஆங்கிலத்திலேயே பதில்கள் மிகவும் திருத்தமாக காணபடுகிறது.

 

இலவசமாக பயன்படுத்த முடியும்.

நாம் ChatGPTஇனை இலவசமாக பயன்படுத்த முடியும். அதேநேரத்தில் மாதாந்தம் 20 அமெரிக்க டொலர் சந்தாதராகவும் பயன்படுத்தலாம். நீங்கள் ChatGPTனை பயன்படுத்தி சிறுகதைகள் அல்லது செயற்திட்ட முன்மொழிவுகள் (Project Proposal) போன்ற ஆவணத்தை தயாரிக்கும் பொழுது ஆவணம் பெரிதாக அதாவது 1000 க்கு மேற்பட்ட சொற்களை கொண்டாதாக கோரப்பட்டால் ChatGPT ஆனது பெரும்பாலும் ஆவணத்தை தயாரிப்பதை இடைநடுவில் நிறுத்தும். நீங்கள் சந்தாதாரராக  இருந்தால் மட்டுமே தொடர முடியும். நீங்கள் இலவச மாதிரியை பயன்படுத்தினால் தொடர முடியாது. ஆவணத்தை மீள உருவாக்க (Regenerate) வேண்டும். சிலசமயங்களில் ஆவணத்தை முழுமையாக உருவாக்கமுடியாமல் போகும். பகுதி பகுதியாகவே உருவாக்க வேண்டியேற்படும்..

 

February 1, 2023, முதல், ChatGPT ஆனது ChatGPT Plus எனப்படும் கட்டணச் சந்தா மாதிரியை வழங்குகிறது. இந்த ChatGPT Plus ஆனது, உச்ச நேரங்களில் கூட பயனர்களுக்கு பொதுவான அணுகலை வழங்குகிறது, பயனர்கள் விரைவான பதிலை பெற்றுக்கொள்ள முடிவதுடன் புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுக்கான முன்னுரிமை அணுகலைப் பெற்றுக்கொள்ள முடியும்..ChatGPT Plus இலிருந்து விரைவான பதில்கள் மற்றும் வரம்பற்ற செய்திகளை பெற்றுக்கொள்ள முடியும்.

 

பயன்பாடுகள்

ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் ஓர் பேராசிரியர், MBA பரீட்சையை நிறைவுசெய்ய ChatGPT ஐ வெற்றிகரமாக  பயன்படுத்தியுள்ளார்.

 

சமீப நாட்களில், ChatGPT-ஐச் சுற்றியுள்ள பரபரப்புகள் மிக அதிக அளவில் விரிந்து வருகிறது, எதிர்காலத்தில் இந்தக் கருவி மிகப்பெரிய திறனைக் கொண்டதாக அமையும். அன்றாட வாழ்வில் ChatGPTயின் பல பயன்பாடுகளால், இது ஒவ்வொரு வயதினரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ChatGPT மனிதர்களைப் போன்ற பதில்களை உருவாக்குகிறது. இது தெளிவான மற்றும் உரையாடல் தொனியில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறனைக் கொண்டுள்ளது. இதன்மூலம் செயலொழுங்கு குறியீடுகளை உருவாக்கலாம், கதைகள், கவிதைகள் போன்றவற்றை எழுதலாம். இது ஒரு மனிதன் வழங்கும் விதத்தில் பதில்களை உருவாக்க இயற்கையான பதில்களை அளிக்கிறது. ChatGPTயின் சில பயன்பாடுகள் பின்வருமாறு:

  • 1.      செயலொழுங்கு குறியீடுகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • 2.      மொழிபெயர்ப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்
  • 3.      பிழைத்திருத்தங்களுக்கு பயன்படுத்தலாம்.
  • பாடல்கள், விருந்து யோசனைகள் போன்றவற்றுக்கு  பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • 5.      கவிதை அல்லது சிறுகதைகளை பெற்றுக்கொள்ளலாம்.
  • 6.      பரீடசைகளுக்கு தயாராவதற்கு குறிப்புக்களை பெற்றுக்கொள்ளலாம்.
  • 7.      பிடித்த உணவிற்கான செய்முறையைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • 8.      பாடலின் வரிகளை கொடுத்து பாடலைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • செயற்திட்ட முன்மொழிவுகள் போன்ற ஆவணங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  • 10.   புள்ளிவிபரவியல் ஆய்வுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இன்னும் பவற்றினை பெற்றுக்கொள்ளலாம்.

 

கூகுள் தேடலை விட ChatGPT சிறந்ததா?

கூகிள் தேடல் ஆனது எங்களால் தொடுக்கப்படும் வினாக்களுக்கு பொருத்தமான இணையதளங்களின் பட்டியலைத் தருவதன் மூலம், எங்கள் வினாக்களுக்கான பரிந்துரைக்கப்பட்ட பதில்களைப் பெற உதவுகிறது. மாறாக, ChatGPT இயற்கையான ஓட்டத்தில் துல்லியமான பதில்களை வழங்குகிறது. இது வழிகாடியாக  ஓர் புத்தகத்தைப் பயன்படுத்துவது போன்றது.

 

ChatGPT தொடங்கப்பட்டதில் இருந்து ChatGPT vs Google தேடலில் அதிக ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், பதில்களைப் பெற ChatGPT ஐப் பயன்படுத்தும் போது எப்போதும் ஆழ்ந்த பகுப்பாய்வு செய்ய வேண்டும். ChatGPT மூலம் பதிலைப் பெறுவது என்பது நம்பகமான தகவல் அல்லது மேற்கோள் அல்லது இணைப்புடன் இணைக்கப்படாத மூல உரையைப் பெறுவதாகும். அதைப் பயன்படுத்தும் போது பதில்களைச் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது.

 

ChatGPT னை பயன்படுத்துதல்

ChatGPT னை பயன்படுத்துவதற்கு இதில் ஓர் பயனர் கணக்கினை உருவாக்கிக்கொள்ள வேண்டும். எங்களிடம் கூகிள் மின்னஞ்சல் அல்லது மைக்ரோசொவ்ட் பயனர் கணக்கு இருப்பின் ChatGPT பயனர் கணக்கினை உருவாக்குவது மிக இலகுவானது.


அடுத்த தொடரில் ஓர் ChatGPT கணக்கினை உருவாக்கி அதனைப்பயன்படுத்தி எவ்வாறு உழைப்பது என்று பார்க்கலாம். மிகவிரைவில்  .......................