மின்னஞ்சல்
மின்னஞ்சல் என்பது இணையத்தை
பயன்படுத்தி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சாதனங்கள் மூலம் செய்திகளை
எழுதுதல், அனுப்புதல், மற்றும் பெறுதல்
போன்றவற்றைச் செய்யும் முறையாகும். சாதாரணமாக அஞ்சல்கள் அனுப்பும் போது
யாரிடமிருந்து யாரிற்கு அனுப்புவதைப் போன்று இங்கும் அனுப்புவபரின் மின்னஞ்சல்
முகவரியும் பெறுபவரின் மின்னஞ்சல் முகவரியும் தேவைப் படுகின்றது.
சாதாரண கடித
போக்குவரத்துடன் ஒப்புடுகையில் மின்னஞ்சலின் அனுகூலங்கள் ஐந்து தருக?
- விரைவானது மற்றும் செலவு குறைந்தது
- ஒலிகள் மற்றும் காணொளிகளை இணைக்க முடியும்
- பல வர்ண அல்லது வர்ண புகைப்படங்களை அனுப்ப முடியும்.
- ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும்.
- பாதுகாப்பானது. குறிப்பிட்ட ஒருவருக்கு அனுப்ப முடியும்.
- அனுப்பும் இடம் மற்றும் பெறும் இடம் முக்கியமில்லை.
பயிற்சி வினா:
1.
சாதாரண அஞ்சல், தொலைநகல், தொலைபேசி, என்பவற்றை அலுவலகங்களில்
பயன்படுத்துவதிலும் பார்க்க மின்னஞ்சல்(e-Mail) பயன்படுத்துவதன் நான்கு அனுகூலங்களை
எழுதுக? (PMA III 2010 (I) (2011))
2.
பின்வருவன பற்றி சிறுகுறிப்பு எழுதுக? மின்னஞ்சல்(email)
மின்னஞ்சல் சேவை
வழங்குநர்கள்
மின்னஞ்சல் சேவையைப் பல்வேறு நிறுவனங்கள் இலவசமாக வழங்கி வருகின்றன.
1.
ஜீமெயில் - கூகுள் நிறுவனம் - www.gmail.com
2.
ஹாட்மெயில் - மைக்ரோசாஃப்ட் நிறுவனம் - www.hotmail.com
3.
யாகூமெயில் - யாகூ நிறுவனம் - www.yahoomail.com
4.
ஏஓஎல்மெயில் - அமெரிக்கா ஆன்லைன் - www.aol.com
5.
ரீடிஃப்மெயில் - ரீடிஃப் நிறுவனம் - www.rediffmail.com
மின்னஞ்சல் முகவரியோன்றை
உருவாக்கும் படிமுறையை தருக
1.
குறித்த மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகப்பு பக்கத்தை உலாவியை பயன்படுத்தி
திறக்க.
2.
மின்னஞ்சல் சேவைக்குரிய பக்கத்துக்கு செல்லல்
3.
ஒரு மின்னஞ்சல் கணக்கை உருவாக்க ‘ஒப்பமிடல்’ (Sign Up) என்ற இணைப்பை
அழுத்தவும்.
4.
பெயர், வயது, முகவரி, பிறந்த நாள், பணி, தொலைபேசி எண் போன்ற சில
விவரங்களை ஒரு படிவத்தில் நிறைவு செய்து சமர்ப்பித்தால் ஒரு மின்னஞ்சல் முகவரி (email
address) கிடைக்கும்.
i. முகவரிக்காக தேர்வு செய்யும் பெயர் மற்றும் சேவையை வழங்கும் நிறுவனத்தின்
வலையகப் பெயரையும் கொண்டதாக இருக்கும். narakaselvan@gmail.com என்பதுபோல அம்முகவரி
அமையும்.
ii.
தேர்வுசெய்யும் பெயரில் ஏற்கெனவே ஒருவர் முகவரி பெற்றிருந்தால் வேறு பெயரைத் தேர்ந்தெடுக்க
வேண்டியிருக்கும்.
5.
மீண்டும் குறித்த மின்னஞ்சல் சேவை நிறுவனத்தின் முகப்பு பக்கத்துக்கு சென்று மின்னஞ்சல்
சேவைக்குரிய பக்கத்துக்கு செல்லல்.
6.
மின்னஞ்சல் முகவரியையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தி மின்னஞ்சல் சேவையை
பெறலாம்.
பயிற்சி வினா:
1.
www.gmail.com என்ற கூகுளின் மின்னஞ்சல்
சேவை முகவரியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கினை ஆரம்பிபதற்கான படிமுறையை தருக.
2.
இலவச மின்னஞ்சல் சேவையை வழங்கும் நிறுவங்கள் முன்றின் வலைத்தள முகவரிகளை தருக?
மின்னஞ்சல் முகவரி
இலவச மின்னஞ்சல் முகவரியானது பின்வரும் வடிவமைப்பில்
காணப்படும்.
மின்னஞ்சல் வழங்குனர்கள் விருப்பதெரிவு
|
பயனாளர் விருப்பதெரிவு
|
மின்னஞ்சல் முகவரியை அடையாளம் காண விசேட
குறியீடு @''
உச்சரிப்பு “at”
|
மின்னஞ்சல் முகவரியில் பயனர் விருப்ப தெரிவானது மற்றவர்களால்
இலகுவில் ஞாபகம் வைத்திருக்க கூடியவாறு கூடியளவு சிறியதாகவும் பொருத்தமானதாகவும்
இருத்தல் வேண்டும்.
மின்னஞ்சல்
கணக்கின் பகுதிகள்
1.
Inbox
குறித்த
முகவரிக்கு வரும் மின்னஞ்சல் இங்கு சேமிக்கப்படும்.. வாசிக்கப்படாத மின்னஞ்சல்கள்
தடித்த எழுத்திலும் மற்றவை மெல்லிய எழுத்திலும் காணப்படும். மேலும் வாசிக்கப்படாத
மின்னஞ்சல்களின் எண்ணிக்கையானது Inbox என்ற சொல்லை தொடர்ந்து
அடைப்புக்குறிக்குள் கண்பிகப்படும்.
உதாரணம்: Inbox (18)
2.
Compose /New
ஒருவருக்கு
மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கு இது பயன்படும். இது பின்வரும் உட்பிரிவுகளை
கொண்டது.
i.
To
மின்னஞ்சல்
யாருக்கு அனுப்பபடவேண்டுமோ அவரின் மின்னஞ்சல் இங்கு கொடுக்கப்படவேண்டும்.
பலருக்கு ஒரே
மின்னஞ்சலை அனுப்பவேண்டுமாயின் இதற்குள் எல்லோருடைய மின்னஞ்சலையும் cama (“,”) ஐ பயன்படுத்தி வேறுபடுத்தியவாறு இடல் வேண்டும்.
ii.
CC(Carban Copy)
இதில் யாருக்காவது
மின்னஞ்சலின் பிரதி அனுப்பவேண்டுமாயின் அவரின் மின்னஞ்சல் முகவரி இங்கு இடப்படல்
வேண்டும்.
இது அரச அலுவலக
கடிதங்களில் பயன்படுத்தப்படும் “Copy to:” போன்றது.
இவருக்கும்
மின்னஞ்சல் பிரதி அனுப்பப்படுவது பிரதானமாக மின்னஞ்சல் பெறுநருக்கு தெரியவரும்.
iii.
BCC(Blind Carbon
Copy)
இதில் யாருக்காவது
மின்னஞ்சலின் பிரதி அனுப்பவேண்டுமாயின் அவரின் மின்னஞ்சல் முகவரி இங்கு இடப்படல்
வேண்டும்.
இவருக்கும்
மின்னஞ்சல் பிரதி அனுப்பப்படுவது பிரதானமாக மின்னஞ்சல் பெறுநருக்கு தெரியவராது.
குறிப்பு:
To இலோ CC இலோ இடப்படும் மின்னஞ்சல்
முகவரிகள் பெறுனர் அனைவருக்கும் தெரிய வரும். அனால் BCC இல் இடப்படும் மின்னஞ்சல்
முகவரிகள் ஏனைய பெறுனர்களுக்கு தெரிய வராது.
iv.
Subject
அனுப்பப்படும் மின்னஞ்சலின் நோக்கத்தை தெளிவுபடுத்தும்
பகுதியாகும்.
மின்னஞ்சலின் சாராம்சத்தை ஒட்டியதாகவும் பெறுனரை இலகுவாக
அறியக்கூடியதாககவும் இருக்கக்கூடிய ஒரு தலைப்பினை இங்கு இடல் வேண்டும்.
v.
Body
மின்னஞ்சலின்
பிரதானமான பகுதி இதுவாகும்.
சாதாரண கடிதம்
போன்று இங்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய விடையத்தை இங்கு இடல் வேணும்.
சொல்லாடல்
மென்பொருளில் செய்யக்கூடிய எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப்பிழை போன்ற அடிப்படை
வடிவமைப்புக்களை இங்கும் செய்யலாம்..
vi.
Attach Files
இம் மின்னஞ்சலுடன்
வேறு எதாவது புகைப்படம், காணொளி மற்றும் குரல் செய்திகள்
மற்றும் அழைப்பிதழல்கள் போன்றவற்றை இணைக்கலாம்.
பொதுவாக
ஆகக்கூடியது 25 MB கொள்ளளவுடைய கோப்புக்களையே இணைக்க முடியும்.
3.
Send Mail
இம் மின்னஞ்சல் முகவரியினால்
அனுப்பப்படும் மின்னஞ்சல்களின் பிரதியொன்று இங்கு பாதுகாக்கப்படும்.
இம் மின்னஞ்சல் மூலம்
யார்யாருக்கு மின்னஞ்சல்கள் அனுப்பபட்டுள்ளது என்பதனை Send Box என்ற கோப்புறைக்கு
செல்வதன் மூலம் அறியலாம்.
வினா:
உமது மின்னஞ்சல்
முகவரியிலிருந்து ஓர் குறித்த மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதை எவ்வாறு
உறுதிப்படுத்துவீர்?
i. Send box கோப்புறைக்கு சென்று குறித்த முகவரிக்கு மின்னஞ்சல்
அனுப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தல்.
ii.
Inbox கோப்புறைக்கு சென்று குறித்த
மின்னஞ்சல் திருப்பி வரவில்லை என்பதை உறுதிப்படுத்தல்.
இரண்டு உறுதிப்படுத்தப்டுத்தலின்
பின்னர் குறித்த முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பபட்டுள்ளது என உறுதிப்படுத்தலாம்.
4.
Trash
எம்மால் தேவையற்றதென
அல்லது தவறுதலாக நீக்கப்படும் மின்னஞ்சல் இங்கு சேமிக்கப்படும்.
Windows இயக்க முறைமையில் காணப்படும் மீள்சுற்ரோட்ட கொள்கலம் (Recylebin) போன்றது.
இங்கிருந்தும் நீக்கப்பட்டால்
சாதாரண முறைகளில் மீளப்பெற முடியாது.
5.
Spam
குறிப்பிட்ட
மின்னஞ்சல் கணக்குக்கு முன்பின் அறிமுகமில்லா மின்னஞ்சல் முகவரிகளிடமிருந்து
அல்லது சந்தேகத்துகிடமான முகவரிகளில் இருந்து வரும் மின்னஞ்சல்களை சேமிக்கும்
கோப்புறை.
வினா:
1.
குறிப்பிட்ட மின்னஞ்சல் Spam மின்னஞ்சல் என்பதை
எவ்வாறு உருதிப்படுத்துவீர்?
பின்வரும்
கருத்துக்களை கருப்பொருளாக கொண்ட தலைப்புக்களில் வரும் மின்னஞ்சல்கள் பெரும்பாலும்
Spam மின்னஞ்சல்களாகத்தான் இருக்கும்.
i.
எமக்கு அவசியமேயில்லாத பொருட்கள் மற்றும் சேவைகள்
ii.
நம்ப முடியாத விலைக் கழிவுடன் பொருட்கள்
iii. இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
iv. பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சான்றிதழ்கள்
v. மலிவு விலையில் கணினி மென்பொருள்கள்
vi. இணையம் வழி சூதாட்டம்
vii. குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
viii. மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல்
iii. இழந்த இளமைபோ மீட்டுக் கொள்ள மருந்து மாத்திரைகள்
iv. பல்கலைக் கழகம் செல்லாமலேயே பட்டப் படிப்புச் சான்றிதழ்கள்
v. மலிவு விலையில் கணினி மென்பொருள்கள்
vi. இணையம் வழி சூதாட்டம்
vii. குறுகிய காலத்தில் உங்களை குபேரனாக மாற்றும் திட்டம்
viii. மற்றும் சட்ட விரோத செயல்களுக்கு உதவுதல்
2. ஸ்பாம் மின்னஞ்சலை எவ்வாறு தவிர்க்கலாம்?
i. ஸ்பாம் எதிர்ப்பு அல்லது ஸ்பாம் வடிகட்டும் (spam filter) மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவுதல்.
ii. மின்னஞ்சல் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுதல்.
ii. மின்னஞ்சல் அனுப்பியவர் யார் எனத் தெரியாத பட்சத்தில் அதனை அழித்து விடுதல்.
iii. ஸ்பாம் மின்னஞ்சல் என சந்தேகிக்கும் மின்னஞ்சல்களுக்கு ஒரு போதும் பதில்
அளிக்கவோ அல்லது அதனோடு வரும் இணைப்பில் அழுத்தவோ கூடாது.
iv. ஸ்பாம் மின்னஞ்சல் என சந்தேகிக்கும் மின்னஞ்சல்களில் வரும் விளம்பரங்களைப்
பார்த்து பொருட்களையோ சேவையையோ கூடாது.
v. சில இணைய தளங்களில் படிவங்களை நிரப்பும்போது
“மேலதிக விவரங்களைப் பெற” என்பதை தெரிவு செய்ய கூடாது.
vi. மின்னஞ்சலை திறக்காமலே அதன் உள்ளடக்கங்களைக் காட்டும் வசதியை பயன்படுத்த
கூடாது.
vii. ஒரே மெயிலைப் பல பேருக்கு அனுப்பும் போது Bcc (Blind Carbon Copy) எனும் , இடத்தில் முகவரிகளை உள்ளீடு
செய்தல்.
viii. மின்னஞ்சல் முகவரிகளை நம்பிக்கையானவர்களிடம் மட் டுமே பகிர்ந்து கொள்ளல்.
ix. ஒன்றுக்கு மேற்பட்ட மின்னஞ்சல் முகவரிகளை
பயன்படுத்துதல்.
x. இணைய தளங்கள் மற்றும் செய்தி குழுக்கள் போன்றவற்றைப் பார்வையிடும் போதும் இணைய அரட்டையில் ஈடுபடும் போதும் மின்னஞ்சல் முகவரிகளை வழங்க நேரிடும் போது மின்னஞ்சல் முகவரிகளில் பயன்படுத்தப்படும்
“ @ “ எனும் குறியீட்டுக்குப்
பதிலாக AT என உள்ளீடு செய்யவும்.
3. கணினியின் Desktop இல் சேமிக்கப்பட்டுள்ள Invitation என்ற
தலைப்பிலான கோப்பினை இணைப்பாக கொண்டு narakaselvan@gmail.com என்ற
முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்புவதற்கான படிமுறையை தருக?
i. இணைய உலாவியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கினை திறத்தல்.
ii. அங்கு Compose என உள்ள பொத்தானை அழுத்துக.
iii. தோன்றும் மின்னஞ்சல் அனுப்புவதற்கான திரையில்
To – என்ற உரைப்பெட்டியில் மின்னஞ்சல் பெறுநரின் முகவரியான narakaselvan@gmail.com என்பதனை பதிவு செய்க.
Subject – மின்னஞ்சலின் கருப்பொருளை குறிக்கும் வகையில் Invitation for DCC from GA Trincomalee என பதிவு செய்க.
கிழேயுள்ள பெரிய உரைபெட்டியில் உரியவருக்கான தெளிவு படுத்தல் கடிதத்தை பதிவு
செய்க.
iv. கிழேயுள்ள Attach Files (paper clip வரைகலை குறியீட்டை கொண்ட) என்பதை அழுத்துக.
v. தோன்றும் சொல்லாடல் பெட்டியில் Desktopஎன்பதனை தெரிவு செய்து அதில் invitationஎன்ற கோப்பினை தெரிவு செய்து openஎன்பதை
தெரிவு செய்க.
vi. சிறிது நேரத்தில் தெரிவுசெய்யப்பட்ட கோப்பானது மின்னஞ்சலுடன் இணைக்கப்படும். உரைப்பெட்டியின்
இறுதியில் அதற்கான சுட்டுக்குறி கோப்பின் கொள்ளளவுடன் காணப்படும்.
vii. Send என்பதை
அழுத்துக.
viii. Send என்ற கோப்புறைக்கு சென்று மின்னஞ்சல் சென்றதையும் inbox கோப்புறைக்கு சென்று மின்னஞ்சல் மீண்டும் திரும்பி வரவில்லை
என்பதனையும் உறுதிப்படுத்துக.
4. மின்னஞ்சலுடன் இணைப்பாக வந்துள்ள சொல் விரிதாள் கோப்பொன்றை பதிவிறக்கம்
செய்வதற்கான படிமுறையை தருக.
i. இணைய உலாவியை பயன்படுத்தி மின்னஞ்சல் கணக்கினை திறத்தல்.
ii. Inbox இணைப்பில்
அழுத்தி Inbox கோப்புறை
தெரிவுசெய்யப்பட்டுள்ளதை உருதிப்படுத்திக்கொள்க.
iii. குறித்த மின்னஞ்சல் முகவரிக்கு வந்த மின்னஞ்சல்கள் வலப்பக்கத்தில்
பட்டியலிடப்பட்டிருக்கும். குறித்த மின்னஞ்சலை இனங்காங்க.
iv. மின்னஞ்சலுக்கு அருகே வலப்பக்கத்தில் paper clip வரைகலை குறியீடு உள்ளதை
உறுதிப்படுத்துக. குறியீடு இருப்பின் இணைப்பு உள்ளது. உறுதிப்படுத்தப்படும்.
v. அவ் மின்னஞ்சலை திறந்து இணைப்புக்கு அருகேயுள்ள கிழ்நோக்கிய அம்புக்குறியில்
அல்லது Download என்ற சொல்லில் அழுத்துக.
vi. தோன்றும் சொல்லாடல் பெட்டியில் Save File என்பதை தெரிவு செய்து OK என்பதை அழுத்துக.
vii. கோப்பானது Download என்ற கோப்புறையில் இயல்பாக சேமிக்கப்படும். அங்கு சென்று கோப்பினை தெரிவு
செய்து விரும்பிய இடத்துக்கு நகர்த்துக.
பயிற்சி
வினாக்கள்
1.
மின்னஞ்சல் மூலம் கிடைத்த இணைப்புடன்
கூடிய ஒரு செய்தியை Desktop இல் தேக்கிவைத்து பின்னர் திறந்து பார்க்கும் விதத்தை
எழுதுக. (PMA II 2006 – I (2007)
Hint:
மின்னஞ்சல்
செய்தியை வேறாகவும் இணைப்பை வேறாகவும் சேமிக்க வேண்டும்.
மின்னஞ்சலை
சேமிப்பதற்கு file à save as à location à file Type eஎன்பதனை பயன்படுத்துக.
2.
இணைப்புடன் கூடிய ஒரு மின்னஞ்சல் செய்தியை alice@yahoo.com முகவரிக்கு அனுப்பும் விதத்தினை சுருக்கமான படிமுறைகளின் மூலம் முன்வைக்க? (PMA II 2006 – I (2007)