Sunday, July 18, 2021

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

எனக்கு கிடைக்கபெற்ற நிழற்பிரதி ஆவணமொன்றிளிருந்து தட்டச்சு செய்யப்பட்ட தகவல் இதுவாகும். இதனை தொகுத்த  ஆசிரியரின் பெயர் தெரியவில்லை.. அனால் இதனை தட்டச்சுச் செய்வதற்கே எனக்கு மிகவும் கடினமாக இருக்கையில் அவர் இதனை தொகுப்பதற்கு எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பது புலனாகிறது. எனது நோக்கம் சிறந்த இந்த தகவல்களை ஏனையோரும் அறிந்துகொள்ள செய்வதேயாகும். அந்த பெயர் தெரியாத தொகுப்பாளருக்கு எனது நன்றிகள். 

2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம்

2006 ஆண்டு மே மாதம் 19 திகதி அத்தட்சிப்படுத்தபட்டது.

ச. வ. ஓ. 08/2004

இலங்கையில், இலத்திரனியல் வடிவில் ஒப்பந்தங்களின், உருவாக்கத்தையும் தரவுத் தகவல்களையும் வேறு தகவல் தொடர்புகளையும் படைத்தலையும் பரிமாற்றம் செய்தலையும் ஏற்றங்கீகரிப்பதற்கும் அவற்றிற்கு வசதியளிப்பதற்கும் சான்றளிப்பு அதிகரசபையொன்றை நியமிப்பதற்கும் மற்றும் சான்றளிப்புச் சேவை வழங்குனர்களின் தராதர அங்கீகாரத்திற்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய இடைநேர் விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமானதொரு சட்டம்.

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் பாராளுமன்றத்தினால் பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுக:-

1,(1) இச் சட்டம் 2006 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்டம் என எடுத்துக்காட்டலாம்.சுருக்கப்பெயர்

(2)இச் சட்டத்தின் 1 ஆம் பிரிவின் ஏற்பாடுகள் இச்சட்டம் பாராளுமன்றச் சட்டமொன்றாகச் சான்றுபடுத்தப்பட்ட தேதியன்று நடைமுறைக்கு வருதல் வேண்டும் என்பதுடன், மற்றைய ஏற்பாடுகள் வர்த்தகமானியில் வெளியிடப்பட்ட கட்டளையால் அமைச்சர் நியமிக்கக்கூடியவாறான அத்தகைய தேதியன்று (இது இதனகத்துப் பின்னர் “நியமிக்கப்பட்ட தேதி” எனக் குறிப்பீடு செய்யப்படும்) நடைமுறைக்கு வருதலும் வேண்டும். நடைமுறைக்கு வரும் தேதியும்

அத்தியாயம் I

பொது ஏற்பாடுகள்

 2. சட்டத்தின் குறிக்கோள்கள் பின்வருவனவாதல் வேண்டும்:-

(அ) சட்டத் தடைகளை நீக்கி சட்ட நிட்சயத் தன்மையைத் தாபிப்பதன் மூலம் உள்ளூர் மற்றும் சர்வதேச இலத்திரனியல் வர்த்தகத்திற்கு வசதியளித்தலும்;

(ஆ) இலத்தரனியல் வர்த்தகத்தின் நம்பகமான வடிவங்களின் பாவனையை ஊக்குவித்தலும்;

(இ) அரசாங்கத்தில் ஆவணங்களை இலத்திரனியல் முறையில் கோப்பிடுதலுக்கு வசதியளித்தலும் நம்பகமான வடிவங்களிலான இலத்திரனியல் தகவல் தொடர்புகள் வாயிலாக அரசாங்க சேவைகளை வினைத்திறனுடன் வழங்குவதனை ஊக்குவித்தலும்; அத்துடன்

(ஈ) தரவுத் தகவல்களினதும் இலத்திரனியல் ஆவணம், இலத்திரனியல் பதிவேடு அல்லது தகவல் தொடர்புகளினதும் உண்மைத் தன்மையிலும், திட்பத்திலும், நம்பகத்தன்மையிலும் பொதுமக்களின் நம்பிக்கையை ஊக்குவித்தலும்;

தொடரும்...................