Wednesday, February 4, 2015

மைக்ரோசாப்ட் ஒபீஸ் 2013 இல் ஆவணங்களை பகிர்தல்



ஆவணங்களை பகிர்தல் (“Sharing Documents”)
  1. மைக்ரோசாப்ட்டின் பயனர் கணக்கை கொண்டிருக்க வேண்டும்.
  2. ஆவணங்களை பகிர்தலுக்கு அவை மைக்ரோசாப்ட்டின் OneDriveஇல் சேமித்தல் வேண்டும்.


மைக்ரோசாப்ட்டின் பயனர் கணக்கு.
  1. இணைய இணைப்பிருந்தால் எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்
  2. எம். எஸ். ஆபீஸ் ஆவணங்களை இணைய உலாவிகளிலேயே வைத்து திருத்தம் செய்யமுடியும்.
  3. ஆவணங்களை பகிர்தலுக்கு பயன்படுத்த முடியும்

மைக்ரோசாப்ட்டின் பயனர் கணக்கினை உருவாக்குதல்
  1. இணைய உலாவியை திறந்து “login.live.com” என்ற இணைய முகவரிக்கு செல்க.
  2. “Sign in” என்ற தலையங்கத்துடனான இணைய தளம் ஒன்று தோன்றும்.
  3. அதன் இறுதியில் உள்ள “Sign up Now என்ற மிகையிணைப்பில் அழுத்துக.
  4. புதிய பயனர் கணக்கொன்றை நிறுவுவதற்கான விண்ணப்பப்படிவம் ஒன்று தோன்றும். அதன் வேண்டுகைகளுக்கமைய விண்ணப்பப்படிவத்தை பூரணப்படுத்துக.
  5. Create Account என்பதை தெரிவு செய்வதன்மூலம் பயனர் கணக்கை நிறுவுக
  6. இப் பெறுனர் கணக்கை பயன்படுத்தி மைக்ரோசாப்ட்டின் சேவைகளை பெறமுடியும்.
 
“onedrive” இல் சேமித்தல்
  1. மைக்ரோசாப்ட்டின் பயனர் கணக்கினை பயன்படுத்தி மைக்ரோசொப்ட் ஆபீஸ் மென்பொருளை திறத்தல்
  •  ஆபீஸின்.வலதுபக்க மேல்மூலையில் உள்ள Sign in  இல் அழுத்துக 
  •  Sign in” என்ற தலையங்கத்துடனான இணையதளம் ஒன்று தோன்றும். அதில் மைக்ரோசாப்ட்டின் பயனர் கணக்கின் மின்னஞ்சல் முகவரியை இடுக 
  •  Sign in” என்பதை அழுத்துக. கடவுசொல்லை கேட்கும். கடவுச்சொல்லை இட்டு மீண்டும் “Sign in” என்பதை அழுத்துக. 
  •  வலதுபக்க மேல்மூலையில் மைக்ரோசாப்ட்டின் பயனர் பெயரும் புகைப்படம் கொடுக்கப்பட்டிருந்தால் புகைப்படமும் தோன்றும். 
  1. ஆவணத்தின் மேல் பக்கத்தில் காணப்படும் நாடாவின் (“Ribbon”) இடதுபக்கத்தில் உள்ள கோப்பு(“File”) என பெயரிடப்பட்ட சுட்டுத்துண்டில்(“Label) சொடுக்கவும். 
  2. தோன்றும் திரையில் இவ்வகையில் சேமி(“Save as”) என்ற சுட்டுத்துண்டில் சொடுக்கவும். பின்னர் தோன்றும் திரையில் இவ்வகையில் சேமி (“Save as”) என்ற சுட்டுத்துண்டின் கீழுள்ள OneDrive-தனிப்பட்டது இல் அழுத்தவும்.
  3. உலாவு (“Browse) பொத்தானில் சொடுக்கி தோன்றும் உரையாடல் சட்டத்தில் ஆவணத்தின் சேமிக்கப்பட வேண்டிய இடத்தினை தெரிவு செய்க. 
  4. கோப்பு பெயர் (“File Name) என்ற சுட்டுத்துண்டினை தொடர்ந்துள்ள பனுவல் பெட்டியில் (“Text Box”) உள்ள “Doc1.docx என்ற பெயரினை அழித்து ஆவணத்தின் புதிய பெயரினை உள்ளிடு செய்க. 
  5.  சேமி (“Save) என்ற பொத்தானை சொடுக்குக. மீண்டும் ஆவணத்தின் முகப்பு தோன்றும். அதில் ஆவணத்தின் பெயர் மாற்றமடைந்திருக்கும்.

“OneDrive” இல் சேமிக்கப்பட்ட ஆவணத்தை பகிர்தல்
நபர்களை அழை (Invite People)
இதனை பயன்படுத்தி ஆவணத்தை யார் யாருடன் பகிர வேண்டுமோ அவர்களின் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை கொடுத்து அவர்களுக்கு ஆவண பகிர்வு பற்றி அறிவிக்கலாம். அத்துடன் இதில் அவர்களால் ஆவணத்தை பார்க்க அல்லது திருத்த அனுமதிக்க முடியும். மேலும் தனிப்பட்ட செய்தியையும் இணைக்க முடியும். இதுவே பகிர்வின் இயல்புநிலை தெரிவு ஆகும்.

பகிர்வு இணைப்பை பெறு (Get a Sharing Link)
பெரும் குழுவான நபர்களுடன் பகிர்வதற்கு அல்லது மின்னஞ்சல் முகவரி தெரியாத நபர்களுடன் பகிர்வதற்கு இதனை பயன்படுத்தலாம். இங்கு உருவாக்கப்படும் இணைப்பை வலைப்பதிவு (Blog) போன்றவற்றில் வெளியிட்டு இவ் இணைப்பை பெறும் அனைவருடனும் ஆவணத்தை பகிரலாம். அத்துடன் இதில் அவர்களால் ஆவணத்தை பார்க்க அல்லது திருத்த அனுமதிக்க முடியும் மேலும் தனிப்பட்ட செய்தியையும் இத்துடன் இணைக்க முடியும்.

சமுக வலையமைப்புக்களுடன் இடுக்கையிடல் (Post to Social Network)
குறிப்பிட்ட ஆவணத்தை முகநூல் (Facebook), ட்விட்டர் (Twitter),  Linkln போன்ற சமுக வலைத்தளங்களுக்கு இடுக்கையிட முடியும். ஆவணமானது எந்த சமுக வலைத்தளத்தில் யாரால் இடுக்கையிடப்படுகிறதோ அந்த வலைத்தளத்தில் அவருடன் நண்பர்கள் ஆக உள்ள அனைவரும் பகிரலாம். முடியும் மேலும் தனிப்பட்ட செய்தியையும் இத்துடன் இணைக்க முடியும்.

மின்னஞ்சல் இணைப்பாக பகிருதல் (E-Mail)
ஆவணமானது Outlook மின்னஞ்சல் சேவை மென்பொருளின் உதவியுடன் பகிரப்படும்.
       i.     இணைப்பாக அனுப்புதல் (Send as an attachment)
மதிப்பாய்வு செய்வதற்கு ஒவ்வொருவரும் இணைப்பை பெறுவார்கள்.
ஒருவர் மேற்கொள்ளும் அண்மைய திருத்தங்களை மற்றவர் பார்க்க முடியாது.
இறுதியில் ஆவணம் தொகுக்கப்படவேண்டும்.
மின்னஞ்சலின் அளவு பெரிதாக இருக்கும்.
     ii.     இணைப்பு ஒன்றை அனுப்பு: (Send a Link)
அனைவரும் ஒரே நகலில் பணிபுரிவார்கள்
சமிபத்திய மாற்றங்களை எல்லோரும் காணலாம்
மின்னஞ்சலின் அளவு குறைவாக இருக்கும்.
    iii.     Pdf ஆக அனுப்பு (Send as PDF)
அனைவரும் pdf இணைப்பை பெறுவர். இவ் வகையில் பகிரும் பொழுது ஆவணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தளவமைப்பு, வடிவமைத்தல், எழுத்துருக்கள் மற்றும் படங்களை மாற்றமடையாது பாதுக்காக்கும். அத்துடன் இவ் ஆவணத்தின் உள்ளடக்கத்தை எளிதாக மாற்ற முடியாது.
    iv.     xps ஆக அனுப்பு (Send as XPS)
அனைவரும் xps  இணைப்பை பெறுவர். இவ் வகையில் பகிரும் பொழுது ஆவணத்தில் மாற்றத்தை ஏற்படுத்த கூடிய தளவமைப்பு, வடிவமைத்தல், எழுத்துருக்கள் மற்றும் படங்களை மாற்றமடையாது பாதுக்காக்கும். அத்துடன் இவ் ஆவணத்தின் உள்ளடக்கத்தை எளிதாக மாற்ற முடியாது.
      v.     இணைய தொலைநகலாக அனுப்பு (Send as a Internet Fax)
தொலைநகல் இயந்திரதின் உதவியின்றி கணினிமூலமாக நேடியாக தொலைநகலாக ஆவணத்தை தொலைநகல் இயந்திரத்துக்கு அனுப்ப முடியும். இருப்பினும் கணினியின் இணைய இணைப்பானது தொலைநகல் சேவையை கொண்டிருக்கவேண்டும்.

ஒன்லைனில் வழங்கு (Present online)
ஆவணத்தை ஒன்லைனில் பகிர்வதற்காக இணைப்பு  ஒன்று உருவாக்கப்படும். இந்த இணைப்பை மின்னஞ்சலினுடாக விரும்பும் நபர்களுக்கு அனுப்ப வேண்டும். ஆவர்கள் இணைய உலாவியினூடா இணைப்பை பயன்படுத்தி  நாம் ஒன்லைனில் இருக்கும் பொது ஆவணத்தை பரிவையிடலாம். அனால் ஆவணத்தில் நேரடியாக மாற்றம் செய்யமுடியாது. தரவிறக்கவோ அல்லது வன்பிரதி பெறவோ முடியும்.

வலைப்பதிவுக்கு அனுப்பு(Post to Blog)
வோர்ட்ப்ரெஸ் (wordpress), ப்ளாக்கர் (blogger ) போன்றவற்றின் உதவியை பயன்படுத்தி வலைபதிவோன்றை உருவாக்க வேண்டும். பின்னர் இவ் ஆவணத்தை வலைப்பதிவில் வெளியிடலாம்.

ஆக்கங்கள் தொடர்பான உங்களுடைய கருத்துக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.