Microsoft to Do என்பது எமது
அன்றாட பணிகளை
முகாமைத்துவம் செய்யக்கூடிய
ஒரு இலவச
மென்பொருள் ஆகும்.
இதனை கணினிகளில்
மட்டுமல்லாது Smart Phone மற்றும் Tab களிலும்
பயன்படுத்த முடியும்.
இது Microsoft பயனர் கணக்கினை அடிப்படையாக
கொண்டு செயல்படுத்தப்படுகிறது.
1.
இதனை பின்வரும்
தேவைகளுக்கு பயன்படுத்த
முடியும்.
2.
பொருத்திகொள்வனவை ஞாபமூட்டும்
Shopping lists
3.
அன்றாட கடமைகளை
ஞாபகமூட்டும் Task lists
4.
மறக்கக்கூடிய விடயங்களை
குறிப்பெடுக்க Take notes
5. எம்மால் பதிவுசெய்யப்படும்
உரைகளை அல்லது
காணொளிகளை முகாமைத்துவம்
செய்ய Record collections
6.
எமது செயற்பாடுகளை
முன்கூட்டியே திட்டமிட்டு
தேவைப்படும் நேரத்தில்
ஞாபகமூட்ட Plan an event
7.
குறித்த ஒருபணியை
நாம் மறக்காதிருக்க
Set reminders
இதில் ஒருவர்
மட்டுமல்லாது ஒரு
குறித்தவேலையை பலருடன்
இணைந்து அவர்களுக்கிடையில்
பகிந்து பயன்படுத்த
முடியும்.
பதிவிறக்கம் செய்தல்
இதனை கணினிகளுக்கு
https://todo.microsoft.com/ என்னும்
முகவரியில் இருந்து
பதிவிறக்கம் செய்துகொள்ள
முடியும். மேலும்
Android மற்றும் iOS இரண்டிற்கும்
பதிவிறக்கம் செய்து
பயன்படுத்த முடிவதால்
எப்போதும் எங்கள்
Pocket இல் வைத்திருக்கலாம்,
இது
செய்யவேண்டிய வேலையை
எப்பொழுதும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும்.
முதல் தடவை திறத்தல்
நீங்கள் முதல்
முறையாக Microsoft To Do இனை
த் திறக்கும்
போது, Wunderlist இலிருந்து Lists களை import செய்ய விரும்புகிறீர்களா என்று
கேட்கும். Wunderlist என்பது Microsoft
சில ஆண்டுகளுக்கு
முன்பு வாங்கிய
to-do
list நிறுவனமாகும், பின்னர்
மே 2020 இல் மூடப்பட்டது,
Microsoft
To Do List இன்
பிரதான மெனு
இரண்டு பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது:
முதலாவது பகுதியானது
மேலும் பின்வருமாறு
பிரிக்கப்பட்டுள்ளது.
My Day: குறித்த நாளில்
நாங்கள் முடிக்கவேண்டிய
வேலைகளை இங்கு
சேர்க்க முடியும்.
Important: அதிமுக்கியமான வேலைகளை
இங்கு சேர்க்க
முடியும்.
Planned: எதிர்காலத்தில் செய்வதற்கு
திட்டமிட்டுள்ள வேலைகளை
குறித்த திகதிகளில்
செய்வதற்காக இங்கு
சேர்த்து ஞாபகமூட்டல்களையும் இணைக்க முடியும்.
Assigned to you: இங்கு குழுவாக செயல்படும்போது
எமக்கென ஒதுக்கப்படும்
வேலைகளை பார்க்க
முடியும்.
Tasks: List: இற்கு வெளியே
ஒரு வேலையை
உருவாக்கினால், அது
Tasks இருக்கும்.
Lists
எங்களால் உருவாக்கப்பட்ட
Lists மற்றும் பிறரால்
எங்களுடன்
பகிர்ந்து கொள்ளப்பட்ட
Lists
என்பன இங்கு
காணப்படும். தேவைப்பட்டால் மேலும் இந்த
Lists இல் வேலைகளை
சேர்க்க முடியும்,
Business
மற்றும் Private
ஆகிய இரண்டையும்
கலந்து இணைத்துக்
கொள்ளலாம்.
Microsoft To Do இன் Keyboard Shortcuts
1.
Ctrl + N: புதிய வேலையை உருவாக்குதல்
2.
Ctrl
+ L: புதிய பட்டியலை
தயாரித்தல்
3.
Ctrl
+ T: My Day இனுள் வேலையை
உருவாக்குதல்
4.
Ctrl
+ D: வேலையை முடிவுற்ற
வேலையாக மாற்றுதல்
5.
Ctrl
+ F: வேலையை தேடல்
6. Ctrl + R: Devices களுக்கிடையில் பயனர்
ஒத்திசைவை (Synchronization) ஏற்படுத்துதல்
7.
Ctrl
+ 1: sidebar இனை திறத்தல்
புதிய List ஒன்றை உருவாக்கி வேலைகளை சேர்த்தல்.
1.
இடதுபக்க கீழ்மூலையில்
உள்ள New List
இல் Click செய்யவும்
2.
புதிய List இற்கான பெயரினை
type செய்யவும்
3.
Enter key இனை அழுத்தவும்
மேலும் இதற்கு
எமோஜிகளை சேர்க்க
முடியும், ஆனால்
அதனை online அல்லது Desktop கணினிகளில்
பயன்படுத்தப்படும் Microsoft To Do இற்கு
பயன்படுத்த முடியாது.
Smartphone
களில் உள்ள
Microsoft To Do இற்கு பயன்படுத்தலாம்.
புதிதாக உருவாக்கப்பட்ட
List இல்
Right Click செய்யும் பொழுது
தோன்றும் Menu ஐப் பயன்படுத்தி
பின்வருவனவற்றை மேற்கொள்ள
முடியும்.
1.
List இன்
பெயரினை மாற்றுதல்
: Rename List
2.
List இனைப்
பகிர்தல்: Share List
3.
குறித்த List இனை உருவாக்கப்பட்ட
குழுவொன்றிற்கு நகர்தல்:
Move
List to
4.
List இனைப்
அச்சுப்பிரதி எடுத்தல்:
Print
List
5.
குறித்த List இனை மின்னஞ்சலினூடாக
அனுப்புதல்:Email List
6.
Microsoft
To Do இனைத் திறக்கும் பொழுது
முதலாவதாக தோன்றவைத்தல்:
Pin
to Start
7.
குறித்த List இல் இருந்து
பிரதியொன்றினை உருவாக்குதல்:
Duplicate
List
8.
குறித்த List இனை Menu இல் இருந்து நீக்குதல்:
Delete
List
உருவாக்கப்பட்ட List இல் புதிய வேலைகளை சேர்த்தல்
1.
வேலையை உருவாக்க
வேண்டிய List இனை தெரிவுசெய்யவும்.
2. தோன்றும் Window வின் கீழ்ப்பகுதியில் காணப்படும்
"+ Add Task" என்ற பகுதியில்
அழுத்தவும்.
3.
Task
இனை பதிவுசெய்து
Enter Key இனை அழுத்தவும்.
ஒரு List இல் இருந்து இன்னோர் List இற்கு Task இனை நகர்த்துதல்
1. குறித்த List இனை தெரிவுசெய்து நகர்த்தவேண்டிய
Task இனை தெரிவுசெய்யவும்
2.
Task
இன் மீது
Cursor இனை வைத்து
அழுத்தியபடி இழுத்து
வந்து Task இனை சேர்க்கவேண்டிய List இன் மீது விடவும்.
3.
Task
ஆனது இணைக்கப்படவேண்டிய
List இல் சேர்க்கப்படும்.
ஒரு வேலையை மேலும் customize செய்ய உதவும் விருப்பத்தேர்வுகள்.
மேலும் விவரங்களைச்
சேர்க்க குறித்த
வேலையை தெரிவு
செய்யும் போது
வலப்பக்கத்தில் பின்வரும்
மேலதிக தெரிவுகள்
தோன்றும்.
1.
¡: இந்த வட்ட
வடிவ குறியீட்டினை
தெரிவு செய்வதன்
மூலம் குறித்த
வேலையை முடிவுற்ற
வேலையாக மாற்றலாம்.
2.
«: இந்த
நட்சத்திர வடிவ
குறியீட்டினை தெரிவு
செய்வதன் மூலம்
குறித்த வேலையை
முக்கியத்துவம் வாய்ந்த
வேலையாக மாற்றலாம்.
இது உடனடியாக
Important List இல் இணைக்கப்படும்.
3.
Steps: ஒரு வேலைக்குரிய steps அல்லது subtasks களை
சேர்ப்பதற்கு
பயன்படும்.
பிரதான வேலையை
முடிப்பதற்கு இவை
சிறு சிறு
வேலைகளாக இருக்கலாம்
அல்லது அவை
முன் தேவைகளாகவும்
இருக்கலாம்.
4.
Add
to My Day: இன்று செய்ய
வேண்டிய வேலைகளின்
Iist இனைப்
பார்ப்பதற்கு, அந்தந்த
வேலைகள் Add any
task to My
Day இல்
சேர்க்கப்படல் வேண்டும்.
அன்றைய தினம்
வேலை முடியாவிட்டால்,
மறுநாளுக்கு நகராது.
நாங்கள் அதை
manual ஆக
நகர்த்த வேண்டும்.
5.
Remind me: குறித்த
வேலையை குறித்த
தினத்தில் குறித்த
நேரத்தில் நினைவூட்டுவதற்கு
பயன்படும்.
6.
Add a due
date: இங்கு குறிப்பிடப்படும்
திகதியில் வேலையினை
Planned List இல் சேர்க்கும்.
இங்கு குறிப்பிடப்படும்
திகதியில் முடிவுறாமல்
தாமதமான வேலைகள்
சிவப்பு நிறத்தில்
காட்டப்படும்.
7.
Repeat: தினசரி, வாராந்திரம்,
அல்லது மாதாந்திரத்தில்
ஒரு வேலையை
மீண்டும் மீண்டும்
செய்ய அந்த
வேலைக்கு மறுநிகழ்வைச்
சேர்க்க முடியும்.
8.
Assign to: வேலைக்கு வேரொருவரை
நியமிக்க பயன்படும்.
9.
Add file: எங்களுடைய வேலைக்கு
தொடர்புபட்ட கோப்புகளை
தேவையானபோது இலகுவாக
பயன்படுத்த எதுவாக
கோப்புக்களை இணைத்துவைக்க
பயன்படும். கோப்புகள்
Local ஆகவோ
Cloud இலோ
சேமிக்கப்பட்ட கோப்பூக்களாக
இருக்கலாம் அல்லது
Cloud இல்
இருந்து Local க்கு ஒத்திசைக்கும் (Synchronization) வகையில்
அமைக்கப்பட்டிருந்தால், அதில்
இருந்து கோப்பைத்
தேர்வுசெய்யலாம்.
10.
Add Notes: வேலையைப் பற்றிய
கூடுதல் தகவல்களை
சேமித்து வைக்க
முடியும்.
11.
3: வேலையை List இல்
இருந்து நீக்க
(Delete) பயன்படும்.
Sort,
Organize, மற்றும் Color
Lists
களின் எண்ணிக்கை
அதிகரிக்கும்பொழுது அவற்றினை
இலகுவாக பிரித்தறிய
வரிசைப்படுத்தவும், ஒழுங்கமைக்கவும்,
வண்ணக் குறியீடு
செய்யவும் முடியும்.
1.
குறித்த List இனைத் தெரிவு செய்தல்
2.
மேல் வலது
மூலையில் உள்ள
மூன்று புள்ளிகளில் Click செய்யவும்.
தோன்றும் கீழ்நோக்கிய
பட்டியலில் (Dropdown List) இல் வேலைகளை வரிசைப்படுத்தலாம்,
ஒரு List இனை மற்றொன்றில் இருந்து
வேறுபடுத்த ஒரு
Theme இனை சேர்க்கலாம்.
Tasks List ஐ அச்சிடலாம்,
Tasks List ஐ மின்னஞ்சல்
செய்யலாம், Tasks List ஐ Start Menu இல் தோன்ற
செய்யலாம், அல்லது
Tasks List ஐ நீக்கலாம்.
வேலைகளை பகிர்தல்
Tasks List ஐ மற்றவர்களுடன் பகிர
முடியும், ஆனால்
ஒரு நிறுவனத்திற்குள்
அல்லது தனிப்பட்ட
Microsoft கணக்குகளுக்கு
இடையே மட்டுமே
List ஐ
பகிர முடியும்.
1.
பகிர விரும்பும்
List ஐ
திறக்கவும்.
2.
List இன்
மேல் வலது
மூலையில் உள்ள
Person Icon னைக் Click செய்யவும்.
3.
Create invitation link என்பதைக் Click செய்யவும்.
4.
Copy link என்பதைக் Click செய்யவும்.
5.
இணைப்பை Microsoft Teams அல்லது மின்னஞ்சலின்
ஊடக அனுப்பவும்
6.
இணைப்பைப் பெறுபவர்
இணைப்பைத் திறப்பதன்
மூலம் பகிரலாம்.
வேலையை அணுகுவதை முகாமை செய்தல் (Manage Access)
1.
வேலை ஒன்றினை
பகிரும் பொழுது
தோன்றும் Share List என்ற Window வில் Manage Access என்பதனை அழுத்தவும்.
2.
தோன்றும் More option என்ற window இல் Limit access to the current
members என்பதனை enable செய்வதன் மூலம்
புதிதாக அங்கத்தவர்கள்
இணைவதை கட்டுப்படுத்த
முடியும்.
3.
Stop
sharing என்பதனை அழுத்துவதன்
மூலம் பகிர்வதை
இடைநிறுத்த முடியும்.